இறந்தும் வாழும் கனிமொழி

Updated : மார் 04, 2020 | Added : மார் 04, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement




latest tamil news


கனிமொழி
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த ஒய்வு பெற்ற அரசு ஊழியர் இளங்கோ என்பவரின் மகள்.
சிறந்த படிப்பாளி தொல்பொருள் துறையில் ஆர்வம் கொண்டவர் நேர்மையாக இருப்பதும் எளிமையாக வாழ்வதும் இவருக்கு பிடித்த விஷயம்.லஞ்சம் என்ற வார்த்தையைக் கூட வெறுப்பவர்.
தான் பிறந்த வீட்டிற்கும் ஊருக்கும் கவுரவத்தை தேடிக்கொடுத்தவர்.தஞ்சை தமிழ்ப் பல்கழகத்தில் கவுரவ பேராசிரியையாக வேலை பார்தது வந்தார்.கடந்த 27 ந்தேதி பணி முடித்து பேருந்தில் ஏறுவதற்காக ரோட்டை கடந்து வந்தவர் கார் மோதி படுகாயமடைந்தார்.


latest tamil news



உடனடியாக தஞ்சையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் தீவிர சிகிச்சையும் வழங்கப்பட்டது ஆனால் உடல் நிலை தேறவில்லை மூளைச்சாவு நிலையை அடைந்தார்.
சோகம் கப்பிய மனதோடு விஷயத்தை உறவினர்களிடம் டாக்டர்கள் தெரியப்படுத்தினர் அந்த வேதனையிலும் கனிமொழியின் அண்ணன் சதிஷ்குமார் உள்ளீட்டோர் ஒரு முடிவு எடுத்தனர்.அந்த முடிவு கனிமொழியின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்று.
அதன்படி அவரது ஒரு சீறுநீரகம் தஞ்சைக்கும் இன்னோரு சீறுநீரகம் திருச்சிக்கும் இதயமும் நுரையீரலும் சென்னைக்கும் கல்லீரல் மதுரைக்கும் கண்கள் தஞ்சை பொது மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.
நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எப்போதும் தியாக சிந்தனையுடனேயே வளர்ந்த கனிமொழி தன் படிப்பால் பதவியால் ஆற்றலால் நாலு பேருக்கு இருந்து உதவி செய்வார் என்று எண்ணினோம் ஆனால் இறந்து ஏழு பேருக்கு உதவி செய்துள்ளார் என்ற அவரது உறவினர்கள் அனைவரது கண்களிலும் கண்ணீர்.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasan - doha,கத்தார்
05-மார்-202019:41:46 IST Report Abuse
vasan உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் சகோதரி.............
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
05-மார்-202002:32:29 IST Report Abuse
 nicolethomson வேதனையா இருக்கு சகோதரி இறந்தும் இறவா பேற்றை பெற்றாய் தோழி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X