சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஜெ.,யின் துணிவு இன்று ரஜினியிடம்..

Added : மார் 05, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஜெ.,யின் துணிவு இன்று ரஜினியிடம்..

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தெய்வீக புலவர் திருவள்ளுவருக்கு, பா.ஜ., காவி பூசியப் போது, நடிகர் ரஜினிகாந்த், 'என்னை, காவிக்குள் யாரும் அடைக்க முடியாது' என, கூறினார்.

நாடு முழுவதும், இஸ்லாமியர்கள், சி.ஏ.ஏ.,வுக்கு எதிராக, குரல் கொடுத்து வருகின்றனர். அந்த சட்டம், 'இஸ்லாமியர்களுக்கு, எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது; அப்படி ஒரு பாதிப்பு வந்தால், அவர்களுக்காக, முதல் நபராக களத்தில் இறங்கி, குரல் கொடுப்பேன்' என்றார், ரஜினி.டில்லியில் நடந்த கலவரத்தில், 37 பேருக்கு மேல் பலியாகினர். 'மத்திய உளவுத் துறை, கலவரத்தை தடுக்க தவறி விட்டது. மதத்தினரை துாண்டி, சிலர் அரசியல் செய்கின்றனர்; இது சரியல்ல' என, பொரிந்து தள்ளினார், ரஜினி.

இந்த துணிச்சல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பார்த்து உள்ளோம்; அன்று, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆரிடம் பார்த்துள்ளோம்; தற்போது, ரஜினியிடம் பார்க்கிறோம். மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களுக்கு, மாற்றத்தை கொடுக்க, ரஜினி போன்றோர், அரசியல் களத்திற்கு வர வேண்டியது, காலத்தில் கட்டாயம்.எந்த ஒரு தேசிய மற்றும் மாநில கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், 'என் வழி, தனி வழி' என, ரஜினி நடந்து கொண்டால், நிச்சயம் வெற்றி தேடி வரும்!

நீதிமன்றங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்!

பொன்.சம்பந்தன், திருவள்ளூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களான, 'வோட போன், ஐடியா, பார்தி ஏர்டெல், டாடா டெலி சர்வீஸ்' உட்பட, 15 நிறுவனங்கள், அரசு தொலை தொடர்புத் துறைக்கு, 1.47 லட்சம் கோடி ரூபாய் பாக்கி வைத்திருந்தன. இது தொடர்பான வழக்கில், கடந்த அக்டோபரில், உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவில், 'நிலுவைத் தொகையை, இந்த ஆண்டு, ஜன., 24க்குள் செலுத்த வேண்டும்; தவறினால், உரிமம் ரத்து செய்யப்படும்' என, உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, ஜன.,24க்குள் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், நிலுவைத் தொகையை செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், நீதிமன்ற உத்தரவு அலட்சியப்படுத்தப்பட்டது; இதற்கு காரணம், கறுப்பு ஆடுகள் கொடுத்த தைரியம் தான். இத்தருணத்தில், 'நிலுவைத் தொகைகளை செலுத்துமாறு, எங்களை நீதிமன்றம் வற்புறுத்த வேண்டாம். 'அந்த தொகையை செலுத்தாத நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம்' என தொலை தொடர்பு துறை இயக்குனர் சார்பில், ஜன., 23ல் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா அமர்வு முன், பிப்., 14ல் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தொலை தொடர்புத் துறை இயக்கு நரின் சுற்றறிக்கை, நீதிபதியின் பார்வைக்கு சென்றது; இது, நீதிபதிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தொடர்புத் துறை சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தாவை பார்த்து கோபத்துடன், 'உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டாம் என, ஒரு அதிகாரி எப்படி கூறுவார்?

'அவர் எழுத்துப்பூர்வமாக எப்படி தடை போட முடியும்; என்ன துணிச்சல்! அப்படியென்றால், உச்ச நீதிமன்றத்தை மூடி விடலாமா? 'இந்த நாட்டில், எந்த சட்டமும் இல்லை. நாங்கள் மிகவும் வருத்தம் அடைகிறோம். நான், இந்த அமைப்பில் வேலை செய்யக்கூடாது என, உணர்கிறேன். 'இந்த நாட்டில், இப்படிப்பட்ட ஒரு நடைமுறையில், எப்படி பணிபுரிவது என, எனக்கு தெரியவில்லை' என்றார், நீதிபதி அருண் மிஷ்ரா; உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஆத்திரம் ஏற்கத்தக்கது. இந்தியா, மிகப்பெரிய ஜனநாயக நாடு. நாட்டை நீதிமன்றங்கள் தான், நிமிர்த்தி தாங்கிக் கொண்டிருக்கின்றன என, அதிகபட்சமாக மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்!

மத்தியில் ஆட்சியை இழக்க போவது நிச்சயம்!
சுப்ர.அனந்தராமன், சின்னகாஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: முன்னாள் பிரதமர் இந்திராவால் உருவாக்கப்பட்ட, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பழைய பெயர்களில் தான் இன்னும் இயங்கி வருகின்றன. அவை, ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு, தனியார் துறைகளின்,

'கார்ப்பரேட்' நிறுவனங்கள் போல, இயங்க அனுமதிக்கப்பட்டன. தேசியமயமாக்கப்பட்ட பின்பும், வாடிக்கையாளர்களின், 'அக்கவுன்ட்' எண் மாற்றம் செய்யப்படவில்லை; வங்கிக் கிளைகள் மூடப்படவில்லை. 'செக்' புத்தகம், 'பாஸ்' புத்தகம் இவற்றில் மாறுதலும் இல்லை. முன்னாள் பிரதமர் இந்திராவின்

தேசியமயமாக்கப்பட்ட நடவடிக்கையால், வாடிக்கையாளர்களுக்கு, இதுவரை எந்த தொந்தரவும் இல்லை. ஆனால், இப்போது, அரசு வங்கிகள் இணைப்பு நடவடிக்கைகளில், வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கு எண் மாற்றப்படுவது, தவிர்க்க முடியாதது. நான், சேமிப்புக் கணக்கு வைத்துள்ளது, ஆந்திரா வங்கி. இதை, ஊழல், வாராக் கடன் நஷ்டம், மோசடிகளால் நஷ்டம், மோசமான வாடிக்கையாளர் சேவை இவற்றால், மக்களால் வெறுக்கப்படும், 'யூனியன் பேங்க்' உடன் சேர்த்து விடப் போகின்றனர்.

இந்த இணைப்பை பற்றி வாடிக்கையாளர்களிடம் அனுமதி பெறவில்லை. ஆந்திரா வங்கியின், பல்லாயிரம் பங்குதாரர்களிடம் அனுமதி கேட்கவில்லை. 'கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது' போல, வங்கிகள் இணைப்பு, ஒரு வேண்டாத வேலையாக, மக்கள் அனைவரின் மீதும் திணிக்கப்பட்டு உள்ளது. ஆந்திரா வங்கியின் வாடிக்கையாளர்களின் பழைய சேமிப்புக் கணக்கு எண் மாற்றப்படுவது, நிச்சயம். வங்கியின், ஐ.எப்.எஸ்.சி., எண்ணும் மாறும். பழைய செக் புத்தகம் செல்லாது; புதிய செக் புத்தகம் கேட்டு வாங்க வேண்டும்.

என் போன்ற வயதான வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த, அன்பான வங்கி சேவையை, ஆந்திரா வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும், யூனியன் பேங்க் ஆன பின், மறந்து விட வேண்டியது தான்.இதே, வேகத்தில் பிடிவாதமாக போய்க் கொண்டிருந்தால், 2024 பொதுத் தேர்தலில், பா.ஜ., மத்தியிலும் ஆட்சியை இழந்து விடும்!

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
08-மார்-202008:00:21 IST Report Abuse
venkat Iyer திரு.குணசேகரன் அவர்களே, ரஜினி அரசியலுக்கு வருவது கண்டு பலரும் அவரை கேவலப்படுத்தி பேசி வருவது உண்மையில் அது அவரது சினிமா வியாபாரத்தினை கெடுத்து கொண்டு வருகிறது. பொன் முட்டை இடும் வாத்து என்று பலர் சினிமாத்துறையிலும், மேலும் பலர் அரசியலுக்கும் அவரை வருமாறு வலியுறுத்துகின்றனர்.உண்மையில் எழுபது வயதில் அவர் மன உளைச்சலில் இருப்பதை நம்மால் அறிய முடிகிறது.அவரை அரசியலுக்கு பலர் எங்கே வந்துவிடப் போகிறாரோ என்று நினைத்து நேற்று முளைத்த காளான்களும் பல அரசியல் விஷமிகள் பலரும் தூற்றுகின்றனர். மயிலாடுதுறையில் அண்மையில் வந்த அவரது படத்தின் கட்டவுட்டில் சாணி அடித்து உள்ளது இதுவரை என்றும் நிகழாத நிகழ்வுகளாக அரங்கேறியுள்ளனர். உண்மையில் சாமானியனான என்னாலே அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை போதும்டா சாமி என்றுதான் தோன்றுகிறது. எழுபது வயதுமிக்க கண்ணியமான மனிதரால் எப்படி இது போல் விஷயத்தினை தாங்கி கொள்ள முடியும். தினம்தோறும் மீடியாக்களில் அவரைப்பற்றி நக்கலும் நையாண்டியும் பல அரசியல் கட்சி பிரமுகர்களால் திட்டமிட்டே நடத்தப்படுகிறது.உண்மையில் நல்ல தலைவர்கள் அரசியலுக்கு வரமுடியாதது மிகவும் சாபக்கேடாக உள்ளது. பணம் செலவு செய்யாமல் அரசியலுக்கு வருவது மிகவும் கடினமான சூழ்நிலையால் உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் நல்ல மனிதர்களை பார்த்து ஓட்டுப்போடுவதுதான் சரியான நிலையாக உள்ளது. ஆனால் நமது தேசத்தில் சின்னத்தினை பார்த்து ஓட்டு போடும் நிலை சரியானதாக எனக்கு படவில்லை .தலைமைக்கு வேட்பாளரின் உண்மையான குணங்களை அறியாமல், பணத்தால் தலைமைக்கு அபிஷேகம் செய்து சீட்டை பெற்றுவிடுவதும் மக்கள் சின்னத்தின் தலைவரை நினைத்து ஓட்டு போடுவதும் வாடிக்கையாகிவிட்டது.இது மக்களாட்சி தத்துவம் போல் தெரியவில்லை.ரஜினி அதைத்தான் சொல்கின்றார். செயலாளர்கள் மிகுந்த செலவு செய்தால்தான் வெற்றி பெற முடியும் என்று சொல்வதை என்னாலும் ஏற்க முடியவில்லை. நாட்டில் நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்வதற்கு தொகுதிக்கு ஒரு கோடி ரூபாயாவது செலவு செய்ய வேண்டும் என்று கூறுவது உண்மையில் வெட்கப்பட வேண்டும். மக்களை அப்படி அரசியல்வாதிகள் உருவாக்கி வைத்து உள்ளார்கள். அவரை அசிங்கமாக பேசுவது உண்மையில் அவர் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று பேசுபவர்களின் வாயை அடைக்க வேண்டும்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-மார்-202023:39:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அன்னிக்கி அம்ம்மா அல்லக்கை அடியாட்களை விட்டு ஆசிட் ஊத்துவான்க.. மோசடி தர்பார் சிபிஐ, வருமானவரி ரெயிடு விடுது... இந்த அட்டகத்தி கேக்வாட் தன்னோட ஸ்க்ரிப்டை மேலிடத்தில் காட்டி, பெர்மிஷன் வாங்கிட்டு தான் சொல்லுதுன்னு பச்சப்புள்ளைக்கு கூட தெரியும்.
Rate this:
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
07-மார்-202017:55:54 IST Report Abuse
Kumar நரி எப்போதும் safe ஆஹ் தான் ஊளை இடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X