எல்லை மீறி கடன் வழங்கிய 'யெஸ்' வங்கி

Updated : மார் 06, 2020 | Added : மார் 06, 2020 | கருத்துகள் (50) | |
Advertisement
புதுடில்லி: சொத்துக்களின் எல்லையை மீறி 'யெஸ்' வங்கி கடன் வழங்கியிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.கடன் சுமையால் 'யெஸ்' வங்கி தத்தளித்தது இதனையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள ரிசர்வ் வங்கி, யெஸ் வங்கியின் நிர்வாகக் குழுவை, தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: சொத்துக்களின் எல்லையை மீறி 'யெஸ்' வங்கி கடன் வழங்கியிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.



latest tamil news



கடன் சுமையால் 'யெஸ்' வங்கி தத்தளித்தது இதனையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள ரிசர்வ் வங்கி, யெஸ் வங்கியின் நிர்வாகக் குழுவை, தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 2017 முதல் யெஸ் வங்கியின் சிக்கல்களை மத்திய அரசு கண்காணித்து வந்தது. 2018 முதல் வங்கி கணக்குகள் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வந்தது. 2019ல் இந்த வங்கிக்கு ஒருகோடி அபராதம் விதித்தது. யெஸ் வங்கியின் சில சேர்மன்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
சொத்துக்களின் எல்லையை மீறி வங்கியில் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் கட்டமைப்பு சீரமைக்கப்படும். மறு சீரமைப்புக்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. யெஸ் வங்கியின் நிலையை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



முன்னதாக இன்று காலையில் அமைச்சர் நிர்மலா நிருபர்களிடம் பேசியதாவது:

வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் பத்திரமாக உள்ளது. அவர்களுக்கு இழப்பு ஏதும் ஏற்படாது என ரிசர்வ் வங்கி கவர்னர், என்னிடம் உறுதி அளித்துள்ளார். ரிசர்வ் வங்கியுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என அவர்கள் உறுதியளித்துள்ளனர். தொடர்ந்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பணக்கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
10-மார்-202007:55:36 IST Report Abuse
Amal Anandan இந்த வங்கியின் பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை ஒரு வருடமாக விற்றுவந்துள்ளனர் இதுவரை இவர்களுக்கு இது தெரியாதா? அப்பா ஏன்னா நடிப்பு.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
09-மார்-202016:44:03 IST Report Abuse
Bhaskaran உங்க கட்சிக்காரனுக்குத்தான் கொடுத்திருப்பான் ஆகப்போக நாமம் இம்முறையும் பொதுமக்களுக்கு
Rate this:
sankar - Nellai,இந்தியா
12-மார்-202009:15:05 IST Report Abuse
sankarஅது எப்புடி தம்பி கூசாமல் வாய் விடுகிறீர்கள் - இது முழுக்க முழுக்க காங்கிரஸ் முதலைகளுக்கு கணக்கு வழக்கில்லாமல் கடன் கொடுத்த (திரும்ப வராது என்று தெரிந்தும்) வங்கி - பிரியங்காவின் கிறுக்கலை கோடி ருபாய் கொடுத்து வாங்கிய வங்கி - இதெல்லாம் தெரியுமா தெரியாதா - சும்மா அடுத்தவர் மீது சேற்றை வாரி இறைக்காதே -...
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
09-மார்-202015:44:47 IST Report Abuse
ponssasi இந்த நாட்டில் ஏமாற்றுபவன்தான் சர்வ சுதந்திரமாக வலய வருகிறான். அவன் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. சட்டமும் அவனுக்கு சாதகமாகவே இருக்கிறது, ஆனால் ஏமாறுபவன் படு தான் திண்டாட்டம். வெளீல தலைகாட்டவே வெட்கப்படுவான், கோர்ட் கேஸ் என்று வந்தால் கூனி தலைகுனிவான். இதற்கு ஒரே வழி ஏமாற்றுபவன் குடும்பத்தை தூக்கி உள்ளே போடவேண்டும். அவன் அசையும், அசையா சொத்துக்கள், பினாமி சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படவேண்டும். அவன் சுரண்டிய பணம் மொத்தத்தையும் செட்டில் செய்யும் வரை சிறைச்சாலை விட்டு ஒரு துரும்புகூட வெளிவரக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X