சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'ராதாரவிக்கு இந்த பேச்செல்லாம் சாதாரணப்பா!'

Added : மார் 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'ராதாரவிக்கு இந்த பேச்செல்லாம் சாதாரணப்பா!'

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், 'பாக்., - வங்கதேச பயங்கரவாதிகளின் கூடாரமாகும் திருப்பூரை மீட்டெடுப்போம்' என வலியுறுத்தியும், இந்து முன்னணி சார்பில், ஒரு கோடி நாமாவளி தொடர் பிரார்த்தனை, திருப்பூரில் நடந்தது.

அவிநாசி ரோடு, புஷ்பா சந்திப்பு, பத்ரகாளியம்மன் கோவில் முன் நடந்த நிகழ்ச்சியில், நடிகர் ராதாரவி, 'குடியுரிமை திருத்த சட்டம், இந்தியாவை முறைப்படுத்துகிறது. அதாவது, வம்சாவளியாக உள்ளவர்களை கணக்கு எடுக்கிறது. முஸ்லிம்களை வெளியேற சொல்லவில்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் உள்ளவர்களை, இந்தியாவுக்கு வர வேண்டாம் என்கின்றனர்.

'ஓட்டுக்காக, எதிர்க்கட்சியினர், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக துாண்டி விடுகின்றனர். கருணாநிதி இருந்திருந்தால், இச்சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டார். இப்போது, தி.மு.க., தலைமை சரியில்லை. தி.மு.க., உருப்படாமல் இருப்பதற்கு, வீரமணி தான் முக்கிய காரணம்' என்றார். பா.ஜ., மூத்த நிர்வாகி ஒருவர், 'தி.மு.க., உள்ளாற என்ன நடக்குதுன்னு, 'புட்டு புட்டு' வைக்கிறாரே...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் ஆமோதித்தனர்.


'பலத்தை காட்டியிருக்க வேண்டியது தானே...!'


சென்னை, திருவொற்றியூர் மேற்கு பகுதி, அ.ம.மு.க., செயலர், கே.ஏ.குப்பன் இல்ல திருமண விழா நடந்தது. இதில், கட்சியின் பொதுச் செயலர், தினகரன் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தி பேசினார். பின், நிருபர்களிடம் அவர், 'திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால், அ.ம.மு.க., கண்டிப்பாக போட்டியிடும்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'அப்படி சொல்ற தினகரன், இதற்கு முன் நடந்த விக்ரவாண்டி, நாங்குநேரி இடைதேர்தலில் போட்டியிட்டு, தன்னோட பலத்தை காட்டியிருக்க வேண்டியது தானே.... இன்னும் ஓராண்டில், அ.தி.மு.க., ஆட்சி முடிய போகிறது. எப்படியும் இடைத்தேர்தல் நடக்காதுன்னு தெரிஞ்சு, சும்மா அடிச்சு விடுறாரு பாரு...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் சிரித்தனர்.


'அமைச்சர் இதைச் சொல்ல மறந்துட்டாரே!'

முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய்த் துறை திட்டங்கள் குறித்து, மதுரை கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர் உதயகுமார் ஆய்வு செய்தார். அப்போது, ஆர்.டி.ஓ.,க்கள், தாசில்தார்கள் உடனிருந்தனர்.

அவர்களிடம் அமைச்சர், 'பொதுவாக கலெக்டர் குறை தீர்க்கும் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம், முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களில், மனுக்கள் அதிகளவில் வரும். ஆனால், தற்போது குறைந்துள்ளன. அந்தளவிற்கு மனுக்கள் மீது, நீங்கள் நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள். முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட தேவைகள் இருப்பதால், மனுக்களை வழங்குகின்றனர்.

'நான் கூட, அரசு விழாக்களுக்கு கிராமங்களுக்கு செல்லும் போது, அங்கு வருவோர், ஆரத்தி தட்டுடன் வருகின்றனர். ஆரத்தி எடுத்த கையுடன், சில மனுக்களையும் என்னிடம் வழங்கி, 'இதையாவது செய்து தாங்களேன்' என்கின்றனர்' என்றார். அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர், 'ஆரத்தி எடுக்கறவங்களைப் பார்த்தாலே, தேர்தல் நினைவு வந்திடுது... ஆரத்தி தட்டுல காசை அள்ளிப் போட்டுடறேன்னும் சொல்லலாமே...' என முணுமுணுக்க, அருகில் நின்றிருந்த மற்ற நிர்வாகிகள், கமுக்கமாகச் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
08-மார்-202011:29:31 IST Report Abuse
karutthu பொதுவாக கலெக்டர் குறை தீர்க்கும் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம், முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களில், மனுக்கள் அதிகளவில் வரும். ஆனால், தற்போது குறைந்துள்ளன. பதில் :->நாங்கள் வெறுத்து போய் மனுக்கள் கொடுப்பதில்லை ஏனென்றால் கைநிறைய சம்பளம் வாங்கியும் லஞ்சம் கேட்கிறார்கள் இவன்களிடம் லஞ்சம் கொடுத்து ஏமாறுவதற்கு பதில் மனுக்களை கைகொடுக்க வேண்டாம் என முடிவெடுத்து விட்டோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X