கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அறநிலைய துறை அதிகாரிகள் 'ஹிந்து' உறுதிமொழி எடுக்க உத்தரவு

Updated : மார் 04, 2020 | Added : மார் 04, 2020 | கருத்துகள் (75)
Share
Advertisement
Hindu,HighCourt,order,HC,ஹிந்து,உறுதிமொழி,உத்தரவு

சென்னை : 'ஹிந்து சமய அறநிலைய துறையில், ஆணையர் வரையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும், எட்டு வாரங்களில், ஹிந்து மதத்தை பின்பற்றுவதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்த மனு: அறநிலைய துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரம் கோவில்கள் உள்ளன. ஹிந்து சமய அறநிலைய துறை சட்டத்தின்படி, அறநிலைய துறையில் பணியாற்றும் ஆணையர், இணை, துணை, உதவி ஆணையர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஹிந்து மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.

சட்டம் மற்றும் விதிகளின்படி, அறநிலைய துறையில் நியமிக்கப்படுபவர்கள், அதற்கான உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட வேண்டும். கோவில் நிர்வாக அதிகாரி அல்லது அறங்காவலர்கள் குழு தலைவர் முன்னிலையில், சாமி சிலை முன், உறுதிமொழி எடுக்க வேண்டும். அதற்கான, இரண்டு சாட்சிகளும் இருக்க வேண்டும்.எனவே, இந்த சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டவர்கள், பிறப்பால் ஹிந்துவா, ஹிந்து மதத்தை பின்பற்றுகின்றனரா என்பதை சரிபார்க்க வேண்டும்.


latest tamil newsஇது குறித்து, அறநிலைய துறையிடம் கேட்டபோது, பதில் இல்லை. அதனால், 'ஹிந்து' என, உறுதிமொழி எடுக்காதவர்களை, பதவியில் இருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அறநிலைய துறை சார்பில், சிறப்பு பிளீடர் கார்த்திகேயன் ஆஜரானார். அறநிலைய துறை ஆணையர் வரையிலான பதவிகளை வகிப்பவர்கள், எட்டு வாரங்களில் உறுதிமொழி எடுப்பதை, அரசு உறுதி செய்யும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Ramkumar - Tiruvarur,இந்தியா
04-மார்-202018:20:31 IST Report Abuse
S Ramkumar இல்லை. மற்ற மதத்தினர் முக்கியமாக இந்து பெயரில் உலா வரும் கிருத்துவ நாய்கள் முதலில் வெளியேற வேண்டும்.
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
04-மார்-202020:33:39 IST Report Abuse
Nallavan Nallavanநீங்கள் கையாளும் வார்த்தைகள் மதமாற்றத்தை நியாயப்படுத்திவிடக் கூடாது ......
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
04-மார்-202016:42:26 IST Report Abuse
S.Baliah Seer 1959 தமிழ் நாடு இந்து அறநிலைய துறை தமிழ்நாடு சட்டம் 22 பிரிவு 10 -இன் கீழ் இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே அறநிலைய துறை அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட வேண்டும்.அப்படியானால் இந்து அல்லாதவர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பின் உயர் நீதி மன்றத்தில் வழக்குப்போட்டிருப்பவர் அவர்களை அடையாளம் காட்டலாமே.கர்ணன் பொய் சொன்னதால் பரசுராமன் சாபம் பலித்ததாம்.இது பொய் சொல்வதையே முழு நேர தொழிலாகக் கொண்டிருக்கும் காலம்.நீதி மன்ற உத்தரவு பலிக்கிறதா பார்ப்போம்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
04-மார்-202016:40:37 IST Report Abuse
Endrum Indian சன சேவை என்று எம் எல் ஏ எம் பி உறுதி மொழி எடுத்த தத்திகள்???? என்ன செய்கின்றார்கள். இந்த ஆணையில் இப்படி மாற்றம் இருந்திருக்கவேண்டும். 1)இந்து அறநிலையத்துறை பணிக்கு வருபவர்கள் இந்துவாக மட்டுமே இருக்க வேண்டும் 2)அவர்கள் முஸ்லிம்களாகவோ கிறித்துவர்களாகவோ திராவிட கட்சி அங்கத்தினர்களாகவோ இருக்கவே கூடாது. எங்கே கோர்ட் இப்படி தீர்ப்பை வழங்கு பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X