சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 03, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்: கடந்த, 1972ல், தி.மு.க.,வின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து, எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க.,வை துவக்கி, 11 ஆண்டுகள், சிறப்பான ஆட்சியை வழங்கினார். பின், இரண்டாக பிரிந்த கட்சியை, ஜெ., ஒன்றிணைத்து, நல்லாட்சி வழங்கினார். அவர் மறைவிற்கு பின், 'கட்சி உடையும்; ஆட்சி நிலைக்காது' என, பலர் கூறினர். ஆனால், இன்று நிலையான ஆட்சி நடக்கிறது. வரும், 2021ம் ஆண்டு தேர்தலிலும், எங்களது ஆட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

'டவுட்' தனபாலு: எம்.ஜி.ஆர்., நல்லாட்சி வழங்கினார் என்பது சரி தான். ஆனால், ஜெ., இரண்டு முறை, தி.மு.க.,விடம் தோல்வி கண்டுள்ளாரே... அவரே தோல்வி அடைந்துள்ள நிலையில், இ.பி.எஸ்., அரசு எம்மாத்திரம் என, தி.மு.க.,வினர் கூறுகின்றனரே; அது உங்களுக்கு கேட்பதில்லையோ என்பதே, என், 'டவுட்' ஆக உள்ளது.

த.மா.கா., தலைவர் வாசன்: பார்லிமென்டில், மசோதா குறித்து, ஏதேனும் சந்தேகம் இருப்பின், கேள்வி எழுப்பலாம்; பதிலை பெறலாம். அதை விடுத்து, மசோதாவை தாக்கல் செய்யும் போது, கூச்சலிடுவதும், குழப்பத்தை ஏற்படுத்துவதும் சரியல்ல. மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு, தமிழக எம்.பி.,க்கள் குரல் கொடுத்து, மாநில நலன் காக்கவும், முன்னேற்றம் அடையவும் வழி வகுக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: பா.ஜ.,வில் அங்கம் வகித்த, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா துணை தலைவர் வெங்கையா நாயுடு போன்றோர் கூட, இப்படி கண்டித்திருக்க மாட்டார்கள். காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்த நீங்கள், பா.ஜ.,வுக்கு ஆதரவாக மாறி இருப்பது, அப்பட்டமாக தெரிகிறது. இப்படி பேசினால் தான், ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்கும் என, அ.தி.மு.க.,வில் யாரும் கூறினரோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறதே!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: வேலைநிறுத்தம் செய்த அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்; அதை, சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மூத்த டாக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்யும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும்.

'டவுட்' தனபாலு: மீண்டும் போராட்டம் நடத்தினால், அப்பாவி மக்கள் மீண்டும் பாதிக்கப்படுவர் என்பதற்காகவும், அரசு டாக்டர்களை எச்சரிக்கவும், இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்கலாம். ஆனால், உங்களின் அறிக்கை, போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக உள்ளதே. நீங்களும் அவர்களை போல, மருத்துவம் படித்த, உண்மையான டாக்டர் என்பதால் தான், இந்த சகோதர பாசமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறதே!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Chennai ,இந்தியா
04-மார்-202004:47:09 IST Report Abuse
Krish மருத்துவர்களின் இடமாற்றம் பற்றிய டவுட் ரொம்ப சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X