சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

100 நாள் வேலை திட்ட முறைகேடு தொடர்கிறது!

Added : மார் 04, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
100 நாள் வேலை திட்ட முறைகேடு தொடர்கிறது!

பா.விஜய், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: பல ஊர்களில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் போலி பட்டியல்கள் வாயிலாக, பல கோடி ரூபாய் ஊழல் செய்யப்படுவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

அடி மட்டத்தில் இருக்கும் உழைப்பாளிக்கு, அவர் உழைக்காமலே கூட, அந்தப் பணம் சென்றால் கூட, அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், நடுவில் இருப்போர், உழைக்காமலே அந்த
பணத்தைக் கூறு போட்டுக் கொள்வதை எவ்வாறு ஏற்பது? உண்மையில், 100 நாள் வேலை
திட்டம் சரியாக செயல்பட்டிருக்குமேயானால், தமிழகத்தில், நீராதாரம் மேம்பட்டிருக்கும்;
இந்தளவுக்கு வறட்சி ஏற்பட்டிருக்காது. ஒவ்வொரு கிராமமும், ஓரளவுக்காவது, தன்னிறைவு பெற்ற கிராமம் ஆகியிருக்கும்; விவசாயம் செழித்து இருக்கும். ஆனால், நடப்பதோ வேறு...
நீராதாரங்கள் சரியாகச் செப்பனிடப்படாததால், வேளாண்மை கெட்டது. குடிநீருக்கும்
ஆலாய் பறக்க வேண்டிய அவலம் வந்து விட்டது.

'டெல்டா' மாவட்டங்களில் ஆள் பற்றாக்குறையால், விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு நடந்தும்கூட, இன்னும், 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றங்கள்
ஏற்படுத்தப்படவில்லை. திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றிய அலுவலகத்தில் முக்கிய பொறுப்பிலுள்ள, ஒரு பெண் அதிகாரி, 100 நாள் வேலை திட்டத்தில் போலி கார்டுகள் வாயிலாக, ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான ரூபாயை, 'ஆட்டை' போடுவதாக செய்திகள் தெரிவிக்கின்ற ன. அத்துடன், பஞ்சாயத்துச் செயலர்களை கைக்குள் போட்டு, மேலும் வருமானம் பார்க்கிறாராம். அவர் கொடுத்த, 'டார்ச்சரை' தாக்குப்பிடிக்க முடியாமல், ஒரு செயலர் இறந்தே போய் விட்டாராம். மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள் இருவரும், தனக்கு வேண்டியோர் என, அந்த பெண் அதிகாரி தம்பட்டம் அடிக்கிறாராம். 'என்னை யாரும் அசைக்க முடியாது' என, கொக்கரிக்கிறாராம்; இவர்களைப் போன்ற அதிகாரிகள் நாட்டின் சாபக்கேடு! உடனடியாக, திருச்சி
கலெக்டர் தலையிட்டு, அந்த பெண் அதிகாரிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். 'தங்கள் பெயரை உபயோகிக்கும் அமைச்சர்கள், அவர் பொறுப்புக்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை' என உறுதிப்படுத்த வேண்டும்!


'எடப்பாடியார்' பாலம் என பெயரிடலாமே!மருத்துவ பேராசிரியர் அர்த்தநாரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை; மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா சென்றால், அங்கு இரண்டு நீண்ட தொங்கு
பாலங்களை காண முடியும். அங்கு, முற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் ஆட்சி புரிகின்றனர். ஆனால், வரைபடத்தில் எப்படி தென் மாநிலங்களில் கீழ்பகுதி, குறுகிய அளவில் உள்ளதோ, அது போல, குறுகிய மனம் கொண்ட திராவிட கட்சி தலைவர்கள் தமிழகத்தில்
வாழ்கின்றனர்.

அவர்கள் எப்படி, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையையும், காவிரி நீர் பிரச்னையையும் தீர்த்து வைப்பர்? கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், சென்னை அடையாறு அருகே, திரு.வி.க., பாலம் கட்டப்பட்டது. ஆனால், இன்று பரந்து வளர்ந்த புறநகருக்கு, அடையாறு வழியாக பெசன்ட் நகர், திருவான்மியூர், இ.சி.ஆர்., வழியாக, மாமல்லபுரம் செல்வது கடினம். இந்த பரந்து வளர்ந்த, கிழக்கு கடற்கரை சாலையில், தினமும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள்
செல்கின்றன. அனைத்து வாகனங்களும், குறுகிய சாந்தோம், மயிலாப்பூர் மற்றும் ராஜா
அண்ணாமலைபுரத்திலிருந்து, அடையாறு பாலத்தை கடக்க வேண்டியுள்ளது; மூன்று
வழிகளும், பாலத்தை மட்டுமே கடந்து செல்ல முடியும்.

சென்னை அடையாறு பாலத்திலிருந்து, கிண்டி, ஓ.எம்.ஆர்., போன்ற பகுதிகளுக்கு செல்ல, இதே வழியை தான் பயன்படுத்த வேண்டும். 30 ஆண்டுகளாக, இதே நிலை தான் நீடித்து
வருகிறது. இந்த போக்குவரத்து கொடுமையை, தினமும் சகித்து கடக்கும், மக்களை என்னவென்று சொல்வது! இவை எல்லாவற்றையும் சகித்து, தினமும் மக்கள் கடந்து செல்கின்றனர்.
'மாநிலம் எக்கேடு கெட்டால், எனக்கென்ன' என எண்ணியே பெரும்பாலானோர் செல்வதை காண முடிகிறது.

முதல்வர், இ.பி.எஸ்., சேலம் நகரத்தைச் சேர்ந்தவர்; அங்கு, பாலங்கள் மிகுந்த நகரமாக்கி
வருகிறார். இதே போல், சென்னை மெரினா - பெசன்ட் நகர் இணைக்கும் பாலத்தை
நிறைவேற்றி, 'எடப்பாடியார் பாலம்' என, பெயரிடலாமே!


வீண் வதந்தியை நம்பாதீர்!


பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'கோழிகளை, 'கொரோனா' வைரஸ் தாக்கி விட்டது; எண்ணெய் பலகாரங்கள் வாயிலாக, இந்த வைரஸ்
பரவுகிறது' என்றெல்லாம், சிறிது கூட கூச்சப்படாமல் பொய் செய்திகளை உருவாக்கி, அதை, 'உலா' விடுவோரை பற்றி, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சமூக வலைதளங்களில் பரப்பப்படும், இந்த மாதிரி பொய் செய்திகளை கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மத்திய, மாநில அரசுகளோ, மருத்துவத் துறையோ, பொது சுகாதாரத் துறையோ வெளியிடும் செய்திகளை மட்டும் கவனியுங்கள்; அவை தான், உண்மை செய்திகள்!

உலகின் மிகப் பெரிய நாடு, வளர்ந்த நாடு என, நன்கு அறியப்பட்ட, சீனாவில், இன்று, 'கொரோனா' வைரஸ் தாக்குதலால், அன்றாடம் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. வைரஸ் தாக்குதலை, சீனாவால் இன்னமும் முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.
இந்தியாவை பொறுத்தவரை, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளால், இங்கு, 'கொரோனா' வைரசின் தாக்குதலோ, பாதிப்புகளோ பெரிய அளவில் இல்லை.

ஆனால், சில நாட்களாக சமூக வலைதளங்களில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த வதந்தியை உருவாக்குபவர்கள், விளையாட்டாக இதைச் செய்கின்றனரா என, தெரியவில்லை. வதந்திகளை உருவாக்குவோருக்கு, சமூக விரோதிகள் என்ற பெயர் உண்டு என்பதை, யாரும் மறக்க வேண்டாம். 'கொரோனா' வைரஸ் தாக்குதல், மனிதர்களை, அண்டாமல் இருக்க, ஏகப்பட்ட முன் தடுப்பு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்விஷயத்தில், வீண் அச்சம் வேண்டாம்; சமூக விரோதிகளால் பரப்பப்படும் வதந்திகளை புறந்தள்ளுங்கள்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohanraj Raghuraman - Madurai,இந்தியா
05-மார்-202021:13:31 IST Report Abuse
Mohanraj Raghuraman மதுரையின் நகர போக்குவரத்து வசதிகள் திருப்திகரமாகவே இருந்தாலும், சில விஷயங்கள் நெருடலாகவே உள்ளன. குறிப்பாக தாழ்தள பேருந்துகள் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. மாட்டுத்தாவணியிலிருந்து சாதாரண கட்டணம் திருநகர் வரை ரூபாய் பதினாறு தான். ஆனால் தாழ்தள பேருந்துகளில் இருபத்தியெட்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தாழ்தள பேருந்துகள் வசதியில் நல்லதாகவே இருந்தாலும் அதை அரசு தரப்பில் இம்ப்ரூவ்மென்ட் என்று எடுத்துக்கொள்ளலாமே தவிர பயணிகளுக்கு எவ்விதத்திலும் லாபம் இல்லை என்றே சொல்லலாம். அதுபோல் ஆரப்பாளையம் திருமங்கலம் ரூட்டில் தாழ்தள பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு அரசு ஏன் இது போன்ற சுமைகளை கொடுத்து ஏமாற்றுகிறது என்று தெரியவில்லை. பொதுமக்களும் கேள்வி கேட்டார்களா என்றும் தெரியவில்லை. பொதுமக்களுக்கு கண் தெரியாமல் நஷ்டத்தை ஏற்படுத்தும் இந்த காரியத்தை அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல இந்த பத்திரிக்கை உதவுமா, எதிர்பார்க்கலாமா....
Rate this:
Cancel
Krish - Chennai ,இந்தியா
05-மார்-202005:03:44 IST Report Abuse
Krish பட்டினப்பாக்கம் பெசன்ட் நகரில் ஒரு நல்ல பாலம் கட்டப்பட்டால் அது Singapore Sydney பாலங்கள் போல சிறந்த சுற்றுலா பலமாக அமையலாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X