சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

பன்றி சாப்பிட வேண்டாமே!

Added : மார் 03, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
பன்றி சாப்பிட வேண்டாமே!

எஸ்.ஏ.அமீர்அலி, கிள்ளை, சிதம்பரம் தாலுகாவிலிருந்து எழுதுகிறார்: பன்றிக் கறியில், மனிதனுக்கு கேடு செய்யும் நாடாப்புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன. எவ்வளவு உச்ச வெப்பத்திலும், இந்தப் புழுக்கள் சாவதில்லை. மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், இதய வீக்கம் உள்ளிட்ட, 66 நோய்கள் பன்றி இறைச்சியை உண்பதால் ஏற்படுவதை, மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.

பன்றியை உணவாக உட்கொள்ளும் ஐரோப்பியாவில் இதய வீக்கம் உள்ளோர், மற்ற நாடுகளை விட, 5 மடங்கு அதிகம் உள்ளனர். ஆடில், 17 கிராம்; மாடில், 5 கிராம் மட்டுமே கொழுப்பு உள்ளது. ஆனால், 100 கிராம் பன்றிக் கறியில், 50 கிராம் கொழுப்பு உள்ளது; அதனால் பன்றிக் கறி, மனிதனுக்கு கேடு தான். அண்டை நாடான சீனாவில், 'கொரோனா' வைரசால் மக்கள் பாதிக்கப்பட்டு, பலி எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடி இருக்கிறது.

இதுவரை, 3,000 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வைரசை கண்டுபிடித்த டாக்டரே, உயிர் இழந்து விட்டார். ஒரு மருத்துவ இயக்குனரும், ஆறு மருத்துவ பணியாளர்களும், இந்த நோயினால் உயிர் இழந்துள்ளதை அறியும்போது, இதன் கடுமை எப்படி இருக்கும் என்பது தெரிகிறது. சீனாவில் வசிக்கும் இந்தியர்களும், இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாணவ--- --- மாணவியர் மருத்துவ படிப்புக்கு, சீனா செல்கின்றனர். இதற்கு காரணம், கை நிறைய சம்பாதிக்க வேண்டும், வீடு, பங்களா, கார் என வாங்கி தங்களின் கனவுகளை நனவாக்கி, சொகுசாக வாழலாம் என்ற ஆசை தான்.

ஆனால், சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பன்றி, பாம்பு, தவளை, நாய், பூனை, சிறிய முதலைகள், எறும்பு தின்னி, புனுகுப்பூனை, வவ்வால் போன்றவைகளை விரும்பி உண்கின்றனர்; அதை நினைக்கும்போதே, அறுவறுப்பாக உள்ளது. அப்படிப்பட்ட நாடுகளுக்கு போவதை விட, அரபு நாடுகளுக்கு போகலாமே! தற்போது, சீனாவில் இறைச்சிக் கூடங்களுக்கு கட்டுப்பாடு அறிவித்துள்ளனராம்! கேடு விளைவிக்கும் உயிரினங்களை தின்றால், மனிதனுக்கு நோய்கள் தான் ஏற்படும்; எளிதில், உயிர் பிழைக்கவே முடியாது!


இது தான் சாமானியனின் எதிர்பார்ப்பு!


ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், தலைவர், மாவட்ட தொழில் வர்த்தக சங்கம், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சபாநாயகர், நடுநிலையோடு செயல்பட வேண்டுமென்பதே, மக்கள் விருப்பம். 'சட்டசபைக்குள் நடைபெறும் நிகழ்வுகளை எதிர்த்து, நீதிமன்றங்களில் முறையிட முடியாது' என, அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. அதாவது, 'சபைக்குள் நடக்கும் அனைத்தையும், கண்காணிக்கும் பொறுப்புரிமை' சபாநாயகருக்கு மட்டுமே உண்டு.

தமிழக சட்டசபையில், அரசு கொறடா உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், ௧௮ பேரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார், சபாநாயகர். அதே தவறை, மற்றொரு சந்தர்ப்பத்தில் செய்த, இந்நாள் துணை முதல்வராக இருக்கும், ஓ.பி.எஸ்., உள்ளிட்ட, ௧௧ பேரை மட்டும் கவனத்தில் கொள்ளவில்லை. மூன்று ஆண்டுகளாக, அவர்கள் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்ட சபாநாயகரின் போக்கு, நடுநிலையாளர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த அளவுகோலை வைத்து சபாநாயகர், ௧௮ பேர் மீது நடவடிக்கை எடுத்தாரோ, அதே அளவுகோல் படி, ௧௧ நபர்கள் மீதும், தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்பதை, நீதிமன்ற தீர்ப்புகள் ஊர்ஜிதம் செய்கின்றன. அதே வேளையில், 'நீதிக்கு முன், அனைவரும் சமம்' என, அரசியலைமைப்பு சட்டத்தில், அடிப்படை உரிமைகள் என்ற தலைப்பில், விதி ௧௪ல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது; இதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம், தற்போது ஏற்பட்டுள்ளது.

சபாநாயகர் ஆய்வில், 11 எம்.எல்.ஏ.,க்களின் முடிவு, மூன்று ஆண்டுகளாக நீதிமன்றங்கள் விசாரணையிலேயே கழிந்து விட்டது. இன்னும், ஓராண்டு பாக்கி உள்ளது. அதற்கு பின், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியமே எழாது. சட்டசபையின் பதவி காலமும் முடிந்து விடும். வானளாவிய அதிகாரத்தை சபாநாயகர், நடுநிலையோடு செயல்படுத்துகிறாரா என்பது தான், சிந்தனையாளர்கள் முன், எழும் கேள்வி. எந்த ஒரு சட்டமாக இருந்தாலும், அவை அனைத்தும் மனசாட்சியை மிஞ்சியதாக, ஒருபோதும் இருக்க முடியாது. 'நீதி மற்றும் நடுநிலை தவறாமல், சபாநாயகர் நடந்து கொள்ளவேண்டும்' என்பதே சாமானியனின் எதிர்பார்ப்பு!
இவர்களை துண்டித்து தண்டிக்கலாமே!

எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய- - மாநில அரசு

குடியிருப்புகளில், அரசுக்கு சம்பந்தம் இல்லாதோர், குடியிருந்தபடி தான் இருக்கின்றனர்.டில்லியில் உள்ள அரசு குடியிருப்புகளில், 550க்கும் அதிகமான ஓய்வு பெற்ற அதிகாரிகள், சட்ட விரோதமாக தங்கி இருக்கிறார்களாம்! இதுபோன்று, அரசு குடியிருப்புகளில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மட்டுமல்ல; முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் லோக்சபா உறுப்பினர்கள் பலரும் கூட, பதவி பறிபோன பிறகும், குடியிருப்பை காலி செய்து கொடுக்காமல், தொடர்ந்து குடியிருந்து வருகின்றனர்.

அரசு குடியிருப்பில் வசிப்போர், அரசு அலுவலரோ அல்லது அதிகாரியோ இருந்தாலும், அவர்கள் ஓய்வு பெறும் போது, குடியிருப்பை முறையாக காலி செய்து ஒப்படைக்க வேண்டும். அதன்பின், அவர்களுக்கு சேர வேண்டிய, பணப் பயன்களையும், பென்ஷனையும் கொடுக்க வேண்டும்.அரசு குடியிருப்புகளை காலி செய்யாத, முன்னாள் அமைச்சர்கள், லோக்சபா மற்றும் - சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, 'ஷாக் டிரீட்மென்ட்' அளித்தாக வேண்டும்.

அவர்களின் பதவி பறிபோன தகவல் கிடைத்தவுடன், அவர்கள் வசிக்கும் குடியிருப்பின், மின் இணைப்பையும், தண்ணீர் வினியோகத்தையும் உடனே நிறுத்தினால் போதும். அடுத்த நாளே, 'துண்டைக் காணோம்; துணியைக் காணோம்' என, குடியிருப்பை காலி செய்து, அலறி அடித்து ஓடுவர். மனிதாபிமானத்தை காட்ட வேண்டிய இடத்தில் மட்டும், காட்டினால் போதும். அரசு குடியிருப்பை ஆக்கிரமித்து கொண்டிருப்போரிடம், மனிதாபிமானம் எல்லாம் காட்டக்கூடாது; அதிரடி நடவடிக்கைகள் உடனடியாக எடுத்தாக வேண்டும்!

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
04-மார்-202012:41:06 IST Report Abuse
Dr. Suriya "ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், தலைவர், மாவட்ட தொழில் வர்த்தக சங்கம், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்": நீங்கள் கூறிய கருத்திலேயே உங்களுக்கு பதில் உள்ளது அன்வர்தீன்..... கட்சி கொறடா நடவடிக்கை எடுக்க சொல்லி சபாநாயகரிடம் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்... அனால் அதிமுக கட்சி கொறடா நடவடிக்கை எடுக்க சொல்லி சபாநாயகரிடம் மனு கொடுக்கவில்லை மாறாக திமுக தான் கொடுத்து உள்ளது .... சபாநாயகர் அதை தள்ளுபடி செய்ய அதிகாரம் உள்ளது....
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
04-மார்-202011:54:42 IST Report Abuse
karutthu சபாநாயகர்கள் ஆளும்கட்சியை சார்ந்திருப்பதால் இப்படித்தான் இருக்கும் ஆதலால் ஒரு.............
Rate this:
Cancel
sadasivan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-மார்-202010:49:40 IST Report Abuse
sadasivan அதேப்போல் "ஹலால்" கறி சாப்பிடாதீர்கள். மாட்டுக்கறியும் சாப்பிடாதீர்கள். ஹலால் முறையில் ஒரு உயிரியை வெட்டும்போது அது படிப்படியாக கொல்லப்படுவதால் உயிர்களின் இயல்பான தற்காத்துக் கொள்ளல் அடிப்படையில் நஞ்சை அந்த உயிரி பரப்புகிறது. அந்த விஷம் கலந்த இறைச்சியைத் தான் ஹலால் கறி மூலம் சாப்பிடுகிறார்கள். ஹலால் தவிர்ப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X