மோடியின் நம்பிக்கை நட்சத்திரம்: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

Updated : மார் 07, 2020 | Added : மார் 07, 2020 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: 'கொரோனா' வைரஸ் பரவல், உலகம் முழுக்க பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல நாடுகளின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது.நம் நாட்டில், வைரஸ் பாதிப்பைத் தடுக்க, பிரதமர் மோடி, பல ஏற்பாடுகளை செய்துள்ளார்; தினமும், அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, நிலைமையை கண்காணித்து வருகிறார்.கொரோனா தொடர்பாக, அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று கவனித்து

புதுடில்லி: 'கொரோனா' வைரஸ் பரவல், உலகம் முழுக்க பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல நாடுகளின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
latest tamil news


நம் நாட்டில், வைரஸ் பாதிப்பைத் தடுக்க, பிரதமர் மோடி, பல ஏற்பாடுகளை செய்துள்ளார்; தினமும், அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, நிலைமையை கண்காணித்து வருகிறார்.கொரோனா தொடர்பாக, அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று கவனித்து வருபவர், சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்.சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள், சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை, வெளிநாட்டிலிருந்து வருபவர்களை கண்காணிப்பது என, பல நடவடிக்கைகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.கண், மூக்கு, தொண்டை சிகிச்சையில், 'ஸ்பெஷலிஸ்டான' ஹர்ஷ் வர்தன், 1990ல், போலியோ சொட்டு மருந்தை பிரபலமாக்கியவர்.latest tamil news


2014ல், மோடி பிரதமரான போது, இவர் தான் சுகாதாரத் துறை அமைச்சர். இவருக்கும், மோடிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஐந்தே மாதங்களில் வேறு அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டார்.ஆனால், 2019ல், மோடி மீண்டும் பிரதமரான பின், ஹர்ஷ் வர்தனுக்கு சுகாதாரத் துறை கொடுக்கப்பட்டது. இந்தியாவில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த, இவர் தான், மோடியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

Nellai Ravi - Nellai,இந்தியா
08-மார்-202013:03:26 IST Report Abuse
Nellai Ravi அவர், டெல்லி முதல்வர் பதவிக்கு போட்டியிட்டதால், அவர் சுகாதார துறையில் இருந்து மாற்றப்பட்டார். கருது வேறுபாட்டால் அல்ல
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-மார்-202006:16:53 IST Report Abuse
Natarajan Ramanathan எதிர்கட்சிகள்கூட குறைசொல்ல முடியாத மிக நல்ல மனிதர்.
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
08-மார்-202006:16:07 IST Report Abuse
TamilArasan மருத்துவம் படித்து பட்டம் வாங்கிய டாக்டர் இவர்.... நம் ஊர் தற்குறி அரசியல் வியாதிகள் போன்று பணம் கொடுத்து சம்பந்தம் இல்லாத ஒரு சான்றிதழ் வாங்கி வைத்துக்கொண்டு, பெயருக்கு முன் டாக்டர் பட்டம் போட்டு மருத்துவ படிப்பை அசிங்க படுத்துபவர் இல்லை
Rate this:
selva - Chennai,இந்தியா
08-மார்-202007:37:11 IST Report Abuse
selvaஆமாம் .. //நம் ஊர் தற்குறி அரசியல் வியாதிகள் போன்று //கிரண்பேடி .. இரானி ......
Rate this:
08-மார்-202010:21:56 IST Report Abuse
சரவணன்தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜய பாஸ்கர் அவர்களும் கல்லூரியில் பயின்ற மருத்துவரே!!! ஒருத்தரை புகழ மற்றவரை மதியின்றி தூற்ற அவசியம் இல்லை....
Rate this:
08-மார்-202010:21:53 IST Report Abuse
சரவணன்தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜய பாஸ்கர் அவர்களும் கல்லூரியில் பயின்ற மருத்துவரே!!!...
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
13-மார்-202014:47:21 IST Report Abuse
TamilArasanஐயோ சாமிகளா நான் சொன்னது சமீபத்தில் நடிகை குஸ்பு தனக்கு அமெரிக்கா பல்கலை கழகத்தில் தமிழுக்காக டாக்டர் பட்டம் கொடுத்துள்ளார்கள் என்று கூறியிருந்தார், இது போன்று பலர் தமிழகத்தில் தங்களின் பெயருக்கு முன் டாக்டர் பட்டம் போட்டுள்ளார்கள் - உதாரணம் டாக்டர் கலைஞர் என்று படித்துள்ளேன் - என்னை பொறுத்தவரை மருத்துவம் படித்தவர்கள் மட்டும்தான் இந்த டாகடர் பட்டத்தை பயன்படுத்தவேண்டும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X