சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 06, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

நடிகர் ரஜினிகாந்த்: கட்சி துவக்குவது குறித்து, ஓராண்டுக்கு பின், மாவட்ட செயலர்களை சந்தித்து ஆலோசித்தேன்; நிறைய கேள்விகளும், பதில்களும் பரிமாறிக் கொண்டோம். ஒரு விஷயத்தில், எனக்கு திருப்தி கிடைக்கவில்லை; அது, எனக்கு ஏமாற்றம் தான். அது குறித்து, இப்போது கூற விரும்பவில்லை; நேரம் வரும்போது கூறுகிறேன்.

'டவுட்' தனபாலு: பல படங்களில் நடித்து வருவதால், கட்சியை நீங்கள் நடத்துவது, 'டவுட்' தான் என, உங்கள் ஆதரவாளர்கள் எண்ணி இருந்தனர். அதை எப்படியோ அறிந்து, அவர்களில் சிலரை அழைத்து, ஒரு மணி நேரம் பேசியுள்ளீர்கள். இதன் மூலம், இன்னும் கொஞ்ச நாளைக்கு, தமிழக, 'டிவி' ஊடகங்கள், யூகச் செய்திகளை அள்ளி வீசும் என்ற நம்பிக்கையில் தான், 'ஏமாற்றத்தை' கிளப்பியுள்ளீர்களோ என்ற, 'டவுட்' எனக்கு!

பா.ம.க., நிறுவனர், ராமதாஸ்: சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான, தேடல் குழுவின் தலைவராக, டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை துணைவேந்தர், ஜெகதீஷ் குமாரை, கவர்னர் நியமித்திருப்பது, கண்டிக்கத்தக்கது. துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு, தகுதியான கல்வியாளர்கள், தமிழகத்தில் இல்லையா?

'டவுட்' தனபாலு: உங்கள் அரசியலுக்கு உயர்கல்வியும் தப்பவில்லையா... அதற்கும் எதிர்ப்பா... 'ஜப்பான்காரன் தயாரித்த காரில் செல்கிறோம்; அமெரிக்காகாரன் கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறோம்; நம்ம நாட்டின் ஒரு மாநில அதிகாரி கூடாது என்றால், என்ன நியாயம் தலைவரே...' என, உங்கள் கட்சியின் சாதாரண தொண்டன் கேட்பது, உங்களுக்கு கேட்கவில்லையோ என்ற, 'டவுட்' எழுகிறதே!
பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: மத ரீதியாக நாட்டை இரண்டாக பிரித்து, லட்சக்கணக்கான மக்களை கொன்ற பாவத்துக்காக, காங்கிரஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். 1636ல் நடந்த சிலுவை யுத்தத்தில், 17 லட்சம் பேர் கொல்லப்பட்டதற்கு, 1992ல், போப் ஜான்பால் மன்னிப்பு கேட்டார். எனவே, இத்தனை ஆண்டுகள் கழித்து, காங்., மன்னிப்பு கேட்டால் தவறில்லை.

'டவுட்' தனபாலு: நீங்க சொல்றதுபடி, காங்கிரஸ், 1947ல் நாட்டை இரண்டாக பிரித்தது என, வைத்துக் கொள்வோம். ஆனால், இப்போது மத்தியில் ஆட்சியிலிருக்கும் உங்கள் அரசு, இந்த நாட்டு மக்களை, மத ரீதியாக பிரிக்கிறது என பலர், புகார் தெரிவிக்கின்றனரே. அதில் உண்மை இருக்குமோ என்ற, 'டவுட்' ஏராளமானோருக்கு இருக்கிறதே; இதை என்ன செய்ய சொல்கிறீர்கள்?

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
08-மார்-202009:53:59 IST Report Abuse
Aaaaa நீ அதுக்கு சரிபட்டுவரமாட்டே
Rate this:
Cancel
Irudayarab Rajan - madurai ,இந்தியா
07-மார்-202011:38:13 IST Report Abuse
Irudayarab Rajan அரசியல் என்பது ரஜினிக்கு ஒத்துவராது வேண்டாம் வெட்டி வேலை சொன்னால் கேளு தம்பி
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-மார்-202006:07:17 IST Report Abuse
D.Ambujavalli கட்சி ஆரம்பிக்கும் முன்னரே, நிர்வாகிகள் கூட்டமா? ரசிகர் மன்றக்காரர்கள், இவர் கட்சி ஆரம்பிப்பார், நாலு காசு பார்க்கலாம் என்றுதான் எதிர்பார்த்திருப்பார்கள் அது நடக்காதோ என்ற நிலையில் பழம் புளிக்கும் என்று ஆகிவிட்டிருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X