சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'ரஜினி வந்தா சம்பத்துக்கு வாய்ப்பா!'

Added : மார் 05, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
'ரஜினி வந்தா சம்பத்துக்கு வாய்ப்பா!'

இந்து மக்கள் கட்சி தலைவர், அர்ஜுன் சம்பத், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வந்தார். அப்போது, நிருபர்களிடம், அவர், 'தமிழகத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டம், 2003ல் இயற்றப்பட்டது. நிலத்தடி நீரை எடுப்போர், 2014ல் சட்டத்தை வாபஸ் பெற செய்தனர். நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே பகிர்ந்தளிப்பது, அரசியல் சாசனத்திற்கு சட்ட விரோதமானது; அதை, அரசு வாபஸ் பெற வேண்டும். சி.ஏ.ஏ., எதிர்ப்பு போராட்டத்தால், பொதுமக்கள், போலீசார் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

'சி.ஏ.ஏ., சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை, தி.மு.க., - கம்யூ., துாண்டி விடுகிறது. நடிகர் ரஜினி, குடியுரிமை சட்டத்திற்கு எதிரான, போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர, முயற்சி எடுத்து வருகிறார். அவரின் முயற்சி, வெற்றி பெறும். ஆன்மிக அரசியலை முன்னிறுத்தி, நடிகர் ரஜினி முதல்வராக பொறுப்பேற்பார்' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'ரஜினி அரசியலுக்கு வந்து முதல்வராகிட்டா, அர்ஜுன் சம்பத்து தான் அறநிலையத் துறை அமைச்சருப்பா' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Chennai ,இந்தியா
06-மார்-202008:01:46 IST Report Abuse
Krish இந்த காலத்தில் அத்தைக்கு மட்டுமல்ல , அத்தை பெண்ணுக்கும் மீசை வருகிறது. மஞ்சள் பூசாத முகத்தில் பார்லர் கொண்டு மறைத்து வருகின்றனர். அடுத்த வருட தேர்தல் நல்ல மாற்றங்களை தரலாம். காத்திருந்து பார்க்கலாம்..
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-மார்-202006:18:20 IST Report Abuse
D.Ambujavalli முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். இருபது வருஷமாகியும் அடுத்தடுத்து படங்களை ஒப்புக்கொண்டு தமிழகத்தை முட்டாளாக்குபவர் கட்சி தொடக்கி, அது வென்று, அவர் முதல்வராகி....... நடக்குமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X