ரியாத்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முஸ்லிம்களின் புனித தலமான மெக்கா, மெதினாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கானோர் தொழுகை நடத்தும் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் ஆன்மிக நோக்கங்களுள் முக்கியமானது, வாழ்வில் ஒரு முறையேனும், மெக்கா, மெதினா செல்ல வேண்டும் என்பது தான். அப்படியிருக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மெக்காவில் புனித பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியே கட்டுப்பாடு விதித்துள்ளது.
மெக்காவில் உள்ள காபாவில் உம்ரா எனப்படும் புனித பயணம் மேற்கொள்ள தனது சொந்த நாட்டு மக்களுக்கும் சவுதி அரசு தடை விதித்துள்ளது. இதனால் தினசரி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வந்து செல்லும் காபா பகுதி தடை காரணமாக தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

தற்போது அங்கு மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மேலும், மெக்காவில் உள்ள மசூதியும், மெதினாவில் உள்ள நபிகள் நாயகம் மசூதியும் இரவு தொழுகைக்கு பின் மூடப்பட்டு மீண்டும் அதிகாலை தொழுகைக்காக மட்டுமே திறக்கப்படும் என சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு மசூதியிலும் உணவு பொருள்களை எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE