சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 04, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை கைப்பற்ற, மத்திய தொல்லியல் துறை முயற்சி மேற்கொள்கிறது. தமிழக மக்களின் உணர்வை மீறி, மாநில உரிமையை நசுக்கும் விதமாக, திருக்கோவில்களையும், நினைவுச் சின்னங்களையும் கைப்பற்றி, தமிழர்களின் நாகரிகத்தை, கலாசாரத்தை அழிக்க, மத்திய அரசு முயற்சித்தால், அதை எதிர்த்து, தி.மு.க., சார்பில், மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

'டவுட்' தனபாலு: தமிழக அரசின் அறநிலையத் துறையின் பிடியில் சிக்கியுள்ள தமிழக கோவில்களில் பூஜை நடக்கிறதா; கோவில் சொத்துகள் இருக்கின்றனவா என, துளியும்
கவலைப்படாத நீங்கள், மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் சில கோவில்கள் வர உள்ளன என்றதும், கடுமையாக எதிர்க்கிறீர்களே... சமீப காலமாக, ஹிந்துக்களுக்கு ஆதரவாக நீங்களும், உங்கள் கட்சியினரும் குரல் கொடுத்து வருவது, சட்டசபை தேர்தல் நெருங்குகிறது என்பதை, 'டவுட்' இல்லாமல் புரிய வைக்கிறது.

பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா: கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு, பட்டா வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு, பட்டா கொடுப்பது, ஹிந்து மத நடவடிக்கைகளை முடக்கும் செயலாக அமையும். இது, அ.தி.மு.க., அரசை, ஹிந்து விரோத அரசாக காண்பிக்க, சில அதிகாரிகள் செய்யும் முயற்சி; தமிழக அரசு பலியாக
வேண்டாம்.

'டவுட்' தனபாலு: கோவில் நிலங்களை பிறருக்கு பட்டா போட்டுக் கொடுக்கக் கூடாது என்கிறீர்களா அல்லது உங்களின் ஆதரவு பெற்ற, இ.பி.எஸ்., அரசுக்கு அதனால், அவப்பெயர் வந்து விடும் என்கிறீர்களா என்ற, 'டவுட்'டை உங்கள் அறிக்கை கிளப்புகிறது. யார் ஆட்சியாக இருந்தால் என்ன, 'கோவில் நிலம், கோவிலுக்கே' என, அடித்து சொல்ல வேண்டியது தானே!

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஓராண்டு தான் உள்ளது. எனவே, அரசு திட்டங்களை, நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். எதிரிகள், நம்மை பற்றி விமர்சனம் செய்யும்போது, நாகரிகமான முறையில் பதில் அளிக்க வேண்டும். எதிரிகள்
வேண்டுமென்றே, பொய் பிரசாரம் செய்கின்றனர்; அதை முறியடிக்க வேண்டியது நம் கடமை.

'டவுட்' தனபாலு: அ.தி.மு.க., பேச்சாளர்களுக்கு எவ்வளவு தான் நீங்கள் பயிற்சி, அறிவுரை அளித்தாலும், தமிழக வாக்காளர்களில் பெரும்பாலானோர் எண்ணத்தில், 'வைட்டமின், 'ப' தான் முக்கியமாக நினைவில் நிற்கும். எனவே, அந்த வைட்டமின் பரவுவதை தடை செய்து
விட்டாலே, நியாயமான தேர்தல் நடந்து விடும் என்பதில், துளியும், 'டவுட்' இல்லை!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-மார்-202020:54:01 IST Report Abuse
Kalyanaraman ஏம்ப்பா சுடலை, கோவில்கள் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதே, இதுதான் மதச்சார்பின்மையா? இதற்கு முதலில் நீயோ உன் காலை நக்கி பிழைக்கும் பெட்டி தூக்கிகளோ பதில் சொல்லுங்கள். நான் பிரபலம் என்றால் மேடையில் கேட்பேன். ஆனால் சாதாரண குடிமகன். தினமலர் வாயிலாக கேட்கிறேன். பதில் கிடைக்குமா? இது உனக்கு என் சவால்.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
05-மார்-202015:24:23 IST Report Abuse
கல்யாணராமன் சு. "அரங்கனின் கோயிலை பீரங்கி வைத்துப் பிளக்கும் நன்னாள் எந்நாளோ" என்று ஸ்டாலினின் தந்தை KKK சொன்னது கோவில் கலாச்சாரத்தை காக்கவா .... அழிக்கவா என்ற டவுட்டும் தனபாலுக்கு வரவேண்டுமே? ............
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-மார்-202006:17:09 IST Report Abuse
D.Ambujavalli அதுதான் ரகசியக் கூட்டத்தில் ஆளுக்கு இத்தனை ஆயிரம் கோடி என்று செலவழிக்க உத்தரவிட்டுவிட்டாரே வைட்டமின் ப வுக்கு ஏற்பாடானபின்தான் இந்த அறிவுரைகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X