சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அரசுகள் விழிப்புடன் இருக்கணும்!

Added : மார் 06, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 அரசுகள் விழிப்புடன் இருக்கணும்!

ஆர்.மனக்காவலன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'குடியுரிமை திருத்த சட்டத்தால், முஸ்லிம்களுக்கு, எந்த பாதிப்பும் கிடையாது' என்பது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, நன்றாக தெரியும்.
அவருக்கு மட்டுமல்ல, இந்த சட்டத்தை எதிர்த்து, கலவரத்தை துாண்டி விட முயற்சி செய்யும், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை மக்கள் கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோருக்கும் தெரியும். இதை விட, 25 கோடி ரூபாய் விலை பேசி, கட்சியை விற்ற, 'காம்ரேட்'களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான், 'இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்டோர், ஒருவரையாவது காட்டுங்கள்' என, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., சவால் விட்டபோது, இந்த சுயநலவாதிகளால் பதிலே கூற முடியவில்லை.

பின், ஏன், தினசரி போராட்டம், ஆர்ப்பாட்டம், கல்வீச்சு நடக்கிறது... தமிழக ஆட்சிக்கு எதிராக கலவரம் செய்து, சிறுபான்மையினரை துாண்டி விட வேண்டும். அவர்களின் ஓட்டு, ஆளும் கட்சிக்கு கிடைக்காமல் செய்து, தாங்கள் வெற்றி பெற, சட்டத்துக்கு புறம்பான காரியங்களை செய்கின்றனர். இப்படி கலவரம் நடந்து, 10 பேர் உயிர் இழந்தால், அதை வைத்து, சுயநல அரசியல் நடத்தி, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவர்; வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்கலாம் என்ற, மோசமான எண்ணமும் தான் காரணம்.

'கூலி உயர்வு கேட்டான், அத்தான்; குண்டாலடிபட்டு செத்தான்' என்ற சொலவடையை போல், 'போடு... எங்களுக்கு ஓட்டு' என, பிண அரசியலை நடத்துவது தான், எதிர்க்கட்சிகளின் தந்திரம்; வழக்கம். மதக் கலவரத்தை துாண்டி, சதி செய்யும் தேசவிரோத கும்பல்களை, கூண்டோடு பிடித்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தால் நல்லது. அதை தவற விட்டால், பயங்கர மதக் கலவரத்தை, நாடு சந்திக்க நேரிடும். இனியாவது, மத்திய, மாநில அரசுகள் விழித்துக் கொள்ள வேண்டும்!

கார் மீது கூடுதல் காதல் ஏற்பட என்ன செய்யணும்!

கே.சூர்யா, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருளாக இருந்தது, கார்; இன்று, அது அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தோர் கூட, வங்கியில் வாகன கடன் பெற்று, கார் வாங்குவது, சர்வ சாதாரண நிகழ்வாக மாறி விட்டது. கார் வாங்குவது, சுலபம்; அதை முறையாக பராமரிப்பதில் தான், பல்வேறு சிரமங்கள் உள்ளன. கார் சரியாக ஓட்டத் தெரியாதோருக்கு, நல்ல ஓட்டுனர் கிடைப்பதே, பெரும் பிரச்னையாக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அவ்வப்போது கார் வைத்திருப்போரை அச்சுறுத்தி வருகிறது. குறைந்தபட்சம், ஆண்டுக்கு ஒருமுறையாவது, 'சர்வீஸ்' செய்யும்போது, ஏற்படும் செலவினம், சில நேரங்களில், வாகன உரிமையாளரை, 'கிறுகிறுக்க' செய்கிறது. சாலை வரி உட்பட, பல்வேறு பிரச்னைகள் இருப்பினும், கார் வைத்திருப்போரை அதிகம் பாதிப்பது, காப்பீட்டு பிரீமியம் தான். ஆண்டுக்கு, 5,000 கி.மீ., ஓட்டுவோருக்கும், 50 கி.மீ., ஓட்டு வோருக்கும், ஒரே மாதிரி காப்பீட்டு பிரீமியம் விதிப்பது, நியாயமாக இருக்காது.

'இதில் மாற்றம் வேண்டும்' என்ற வாகன உரிமையாளர்களின் குரல், இப்போது காப்பீட்டு நிறுவனங்களின் காதில் விழத் துவங்கி உள்ளது. காரில் பயணிக்கும் துாரத்திற்கு ஏற்ப, பிரீமியம் செலுத்தும் முறையை, 'லிபர்ட்டி ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த நல்ல திட்டத்தை, மற்ற காப்பீட்டு நிறுவனங்களும் அறிமுகம் செய்தால், குறைவான துாரம் காரில் பயணிக்கும், வாகன உரிமையாளர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர்.எல்லா காப்பீட்டு நிறுவனங்களும், காரில் பயணிக்கும் துாரத்தை கணக்கிட்டு பிரீமியம் செலுத்தும், புதிய காப்பீட்டு திட்டங்களை உருவாக்க, ஐ.ஆர்.டி.ஏ., எனப்படும், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான், சொந்தமாக கார் வைத்திருப்போருக்கு, இன்னும் கூடுதல் காதல் ஏற்படும்!

ஓய்வூதியோருக்கு பணப் பலன்கள் உடனே கிடைக்குமா?

இ.பி.பாஸ்கர், ஆலமரத்துப்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: திண்டுக்கல் மண்டலம், அரசு போக்குவரத்துக் கழகத்தில், 33 ஆண்டுகள் பணிபுரிந்து, 2019 மே மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். எட்டு மாதங்கள் முடிவுற்ற நிலையிலும், எனக்கு வர வேண்டிய, பணி ஓய்வு கால பண பலன்கள் இதுவரை கிடைக்கவில்லை.

பென்ஷன் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பணி காலங்களில் பிடித்தம் செய்யப்பட்ட, வருங்கால வைப்பு நிதி தொகை கூட கிடைக்கவில்லை.'இந்த பணத்தை, வைப்பு நிதி நிறுவனத்திற்கு செலுத்த தேவையில்லை; பிடித்தம் செய்யப்படும் தொகையை, நிர்வாகமே வைத்து, செலவுகள் செய்யலாம்' என, வைப்பு நிதி நிறுவனமே அதிகாரம் வழங்கியுள்ளதாம்; இது, எவ்விதத்திலும் நியாயமற்ற செயல்!
மற்ற அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கினால், போக்குவரத்துத் துறை ஏற்படுத்தப்பட்ட நல்ல நோக்கமே, சீர்குலைந்து விடும். ஓய்வு பெறும் பணியாளர்களின் வாழ்வும் கேள்விக்குறியாகி விடும். இம்மாதிரியான அனுமதியை ரத்து செய்து, மற்ற துறைகளை போல, போக்குவரத்து துறையையும் மாற்றியமைக்க வேண்டும். இதனால், ஓய்வு நாளிலேயே பணம் கிடைத்து விடும். என் பென்ஷன் தொகையில், மாதம், 7,800 ரூபாய் வீதம், பிடித்தம் செய்யப்படுகிறது. இதன்படி, கடன் தொகை வழங்கும் முன்னே, இதற்கான பிடித்தம் ஆரம்பமாகிறது.

என், கடன் தொகையில் கடன் பெறாமலேயே, 62 ஆயிரத்து, 400 ரூபாய் செலுத்திஉள்ளேன். பண பலன்கள் எதுவும் கிடைக்காமலும், பென்ஷன் தொகையில், கடன் பிடித்தம் செய்வதாலும், வரும் பென்ஷன் தொகையில், மருத்துவச் செலவிற்கே, 25 சதவீதம் செலவிட வேண்டியுள்ளது. ஓய்வூதிய பிரச்னைகளை களைந்திட, அரசு போக்குவரத்துக்கழகத்தை மேம்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பை சரி செய்து, உரிய நேரத்தில் பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு, அன்றே பணபலன்கள் வழங்க வேண்டும். இதை அரசு கவனிக்குமா?

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Neyveli,இந்தியா
07-மார்-202019:26:56 IST Report Abuse
Mohan காங்கிரஸ் கட்சியும் தி மு க வும் பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கவில்லை என்று வாக்கு வங்கிக்காக போராடுகின்றார்கல அவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் என்ன செய்தார்கள்? உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது செய்திருக்கலாமே இலங்கை தமிழருக்கும் ஏதும் செய்யவில்லை. தரும்போது வம்பு செய்து நாட்டு மக்களிடம் பிளவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். மக்கள் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-மார்-202008:24:30 IST Report Abuse
D.Ambujavalli நீதிமன்றங்கள் ஓயாது கொடுத்த அழுத்தம் காரணமாக ஒரு மாதிரி oor ஆட்சித் தேர்தலை நடத்திக் காட்டிவிட்டார்கள். மற்றபடி எந்த அதிகாரத்தையோ, நிதியோ கொடுக்கவில்லை. இந்த அழகில் நிர்வாகமானது
Rate this:
Cancel
Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா
07-மார்-202005:48:24 IST Report Abuse
Jagath Venkatesan ஊராட்சி நிர்வாகம் தேர்தெடுக்கப்பட்டும் பஞ்சாயத் பைப்புகளில் குடிநீர் வருவது இல்லை. அரசு நிர்வாகம் இருந்தபோது கூட அவ்வப்போது சரி செய்யப்பட்டு தட்டுப்பாடு நீக்கப்பட்டது ....வரும் கோடைகாலம் தண்ணீர் கஷ்டம் வரும் இப்போதே அதறகான நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும்.. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர்,ஊராட்சி நிர்வாகத்தலைமை ,தனி கவனம் செலுத்த வேண்டுகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X