சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கைதட்டலை அமைச்சர் குவிக்கிறாரே பா...'

Added : மார் 06, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
'கைதட்டலை அமைச்சர் குவிக்கிறாரே பா...'

மாநில பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மதுரை காமராஜ் பல்கலையில், விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு பேச எழுந்த போது, மாணவர்களின் விசில் சத்தம் காதை பிளந்தது. சிறிது நேரம் காத்திருந்த அமைச்சர் ராஜு, 'துணைவேந்தர் கிருஷ்ணன், நம்ம சொந்தக்காரர்; பல்கலையில், பேரிடர் மேலாண்மை தொடர்பாக, ஆய்வு மையம் துவங்க, அவர் முன் வர வேண்டும். வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், நம்ம ஊரு மருமகன்; அவர், மதுரையில் தான் பொண்ணு எடுத்துருக்காரு.

'முதல்வர், இ.பி.எஸ்., கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர். அரசியல்ல, அவரை யாரும், 'அவுட்' ஆக்க முடியாது. 'பேட்' பிடிச்சா, 'ரன்' அடிச்சுக்கிட்டே இருப்பாரு; பந்து போட்டா, 'விக்கெட்' எடுத்துக்கிட்டே இருப்பாரு' என்றார். அமைச்சரின் பேச்சுக்கு, மாணவர்கள் கை தட்டியபடியே இருந்தனர். மூத்த நிருபர் ஒருவர், 'மேடைக்கு மேடை சம்மந்தமே இல்லாம, எதையாவது பேசி அமைச்சர் கைதட்டலை குவிக்கிறாரே பா...' என, 'கமென்ட்' அடிக்க, மற்ற நிருபர்கள், 'ரொம்ப உணர்ச்சி வசப்பட வேண்டாம்... அமைச்சர் பேச்சை நிறுத்தணுங்கிறதுக்காக, மாணவர்கள் கை தட்டுறாங்க...' என்றதும், அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-மார்-202006:11:17 IST Report Abuse
D.Ambujavalli கைதட்டலால் பேச்சை நிறுத்தச் சொல்கிறார்கள் என்பதை அவர் புரிந்துகொள்வாரா? அரசியல்வாதிகள் எல்லாரும் அப்லாஸ் அடிக்ட்கள் ஆயிற்றே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X