சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீன் பிரியர்களை மிரட்டும் 'பார்மலின்'; ரசாயனத்தால் புற்றுநோய் அபாயம்

Updated : மார் 03, 2020 | Added : மார் 03, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
fish,formalin,cancer,fish_market,மீன்,பார்மலின்,புற்றுநோய்

மதுரை : கலப்படம் எதைத்தான் விட்டு வைத்தது... மற்ற அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம் என அஞ்சி, மீன் பக்கம் மக்கள் நகர்ந்தால், அங்கு எமன் வடிவில், பாசக்கயிற்றுடன் ரசாயன கலப்படம், கங்கணம் கட்டி காத்திருக்கிறது.

சமீபத்தில், மதுரை கரிமேடு மீன் மார்க்கெட்டில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க, சடலங்களுக்கு பயன்படுத்தப்படும், 'பார்மலின்' என்ற ரசாயனத்தை உபயோகிப்பது தெரியவந்தது.


கடல் உணவுகள்


அதிரடி சோதனை நடத்தி, பார்மலின் கலந்த, 2,000 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். மீன்களுக்கு மட்டுமின்றி, நண்டு, இறால் உள்ளிட்ட அனைத்து கடல் உணவுகளிலும், பார்மலின் பயன்படுத்துவது தெரிந்தது.'பார்மலினை சாதாரண ரசாயனமாக கருதிவிட முடியாது. இது, மனிதனை மெல்லக் கொல்லும் விஷம். இதை கலந்த கடல் உணவுகளை தொடர்ந்து உண்டால், உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கும். ஒரு கட்டத்தில், புற்றுநோய் தாக்கி மரணம் கூட நிகழும்' என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.


latest tamil news'பார்மலின் புற்றுநோயை ஏற்படுத்தும்' என, 2011ம் ஆண்டே அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று ஆதாரத்துடன் தெரிவித்தது. அதன்பின், பல துறைகளில் பார்மலின் பயன்பாடு அடியோடு நிறுத்தப்பட்டது. மதுரை கரிமேடு மார்க்கெட்டுக்கு வந்த மீன்கள், தமிழகத்தில் மட்டும் பிடிக்கப்பட்டவை அல்ல. கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை. மதுரைக்கு மட்டுமல்ல; தமிழகம் முழுக்க இதே கதிதான்.

நம் மாநிலத்தில், மீன் சந்தை அதீத வளர்ச்சி அடைவதை சாதகமாக்கி, அண்டை மாநில மீன் வியாபாரிகள், தங்கள் கலப்பட மீன்களை இங்கு தள்ளி, 'கல்லா' கட்டும் படுபாதக செயலில் களம் இறங்கியுள்ளனர். ஏனெனில், கேரளாவில் விழிப்புணர்வு பெற்ற பொதுமக்கள், பார்மலின் பயன்படுத்திய மீனை அடையாளம் கண்டு வாங்குவது இல்லை. சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் சென்ற ரசாயனமிட்ட மீன் லாரிகளை, கேரள அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த ரசாயன சேர்ப்பை, தமிழக அரசு சாதாரணமாக கருதிவிடக் கூடாது. மதுரை உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் ஆய்வு, மாநிலத்திற்கான எச்சரிக்கை மணி. பார்மலின் இல்லாத தரமான மீன்கள் விற்பனையை, தொடர் சோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். உயிரோடு விளையாடும் பார்மலினை அடியோடு விரட்ட மீன்வளம், உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


latest tamil news
தொடர் கண்காணிப்பு அவசியம்


வெறுமனே மீன் மார்க்கெட்களில் மட்டும் சோதனை நடத்துவது பலன் தராது. வெளிமாநில மீன்களை நம் மாநில எல்லைகளிலும், தமிழக மீன்களை கடலோரத்திலும் ஆய்வு செய்ய வேண்டும். பார்மலின் சேர்க்கப்படவில்லை என்பதை அங்கேயே உறுதிப்படுத்த வேண்டும். பின், சந்தையில் பரிசோதிக்கலாம். அதை விடுத்து, சந்தைக்கு வந்தபின் தான் ஆய்வு என்றால், தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாகி விடும்.

பிற இறைச்சிக்கு மாற்றாக மீன்களை டாக்டர்கள் பரிந்துரைக்கும் இக்காலத்தில், கடல் உணவில் ரசாயன கலப்படம் என்பதை ஏற்க முடியாது. பணத்திற்காக, மக்களின் உயிரை விலை பேசுவோர், சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து தப்பிவிடக் கூடாது.


latest tamil news
ஐஸ் கட்டியில், 'பார்மலின்'உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது தரமான மீன்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. கடலோரம் பிடித்து உடனே விற்கும் மீன்களால், தீங்கு இல்லை. ஆனால், நடுக்கடலுக்கு சென்று, பல நாட்கள் தங்கி திரும்பும் மீனவர்கள், கெடாமல் இருக்கவும், மீன்களில் பார்மலினை சேர்க்கின்றனர்.

மீன்களை பிடிக்கும் இடங்களிலேயே, பார்மலின் கலந்து தான் பெட்டியில் அடுக்குகின்றனர். வியாபாரிகளும் இந்த யுக்தியை கையாளுகின்றனர். சில வியாபாரிகள், மீன்களை பாதுகாக்க பயன்படுத்தும் ஐஸ் கட்டியையே, பார்மலின் கலந்த நீரில் தான் தயாரிக்கின்றனர். இதை உடனடியாக தடுப்பது கடினம். மாநில அளவில், பல துறைகளின் உதவியோடு தான் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மார்-202013:24:20 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் கலப்படம் செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும்
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
06-மார்-202001:55:15 IST Report Abuse
Rajeshமிஞ்சிப்போனால் ஏழை வியாபாரியை பிடித்து மரண தண்டனை கொடுப்பார்கள் அவ்வளவுதான்....
Rate this:
Cancel
Kadambur Srinivasan - Chennai,இந்தியா
04-மார்-202013:18:18 IST Report Abuse
Kadambur Srinivasan உணவு கலப்பிடதிருக்கு கடுமையான சட்டம் தேவை
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
04-மார்-202012:35:40 IST Report Abuse
Ashanmugam இது குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப், மெயில் மூலம் ஒரு வருடத்திற்கு முன்,வேலூர் மாவட்டத்தை முழுவதும் மீன் வியாபாரி கடைகளை சோதனை செய்ய அபாய சங்கை ஊதினேன். அது செவிடன் காதில் ஊதினதுபோல் கண்டு கொள்ளவில்லை. காரணம் என்னவென்றால் இவர்கள் வீட்டுக்கு இலவசமாக பிரஷ் மீன்கள் வந்துவிடும். மேலும் போனஸ் தொகையும் மாதாமாதம் வந்து விடும். ஆதலால், இவர்களுக்கு இவங்க குடும்பம்தான் முக்கியம். பொது மக்கள் செத்தால் என்ன?, பிழைத்தால் என்ன?, கேன்ஸர் நோய் வந்தால் என்ன?, வராவிட்டால் என்ன?.ஆக பொது மக்கள் காசு கொடுத்து மீன் வாங்கி உண்டு கேன்ஸர் நோயில் சாகனும். மீன் வியாபாரி கோடிகணக்கில் "பார்மலின்" மீனை விற்று, வருமான வரியே கட்டாமல், அரசாங்கத்தை ஏமாற்றி சுக போக வாழ்க்கை வாழ்கின்றனர். இதற்கு தமிழ்நாட்டில் மீன்வளத்துறை நிர்வாகமும், அமைச்சரும் ஒரு சாபக்கேடு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X