சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'பா.ஜ.,வை நெருங்கிட்டாரோ தினகரன்!'

Added : மார் 04, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'பா.ஜ.,வை நெருங்கிட்டாரோ தினகரன்!'

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டிற்கு வந்தார்.
அப்போது, நிருபர்களிடம் அவர், 'தன்னை, ஒரு விவசாயி என, சொல்லிக் கொள்கிறார், தமிழக
முதல்வர். பதவிக்கு வந்த மூன்று ஆண்டுகளாக, அந்த விவசாயி துாங்கிக் கொண்டிருந்தாரா?' என்றார். அவரிடம் விடாமல் நிருபர் ஒருவர், 'சிறுபான்மையினரின் பாதுகாவலன் எனச்
சொல்லும், தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு, ஒரு சிறுபான்மையினரைக் கூட
வேட்பாளராக நிறுத்தவில்லையே?' எனக் கேட்டார்.

அதற்கு, 'மக்களை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும், பிள்ளையார் சுழி போடுவது, தி.மு.க., தான்.
2003ல், சி.ஏ.ஏ., திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, அதை, தி.மு.க., தான் ஆதரித்தது. தற்போது, தாங்கள் செய்த தவறை மறைக்க, சிறுபான்மையினருக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகின்றனர். மக்களை ஏமாற்றும் தவறான நடவடிக்கை தான், இது' என, தினகரன் பதிலளித்தார்.
மூத்த நிருபர் ஒருவர், 'முதல் பாதி அ.தி.மு.க., வையும், மறுபாதி, தி.மு.க.,வையும் தாக்கி
பேசுகிறாரே... ஆனா, பா.ஜ.,வை ஒரு வார்த்தை கூட தாக்கி பேசாததைப் பார்த்தா, அவங்க கூட
நெருங்கிட்டா மாதிரி தெரியுதே...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் சிரித்தபடி நடையை
கட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
08-மார்-202012:10:30 IST Report Abuse
karutthu இந்த ஆளு பா ஜ க வை பகைத்துக்கொண்டால் பழைய குப்பையை கிளறி திஹார் சிறையில் மீண்டும் களி திங்க வைத்து விடுவார்களோ என பயம் கூட இருக்கலாம்
Rate this:
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
05-மார்-202003:46:43 IST Report Abuse
Abdul Rahman இவெனெல்லா ஒரு ஆளு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X