சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விநாயகர் கோவில் இடித்து அகற்றம்

Added : மார் 03, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
 விநாயகர் கோவில் இடித்து அகற்றம்

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே, ஓடை புறம்போக்கில் கட்டப்பட்டிருந்த விநாயகர் கோவில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று இடித்து அகற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த, எஸ்.வி.பாளையம் கிராமத்தில், 2 சென்ட், ஓடை புறம்போக்கு நிலத்தில், 2013ல், விநாயகர் கோவில் கட்டப்பட்டது.அக்கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், தன் நிலத்திற்குச் செல்லும் வழியை மறித்து, கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்ற வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அக்கோவிலை இடித்து அகற்ற உத்தரவிட்டார்.இதையடுத்து, தாசில்தார், டி.எஸ்.பி., ஆகியோர் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், நேற்று காலை, கோவிலை அகற்ற முயன்றனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், கோவில் முன் அமர்ந்து, போராட்டம் நடத்தினர். இரு பெண்கள், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க போவதாக, மிரட்டல் விடுத்தனர்.

பேச்சில் சமரசம் ஏற்படாததால், அனைவரையும் கைது செய்து, சங்கராபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கோவில் இடித்து அகற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
07-மார்-202012:08:04 IST Report Abuse
narayanan iyer இனி அந்த ராமச்சந்திரன் எப்படி அந்த ஊரில் நடப்பார் ? அந்த வழி இடையூறாக இருப்பதாக கூறி வழி வாங்கி விட்டார் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் துணை இல்லாமல் எப்படி?விநாயகர் தான் துணை .
Rate this:
Cancel
N.G.RAMAN - MADURAI,இந்தியா
05-மார்-202016:55:24 IST Report Abuse
N.G.RAMAN ஆக்கிரமிப்பு செய்து கோவில் காட்டியது தவறுதான். அதை நியாயப்படுத்த கூடாது. இதை முன்னோடியாக கொண்டு மற்ற மதத்தினர் மற்றும் நாஸ்திகர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அந்தந்த பகுதிகளில் உள்ள இந்துக்கள் ஒன்று சேர்ந்து ஒரே நாளில் வெவ்வேறு நீதிமன்றங்களில் மற்ற மதத்தினரின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து வழக்கு தொடுக்க வேண்டும். சட்ட ரிதியாக மட்டுமே இந்துக்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
05-மார்-202016:28:30 IST Report Abuse
Endrum Indian எங்கே இந்த முஸ்லீம் மாஸ்க் / மஸ்ஜித்தை இடித்துக்காண்பியுங்கள்???நான் போகும் வழியில் (கொல்கத்தா-டால்லிகஞ்ச்) திப்பு சுல்தான் மசூதி இருக்கின்றது ரம்ஜான் மொஹரம் வந்துச்சின்னா டிராபிக் ஸ்தம்பிக்கும், எப்போ எப்போ தோணுதோ அந்த பெரும் வீதியில் ஒரே முஸ்லீம் கொண்டாட்டம் முஸ்லீம் அல்லாத மக்களுக்கு திண்டாட்டம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X