'ஐகோர்ட்டின் கோஹினூர் வைரம்'; நீதிபதி முரளிதருக்கு பாராட்டு

Updated : மார் 05, 2020 | Added : மார் 05, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
JusticeMuralidhar,Kohinoor,Farewell,HighCourt,நீதிபதி,முரளிதர்,கோஹினூர்,பிரிவுஉபச்சாரவிழா,ஐகோர்ட்,உயர்நீதிமன்றம்

புதுடில்லி: டில்லி வன்முறை வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட் நீதிபதி எஸ்.முரளிதர், பஞ்சாப் - அரியானா மாநில ஐகோர்ட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையொட்டி நடந்த பிரிவு உபச்சார விழாவில், 'ஐகோர்ட்டின் கோஹினூர் வைரம்' என முரளிதருக்கு வக்கீல்கள் பாராட்டு தெரிவித்தனர்.


latest tamil newsடில்லி வன்முறை தொடர்பாக டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் முரளிதர், தல்வந்த் சிங் அடங்கிய அமர்வு, விசாரித்து பிறப்பித்த உத்தரவில், பா.ஜ.,வை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர், பர்வேஷ் வர்மா ஆகியோர் மிகவும் ஆட்சேபகரமான முறையில் பேசியுள்ளனர். அவர்கள் மீது எப்.ஐ.ஆர்., தாக்கல் செய்து, வழக்கை டில்லி போலீஸ் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். போலீசாரின் நடவடிக்கைக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து பிப்.,26ல் டில்லி ஐகோர்ட்டின் 3வது மூத்த நீதிபதியான முரளிதர், பஞ்சாப் - அரியானா மாநில ஐகோர்ட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பிப்.,12ம் தேதியே அவரது இடமாற்றத்திற்கு பரிந்துரை செய்தது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அவர் இடமாற்றம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பேசு பொருளானது.


latest tamil newsஇந்நிலையில் டில்லி ஐகோர்ட்டில் நீதிபதி முரளிதருக்கு இன்று பிரிவு உபசார விழா நடந்தது. இதில் பேசிய ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.என்.பாட்டீல், 'எந்த விவகாரத்தையும் பேசக்கூடிய, எந்த விஷயத்திலும் முடிவு எடுக்கக்கூடிய சிறந்த நீதிபதியை நாம் இழக்கிறோம்' என்றார்.

டில்லி வக்கீல்கள் சங்க தலைவர் அபிஜத் பேசுகையில், 'ஐகோர்ட்டின் கோஹினூர் வைரத்தை இழக்கிறோம். ஆனாலும் அந்த வைரம், நம்மை விட்டு, சில நூறு கிலோ மீட்டர் மட்டுமே தள்ளி செல்கிறது' என பாராட்டு தெரிவித்தார்.


latest tamil newsபின் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிய நீதிபதி முரளிதர், 'நீதி எப்போது வெற்றி பெற வேண்டுமோ, அப்போது வெற்றி கிடைக்கும். வாய்மையால் நீதிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
06-மார்-202012:36:05 IST Report Abuse
Anantharaman Srinivasan வக்கீல்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள். நீதிபதி முரளிதர் எப்படிப்பட்டவர், அவரின் கடந்தகால performance எப்படிப்பட்டது என்பதைத்தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நேர்மையாக. தீர்ப்பு எழுதும் நீதிபதிகளுக்கு எவ்விடமும் சம்மதமே..
Rate this:
Cancel
06-மார்-202012:09:20 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஷாஹின்பாக்ஹ் போராட்டத்தை வளர்த்தவர் இவர் என்று சொல்லலாம். சட்டவிரோதமாக அனுமதியின்றி ஒரு பகுதியை அடைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறார்கள் , இவர்களை முதலிலேயே அடித்து துரத்தி இருக்க வேண்டும் காவல்துறை , ஆனால் இவர் ஏதோ சமரசம் பேசுகிறேன் என்று அதை வளர்த்து விட்டார்
Rate this:
Cancel
06-மார்-202010:41:21 IST Report Abuse
ஹாஜா குத்புதீன் வழக்கம் போல பிஜேபி சங்கிகள் மட்டும் அவரை எதிர்த்து கருத்து..காரணம் எல்லோரும் அறிந்ததே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X