பொது செய்தி

தமிழ்நாடு

காலை வாரிய கட்சி அரசியல்; காப்பாற்றும் காலணி விற்பனை

Added : மார் 03, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
கொளத்துார் : அ.தி.மு.க., மேலவை பிரதிநிதி, பேரூராட்சி தலைவர் என, அரசியலில் இருந்தவர், தற்போது, சந்தையில் காலணி விற்பனை செய்து வருகிறார்.சேலம் மாவட்டம், கொளத்துார், கால்நடை மருத்துவமனை வீதியை சேர்ந்தவர் பழனிசாமி, 52. அ.தி.மு.க.,வில், பேரூர் மேலவை பிரதிநிதியாக இருந்த இவர், சந்தையில் காலணி வியாபாரம் செய்வார்.கடந்த, 2011ல், அ.தி.மு.க., சார்பில் தேர்தலில் போட்டியிட்டு, கொளத்துார்
 காலை வாரிய கட்சி அரசியல்; காப்பாற்றும் காலணி விற்பனை

கொளத்துார் : அ.தி.மு.க., மேலவை பிரதிநிதி, பேரூராட்சி தலைவர் என, அரசியலில் இருந்தவர், தற்போது, சந்தையில் காலணி விற்பனை செய்து வருகிறார்.

சேலம் மாவட்டம், கொளத்துார், கால்நடை மருத்துவமனை வீதியை சேர்ந்தவர் பழனிசாமி, 52. அ.தி.மு.க.,வில், பேரூர் மேலவை பிரதிநிதியாக இருந்த இவர், சந்தையில் காலணி வியாபாரம் செய்வார்.கடந்த, 2011ல், அ.தி.மு.க., சார்பில் தேர்தலில் போட்டியிட்டு, கொளத்துார் பேரூராட்சி தலைவரானார். சில மாதங்களில், சொந்தமாக, 'ஜீப்' வாங்கி, வெள்ளை சட்டை, வேட்டியுடன், கொளத்துாரில் உலா வந்தார்.

கட்சியில், ஒருவருக்கு ஒரு பதவி மட்டும் வழங்க வேண்டும் எனக்கூறி, கட்சி மேலவை பிரதிநிதி பொறுப்பிலிருந்து, பழனிசாமி நீக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகளாக, பேரூராட்சி தலைவராக பழனிசாமி இருந்தார். பின், உள்ளாட்சி தேர்தல், தொடர்ந்து நான்கு ஆண்டாக தள்ளிப்போனது. இதனால் பாதிக்கப்பட்ட பழனிசாமி, எட்டு ஆண்டுகளுக்கு பின், கொளத்துார் சந்தையில் கடை போட்டு, காலணி விற்பனையை மீண்டும் துவங்கியுள்ளார்.

இதுகுறித்து, பழனிசாமி கூறியதாவது: பேரூராட்சி தலைவராக, ஐந்து ஆண்டுகள் இருந்து, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். அந்த திருப்தியே போதும். வேறு வருமானம் எதுவும் கிடையாது.இதனால், பழையபடி, காலணி வியாபாரத்துக்கு வந்துவிட்டேன். உள்ளாட்சி தேர்தல் வந்தால், கட்சி விரும்பும்பட்சத்தில் போட்டியிடுவேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Chennai ,இந்தியா
05-மார்-202005:53:52 IST Report Abuse
Krish உழைத்து வாழ வேண்டும். பிறர் உழைக்க வாழ்ந்திடாதே., நேர்மையாக ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் வியாபாரம் என்றால் மக்களுக்கு தீங்கு விளைவிக்காத (மது மாது போதைப் பொருள்கள்) எந்த பொருளையும் விற்பனை செய்யலாம் இழுக்கில்லை இவர் அந்த பொன்னான ஐந்தாண்டுகளை வீணடித்து விட்டவர் சீட் கிடைக்குமா?
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
04-மார்-202017:30:59 IST Report Abuse
karutthu கட்சி விரும்பியிருந்தால் உங்களை காலனியை சந்தையில் விற்க வைத்திருக்காது .செருப்புக்கடை (பேட்டா சூ கடை) வைத்து கொடுத்திருக்கும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X