நிரவ் மோடியின் ஜாமின் மனு 5வது முறையாக தள்ளுபடி

Updated : மார் 05, 2020 | Added : மார் 05, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
UK_Court,rejects,NiravModi,bail_plea,PNB_bank,fraud_case,நிரவ்மோடி,ஜாமின்,தள்ளுபடி

லண்டன்: இந்தியாவில் வங்கியில் மோசடி செய்து லண்டன் தப்பிச் சென்று கைதான வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமின் மனுவை 5வது முறையாக லண்டன் கோர்ட் தள்ளுபடி செய்தது.

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியும், அவரது உறவினரான மெஹூல் சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பணமோசடி செய்துவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் கைது செய்யப்பட்டுள்ள நிரவ் மோடியை, இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகளில், மத்திய அரசு இறங்கியுள்ளது.


latest tamil news



நிரவ் மோடியின் ஜாமின் மனுக்கள் இதுவரை 4 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், 5வது முறையாக ஜாமின் கேட்டு அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது இன்று நடந்த விசாரணையின் முடிவில், பிரிட்டன் நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-மார்-202004:28:02 IST Report Abuse
J.V. Iyer இவருடைய கதை நிர்பயா குற்றவாளிகள் கதைதான். எல்லாம் தள்ளுபடிதான். எனவே ஜாலிதான்.
Rate this:
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
06-மார்-202004:02:50 IST Report Abuse
ManiS good snap with moderate lightings. who took this?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X