அபூர்வ ஆலயம் அகஸ்தீஸ்வரர்.

Updated : மார் 04, 2020 | Added : மார் 04, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement



latest tamil news



அகஸ்தீஸ்வரர் கோயில்.
அபூர்வ சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் வரலாற்றையும் தன்னகத்தே கொண்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அபூர்வ ஆலயம் அது.


latest tamil news


அரியலுார் மாவட்டம் அரியலுார் தாலுாகா கீழையூர் கிராமத்தில் உள்ள மேலப்பழுவூரில் இருக்கிறது இந்த சிவன் கோயில்.அரியலுாரில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் 20 வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.


latest tamil news


Advertisement

கிழப்பழுவூரில் உள்ள பிரபலமான பாடல் பெற்ற ஸ்தலமான ஆலந்துரையார் கோவிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது.பஸ் வசதி உண்டு.


latest tamil news


சோழ அரசர்களாகிய முதலாம் ஆதித்யன் முதல், முதலாம் இராஜேந்திர சோழன் வரையிலான இவர்களது காலங்களில் கேரளாவிலிருந்து வந்த பழுவேட்டரையர்கள், சிற்றரசர்களாக இருந்து இக்கிராமத்தை தலைநகராகக் கொண்டு அரியலூர் பகுதியை ஆண்டு வந்தனர்.


latest tamil news


அவணி கந்தர்வ ஈஸ்வரம் என அழைக்கப்பட்ட கீழையூரில் முதலாம் ஆதித்யா மன்னனின் 13 ஆவது வயதில் கி.பி 884 ஆம் ஆண்டு குமரன் கந்தன் பழுவேட்டரையரால் சிவன் கோவில் கட்டப்பட்டது. சோழர் கால கோவில்களில் ஒன்றான இந்த கோவில் மிகச் சிறந்த கல் கோவில்களில் ஒன்று. அழகான சிற்பங்களை வரிசையாகக் கொண்டு வெவ்வேறு கட்டிடக்கலை முறையில் இருக்கிறது.


latest tamil news



கல்கியின் பொன்னியின் செல்வனை வாசித்த எவருக்கும் வாழ்நாளில் மறக்கவே முடியாத பெயர் பழுவேட்டரையர். இவர்களின் புகழுக்கு, சோழர்களின் கட்டடக்கலைக்கு நிகராக விளங்கும் வகையில் பழுவேட்டரையர்கள் எழுப்பிய கோயில்களே காட்சி அதற்கு இந்த அகஸ்தீஸ்வரம் கோயிலே சாட்சி.


latest tamil news


பாகுபலியை நினைவுபடுத்தும் வகையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சிவனே சிவனை சுமப்பது போன்ற காட்சியும்,அனகோண்டாவை நினைவு படுத்தும் விதத்தில் மிகப்பெரிய மிருகங்களை விழுங்கும் பாம்பும்,மாசு மருவற்ற பழமையான சிற்பங்களும்,பல்லியை வைத்து விளையாடும் பூதகணங்களும் என்று கல்கோவிலைச் சுற்றி சுற்றி பல கலையம்சங்கள் நிறைந்துள்ளன.


latest tamil news


இந்த கோவிலின் சிறப்பு கருதி தமிழக அரசின் தொல்பொருள் துறை இதனை நினைவுச்சின்னமாக பாதுகாத்து வருகிறது இதுதான் இந்தக் கோயிலுக்கு கிடைத்த சாதகமாக ஒரு பக்கம் கருதப்பட்டாலும் இன்னோரு பக்கம் இதுவே பாதகமாகவும் விளங்குகிறது.
பாதுகாக்கப்பட்ட சின்னம் என்றாலே அது உயிரோட்டமற்ற கட்டிடம் என்றே பொதுமக்களும் பக்தர்களும் கருதி அந்த வழியாக கடந்து சென்று விடுகிறார்களே தவிர இது உயிரோட்டமான நாள் தவறாமல் பூஜை நடைபெறும் சிவன் கோயில் என்பது பலருக்கு தெரிவது இல்லை.
இத்தனைக்கும் இந்தக் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலும் வருகிறது ஆனால் வருமானம் இல்லாத கோவிலுக்கு செலவழிக்க வழியில்லை போலும் அவர்களும் செய்வதறியாது இருக்கின்றனர்.
இவ்வளவிற்கு நடுவிலும் இந்தக் கோவிலில் அர்ச்சகராக செயல்படும் குமாரசாமி குருக்களை பாராட்டியே ஆகவேண்டும்.எதையுமே எதிர்பார்க்காமல் அகஸ்தீஸ்வரரையும் அபிதாகுஜாம்பிகை அம்பாளையும் தனது தாயும் தந்தையுமாக போற்றி வருகிறார்.சிவனின் திருமேனி தொட்டு பூஜை செய்யும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும் அதற்கு முன் எதுவுமே பெரிதில்லை என்றே கருதுபவர்.
ஜோசியம் பார்ப்பதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து கோவிலுக்கும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறார்.கோவில் வளாகத்தை சுற்றி பூ மரங்களை நட்டு நந்தவனமாக்கி வைத்துள்ளார் கோவிலுக்கு வந்து சிவனின் அருளால் வேண்டியது கிடைக்கப் பெற்றவர்கள் நன்றியோடு வரும்போது கோயிலுக்கு செய்யுங்கள் என்று சொல்லி கோயிலை மெருகேற்றுபவர்.
அமைதியான இடத்தில் இருந்து சிவன் அருளாட்சி செய்யும் பழமையான பெருமையான இந்தக் கோவிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள் நீங்கள் நலம் பெறுவீர்கள் கோவில் வளம் பெறும்.
கோவில் பற்றிய மேலும் விவரங்களுக்கு திரு.குமாரசாமியை தொடர்புகொள்ளவும் அவரது எண்:9688047998.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
22-மார்-202004:18:02 IST Report Abuse
meenakshisundaram இதே போல நெல்லையில் சேரன்மாதேவியில் 'கோதண்டராமர் 'கோவிலும் புராதனமானதே ,கவனத்தில் கொள்ளவேண்டிய கோவிலாகும் ,அதை சில வருடங்களுக்கு முன்னர் சென்று paratha போது சிறிதே ஊனமுற்ற இளம் வயது ஆச்சாரியார் தனியே சேவை செயது வந்தது நினைவுக்கு வந்தது.அரசாங்கத்தின் கவனம் திரும்ப வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X