மோடி 108 வெளிநாட்டு பயணம்; வந்தது முதலீடு ரூ.14 லட்சம் கோடி| Dinamalar

மோடி 108 வெளிநாட்டு பயணம்; வந்தது முதலீடு ரூ.14 லட்சம் கோடி

Updated : மார் 05, 2020 | Added : மார் 05, 2020 | கருத்துகள் (63)
Share

மோடி, 2014 மே 26ல் பிரதமராக பதவியேற்றார். முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் சென்றார். 60 நாடுகளுக்கு சென்றுள்ளார். சில நாடுகளுக்கு திரும்ப சென்றது சேர்த்து மொத்தம் 108 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு அதிகபட்சமாக ஆறுமுறை, பிரான்ஸ், சீனா, ரஷ்யாவுக்கு ஐந்து முறை சென்றுள்ளார். மோடியின் வெளிநாட்டு பயணங்கள், ஒப்பந்தங்களின் விபரம்.latest tamil news
2014 ம் ஆண்டுதேதி - நாடு - ஒப்பந்தம்/நோக்கம்

* ஜூன் 15 -16 - பூடான்
இந்திய நிதியுதவியுடன் பூடானில் கட்டப்பட்ட உச்சநீதிமன்றம் திறப்பு. 600 மெகாவாட் அனல் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்.

* ஜூலை 13 -16 - பிரேசில்
ஆறாவது 'பிரிக்ஸ்' மாநாடு. 'பிரிக்ஸ்' நாடுகள் வளர்ச்சி வங்கி தொடக்கம்.

* ஆக. 3 - 4 - நேபாளம்
நேபாளத்துக்கு ரூ. 7,160 கோடி கடனுதவி. ரூ. 7,160 கோடியில் அனல் மின்சாரம் அமைக்கப்படும்.

* ஆக., 30 - செப்., 3 - ஜப்பான்
இந்தியாவில் ஸ்மார்ட்சிட்டி, கங்கை ஆறு சுத்தப்படுத்துதல் திட்டத்துக்கு 5 ஆண்டுகளுக்கு ரூ. 2.57 லட்சம் கோடி வழங்க ஜப்பான் ஒப்புதல். பாதுகாப்பு, எரிசக்தி, சாலை, சுகாதார துறைகளில் ஒப்பந்தம்.

* செப்., 26 -30 - அமெரிக்கா
ஐ.நா., பொதுச்சபை மாநாடு, மடிசன் சதுக்கத்தில் உரை.

* நவ., 11 -13 - மியான்மர்
12வது ஆசியா - இந்தியா மாநாடு, ரூ. 14 ஆயிரம் கோடி மதிப்பில் வர்த்தக ஒப்பந்தம்.

* நவ., 14 -18 - ஆஸ்திரேலியா
ஜி - 20 மாநாடு. யுரேனியம் வாங்க ஒப்பந்தம்.

* நவ., 19 - பிஜி தீவு
இந்தோ - பசுபிக் தீவு கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பு.

* நவ., 25 - 27 - நேபாளம்
'சார்க்' மாநாடு


latest tamil news
2015 ம் ஆண்டு


* மார்ச் 10 -11 - செசல்ஸ்
கடல்சார் ஒப்பந்தம்

* மார்ச் 11 - 13 - மொரிஷியஸ்
மொரிஷியஸ் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினர்.

* மார்ச் 13 -14 - இலங்கை
தலைமன்னார் - மது ரோடு ரயில் சேவை துவக்கம். விசா, சுங்கதுறை, இளைஞர்கள் முன்னேற்றம், ரவீந்திரநாத் தாகூர் நினைவிடம் அமைக்க ஒப்பந்தம். யாழ்பாணம் கலாசார மையத்துக்கு அடிக்கல்.

* மார்ச் 23 - சிங்கப்பூர்
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யு இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பு.

* ஏப். 9 -12 - பிரான்ஸ்
ரூ. 62 ஆயிரம் கோடி மதிப்பில் 'ரபேல்' போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம். மஹாராஷ்டிரா ஜெய்தாபூரில் அணு உலை அமைக்க ஒப்பந்தம்.

* ஏப்., 12 -14 - ஜெர்மனி
'மேக் இன் இந்தியா' திட்டத்தில் முதலீடு செய்ய வலியுறுத்தல்.

* ஏப்., 14 -16 - கனடா
ரூ. 2500 கோடிக்கு அணு உலைக்கான யுரேனியம் வாங்க ஒப்பந்தம்.

* மே 14 -16 - சீனா
தொலைத்தொடர்பு, இரும்பு, சோலார் மின்சாரம், சினிமா துறைகளில் இருநாட்டு நிறுவனங்கள் இடையே ரூ. 1.57 லட்சம் கோடி மதிப்பில் 21 ஒப்பந்தங்கள் கையெழுத்து.

* மே 16 -17 மங்கோலியா
யுரோனியம் வாங்க ஒப்பந்தம். பொருளாதாரம், வளர்ச்சி,பாதுகாப்பு துறைகளில் ஒப்பந்தம்.

* மே 18 - 19 - தென்கொரியா
பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம் உள்பட ஏழு ஒப்பந்தங்கள். இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ. 63 ஆயிரம் கோடி நிதி வழங்க ஒப்புதல்.

* ஜூன் 6 -7 - வங்கதேசம்
22 முக்கிய ஒப்பந்தங்கள். இருநாடு இடையே எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்து.

* ஜூலை 6 - உஸ்பெகிஸ்தான்
விவசாயம், வர்த்தகம் மற்றும் முதலீடு, ஐ.டி., மற்றும் எரிசக்தி துறையில் ஒப்பந்தம்.

* ஜூலை 7 - கஜகஸ்தான்
யுரோனியம், ரயில்வே, விளையாட்டு, கைதிகள் பரிமாற்றம், பாதுகாப்பு துறையில் ஒப்பந்தம்.

* ஜூலை 8 -10 - ரஷ்யா
ஏழாவது பிரிக்ஸ் மாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு.

* ஜூலை 10 -11 - துர்க்மெனிஸ்தான்
தலைநகர் ஆஸ்காபத்தில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் யோகா மையத்தை திறந்து வைத்தார்.

* ஜூலை 12 - கிர்கிஸ்தான்
பாதுகாப்பு, தேர்தல், இந்திய தர மதிப்பீடு, கலாசாரம், சுற்றுலா துறைகளில் ஒப்பந்தம்.

* ஜூலை 12 - 13 - தஜிகிஸ்தான்
கலாசாரம், மனித வள மேம்பாடு துறைகளில் ஒப்பந்தம்.

* ஆக., 16 - 17 - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
பொருளாதாரம், பாதுகாப்பு, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம்.

* செப்., 23 - அயர்லாந்து
வர்த்தகம், வணிகம், விமான துறைகளில் பேச்சுவார்த்தை

* செப்., 24 - 30 - அமெரிக்கா
ஐ.நா., பொதுச்சபை மாநாடு

* நவ., 12 -14 - பிரிட்டன்
பிரிட்டன் பார்லிமென்டில் உரை. இருநாட்டு நிறுவனங்கள் இடையே ரூ. 83 ஆயிரம் கோடி மதிப்பில் ஒப்பந்தம். விம்லேய் மைதானத்தில் 60 ஆயிரம் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.

* நவ., 15 -16 - துருக்கி
ஜி - 20 மாநாடு

* நவ., 21 -22 - மலேசியா
ஆசியன் - இந்தியா மாநாடு, கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்பு.

* நவ., 23 - 25 - சிங்கப்பூர்
பாதுகாப்பு, கலாசாரம், பொருளாதாரம், திறன் வளர்ச்சி துறைகளில் ஒப்பந்தம்.

* நவ., 30 - டிச., 1 - பிரான்ஸ்
ஐ.நா., சபையின் பருவநிலை மாற்றம் மாநாட்டில் பங்கேற்பு.

* டிச., 23 -24 - ரஷ்யா
அணுசக்தி, பாதுகாப்பு, ஹைட்ரோகார்பன், விண்வெளி துறைகளில் 12 ஒப்பந்தங்கள். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க ரஷ்யா ஆதரவு.

* டிச., 25 - ஆப்கானிஸ்தான்
ரூ. 644 கோடி மதிப்பில் இந்தியா சார்பில் கட்டப்பட்ட ஆப்கன் பார்லிமென்டை திறந்து வைத்தார். மூன்று 'எம்.ஐ., 25' ஹெலிகாப்டர் ஆப்கனுக்கு வழங்கப்பட்டது.

* டிச., 25 - பாகிஸ்தான்
லாகூரில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார்.


latest tamil news
2016 ம் ஆண்டு -


* மார்ச் 30 - பெல்ஜியம்
முதல் இந்தியா - ஐரோப்பா மாநாட்டில் பங்கேற்பு. துறைமுகம், அறிவியல் தொழில்நுட்பம், இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு, பரஸ்பர சட்ட உதவி, கைதிகள் பரிமாற்றம் துறைகளில் ஒப்பந்தம்.

* மார்ச் 31 - ஏப்., 1 - அமெரிக்கா
அணு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பு

* ஏப்., 2 - 3 சவுதி
எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம் துறையில் ஒப்பந்தம். அந்நாட்டின் 'ஆர்டர் ஆப் கிங் அப்துல்லாஜிஜ்' விருது மோடிக்கு வழங்கப்பட்டது.

* மே 22 - 23 - ஈரான்
ஈரானின் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்தி இந்தியா - ஆப்கன் - ஈரான் இடையே போக்குவரத்து வழித்தடம் உருவாக்க ஒப்பந்தம். இந்தியா ரூ. 1,420 கோடி செலவிடுகிறது.

* ஜூன் 4 - ஆப்கானிஸ்தான்
இந்திய நிதியுதவியில் கட்டப்பட்ட ஆப்கன் - இந்தியா நட்புறவு அணையை திறந்து வைத்தார்.

* ஜூன் 4 - 5 - கத்தார்
சுங்கம், சுற்றுலா, இளைஞர் மற்றும் விளையாட்டு துறையில் ஒப்பந்தம்.

* ஜூன் 6 - சுவிட்சர்லாந்து
கறுப்பு பணம் தொடர்பாக பேச்சுவார்த்தை.

* ஜூன் 6 - 8 - அமெரிக்கா
பாதுகாப்பு, எரிசக்தி துறையில் அதிபர் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை. அமெரிக்க காங்., கூட்டு கூட்டத்தில் உரை.

* ஜூன் 9 - மெக்சிகோ
மெக்சிகோ காங்., கூட்டுக்கூட்டத்தில் உரை.

* ஜூன் 23 -24 - உஸ்பெகிஸ்தான்
ஷாங்காய் ஒத்துழைப்பு கழக மாநாட்டில் பங்கேற்பு.

* ஜூலை 7 - மொசாம்பிக்
மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து.

* ஜூலை 8 - 9 - தென் ஆப்ரிக்கா
அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுலா, சுங்கம், கலாசாரம் துறைகளில் ஒப்பந்தம்.

* ஜூலை 10 - தான்சானியா
அந்நாட்டின் ஜான்சிபார் நகர குடிநீர் திட்டத்துக்கு இந்தியா ரூ. 658 கோடி கடன் வழங்கியது. பொது சுகாதாரம் திட்டத்துக்கு ரூ. 3,580 கோடி கடனுதவி.

* ஜூலை 11 - கென்யா
இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு, இந்திய தர ஆணையம் - கென்ய தர ஆணையம் இடையே ஒப்பந்தம். சிறு, குறு தொழில் நிறுவன வளர்ச்சிக்கு ரூ. 322 கோடி கடனுதவி வழங்கியது.

* செப்., 2 - 3 - வியட்நாம்
அறிவியல் தொழில்நுட்பம், கலாசாரம், சுற்றுலா, சுகாதாரம் துறைகளில் ஒப்பந்தம்.

* செப்., 4 - 5 - சீனா
'ஜி - 20' மாநாட்டில் பங்கேற்பு. எல்லையில் அமைதிக்கான பேச்சுவார்த்தை.

* செப்., 7 - 8 - லாவோஸ்
11வது கிழக்கு ஆசியா மாநாட்டில் பங்கேற்பு.

* நவ., 10 - தாய்லாந்து
தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பு.

* நவ., 11 - 12 - ஜப்பான்
இந்தியா - ஜப்பான் ஆண்டு மாநாட்டில் பங்கேற்பு.


2017 ம் ஆண்டு


மே 11-12 இலங்கை
திரிகோணமலையில் எண்ணெய் டாங்குகளை இந்தியா புனரமைக்க ஒப்பந்தம்.

மே 29-30 - ஜெர்மனி
இந்திய நகரங்களின் வளர்ச்சிக்கு 2022 வரை நிதி உதவி செய்ய ஜெர்மனி சம்மதம்.

மே 30-31 - ஸ்பெயின்
சைபர் பாதுகாப்புக்கான 7 ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இணைந்து செயல்படுதல்.

மே 31- ஜூன் 2 - ரஷ்யா
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்க ரூ. 3580 கோடிக்கு ஒப்பந்தம். கூடங்குளம் அணுமின்நிலையத்தின் 3,4வது யூனிட் திறப்பு. இந்தியாவில் சில அணுமின் நிலையத்தை திறக்க ரஷ்யா உதவி.

ஜூன் 2-3 - பிரான்ஸ்
இரு நாடுகள் உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை.

ஜூன் 8-9 - கஜகஸ்தான்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு.

ஜூன் 24 - போர்ச்சுகல்
தலைநகர் லிஸ்பனில் கேன்சர் ஆய்வு மையத்தை பார்வையிட்டார்.

ஜூன் 25-26 - அமெரிக்கா
அமெரிக்காவிடம் இருந்து ஆண்டுக்கு 5.8 மில்லியன் இயற்கை எரிவாயு வாங்க, 20 ஆண்டுக்கு ஒப்பந்தம்.

ஜூன் 27 - நெதர்லாந்து
கலாசாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்து.

ஜூலை 4-6 - இஸ்ரேல்
இரு நாடுகளுக்கு இடையே நீர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ஒப்பந்தம்.

ஜூலை 7-8 - ஜெர்மனி
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பு.

செப். 3-5 - சீனா
'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பு.

செப். 6-7 - மியான்மர்
கடல்வழி பாதுகாப்பு தகவல்களை பரிமாறிக் கொள்ளுதல்,

நவ. 12-14 - பிலிப்பைன்ஸ்
கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்பு.


2018 ம் ஆண்டு


ஜன. 23-26 - சுவிட்சர்லாந்து
உலக பொருளாதார மாநாடு

பிப். 9 - ஜோர்டான்
பாரம்பரிய இசை, நடனம் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தம்.

பிப். 10 - பாலீஸ்தீனம்
ரூ. 358 கோடிக்கு ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்து.

பிப். 10-11 - அபுதாபி
முதல் ஹிந்து கோயிலுக்கு மோடி அடிக்கல். அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் சார்பில் இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்தம். ரயில்வே துறையில் தொழில்நுட்பத்தை பரிமாறுதல்.

பிப். 11-12 - ஓமன்
சுகாதாரம், சுற்றுலா துறைகளில் இணைந்து செயல்படுதல்.

பிப். 16-18 - சுவீடன்
இந்தியாவில் ரூ. 100 கோடி முதலீடு செய்ய சுவீடன் சம்மதம்.

ஏப். 18-20 - பிரிட்டன்
காமன்வெல்த் ஹெட்ஸ் ஆப் கவர்மென்ட் கூட்டத்தில் பங்கேற்றார்.

ஏப். 20 - ஜெர்மனி
இரு நாடுகள் உறவு குறித்து பேச்சுவார்த்தை.

ஏப். 27-28 - சீனா
இரு நாடுகள் எல்லை இடையே அமைதியை பேணிக்காத்தல்.

மே 11-12 நேபாளம்
நேபாளத்தின் ஜானக்பூர்- உ.பி.,யின் அயோத்தி இடையே பஸ் போக்குவரத்து துவக்கம். கிழக்கு நேபாளத்தில் 900 மெகாவாட் நீர் மின்சார நிலையம் அமைக்க அடிக்கல்.

மே 21 - ரஷ்யா
சோச்சியில் அதிகாரப்பூர்வமற்ற மாநாட்டில் பங்கேற்பு.

மே 29 - இந்தோனேஷியா
பாதுகாப்பு, வர்த்தகத்தில் இணைந்து செயல்பட முடிவு.

மே 31 - மலேசியா
பாதுகாப்பு துறையில் இணைந்து செயல்படுதல்.

மே 31-ஜூன் 2 - சிங்கப்பூர்
கடற்படை பாதுகாப்பு, இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை பின்பற்ற ஒப்பந்தம்.

ஜூன் 9-10 - சீனா
ஷாங்காய் கூட்டமைப்பில் பங்கேற்பு.

ஜூலை 23-24 - ருவாண்டா
200 பசுக்களை பரிசாக மோடி அளித்தார்.

ஜூலை 24 - உகாண்டா
உகாண்டா பார்லிமென்டில் உரை.

ஜூலை 25-27 - தென் ஆப்ரிக்கா
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு

ஆக. 30-31 - நேபாளம்
'பிம்ஸ்டிக்' மாநாட்டில் பங்கேற்பு.

அக். 28-29 - ஜப்பான்
சுகாதாரம், தொழில்நுட்ப துறைகளில் ஒப்பந்தம்.

நவ. 14-15 - சிங்கப்பூர்
கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்பு.

நவ. 17 - மாலத்தீவு
மாலத்தீவு பார்லிமென்ட்டில் மோடி பேச்சு.

நவ. 29- டிச. 1 - அர்ஜென்டினா
'ஜி-20' மாநாட்டில் பங்கேற்பு.


2019 ம் ஆண்டு


பிப். 21-22 - தென் கொரியா
வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் ஒப்பந்தம்

ஜூன் 8 - மாலத்தீவு
சுகாதாரம், இரு நாடுகள் இடையே கடல்வழி போக்குவரத்தை அதிகரிக்க ஒப்பந்தம்.

ஜூன் 9 - இலங்கை
அதிபர் சிறிசேனாவை சந்தித்து மோடி பேச்சு.

ஜூன் 14-15 - கிரிகிஸ்தான்
கிரிகிஸ்தானுக்கு ரூ. 20 கோடி கடன் உதவி. இரு நாடுகள் இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்.

ஜூன் 27-29
'ஜி- 20' மாநாட்டில் பங்கேற்பு.

ஆக. 17-18 - பூடான்
ரூபே அட்டையை துவக்கி வைத்தார். கல்வி, விண்வெளி துறைகளில் இணைந்து செயல்படுதல்.

ஆக. 22-23 - பிரான்ஸ்
பாதுகாப்பு, கலாசாரம், பருவநிலை மாறுபாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் ஒப்பந்தம்.

ஆக. 23-24 - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஐக்கிய அரபு எமிரேட்சின் உயர்ந்த விருதான 'ஆர்டர் ஆப் ஜாயத்' மோடிக்கு வழங்கப்பட்டது.

ஆக. 24-25 - பஹ்ரைன்
சர்வதேச சூரிய ஒளி மின்சார கூட்டமைப்புடன் ஒப்பந்தம்.

ஆக. 25-26 - பிரான்ஸ்
'ஜி- 7' மாநாட்டில் பங்கேற்பு

செப். 4-5 - ரஷ்யா
ஹைட்ரோகார்பன், இயற்கை எரிவாயு ஒப்பந்தம்.

செப். 20-27 - அமெரிக்கா
ஐ.நா., சபையில் மோடி உரை. அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ஹுஸ்டனில் 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்பு.

அக். 29 - சவுதி அரேபியா
விமான போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் ஒப்பந்தம்.

நவ. 2-4 - தாய்லாந்து
ஆசிய மாநாடு, கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொண்டார்.

நவ. 13-14 - பிரேசில்
'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பு.


யார் அதிகம்


பிரதமர் மோடி ஐந்தரை ஆண்டுகளில் 108 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர்களில் மன்மோகன் சிங் பத்து ஆண்டுகளில் 93 பயணங்களும், வாஜ்பாய் 48 பயணங்களும் மேற்கொண்டனர். அதிகபட்சமாக இந்திரா 15 ஆண்டுகால ஆட்சியில் 115 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார்.


ரூ. 2,021 கோடி


பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக 2014 ஜூன் 15 முதல் 2018 நவ., 15 வரை செலவான தொகை ரூ. 2,021 கோடி.


ரூ. 14 லட்சம் கோடி


பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் மூலம் 2014 - 2018 காலக்கட்டத்தில் ரூ. 14 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு கிடைத்தது. இது 2010 -2014 ஐ விட 43 சதவீதம் அதிகம்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X