அரசியல் செய்தி

தமிழ்நாடு

விரைவில் மயிலாடுதுறை தனி மாவட்டமாகிறது! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Updated : மார் 08, 2020 | Added : மார் 08, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
விரைவில் மயிலாடுதுறை தனி மாவட்டமாகிறது! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நாகப்பட்டினம் : ''நாகையில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க தேவையான நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது'' என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

நாகை அடுத்த ஒரத்துாரில் 366.86 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிக்கு முதல்வர் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். பின் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை துவக்கிவைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதல்வர் பழனிசாமி பேசியதாவது: காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தமிழக அரசு. இப்பகுதியில் வேளாண்மைக்கு கேடு விளைவிக்கும் அனைத்து தொழிற்சாலைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும். உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லுாரிகள் துவங்க மத்திய அரசிடம் அனுமதி பெற்று தமிழகம் சரித்திர சாதனை படைத்துஉள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம் பிடித்து ஐந்து ஆண்டு களாக தேசிய விருது பெற்று வருகிறது. புற்றுநோய்க்கு உயரிய சிகிச்சை அளிக்க 10 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 190 கோடி ரூபாய் மதிப்பில் நவீன கருவி அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, கோவை அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் உயரிய சிகிச்சை கிடைக்கும் வகையில் 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு தமிழகத்தில் மருத்துவர் பணியிடங்கள் காலியில்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளோம். இந்தியாவிலேயே சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் தான் முன்னணியில் உள்ளது. 'இந்த அரசு மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை' என பொய்யான பிரசாரத்தை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பரப்பி வருகிறார். குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடந்ததால் டெல்டாவில் கூடுதலாக 2.30 லட்சம் ஏக்கர் விவசாயம் நடக்கிறது.

தமிழக அரசு மூன்று ஆண்டுகளில் தினந்தோறும் பல்வேறு சவால்களையும் நெருக்கடி களையும் சமாளித்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. வேதாரண்யத்தில் வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். நாகையை பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க தேவையான நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது. 'மத்திய அரசு நல்ஆய்வு திறனுக்கான தர வரிசையில் தமிழக அரசுக்கு முதலிடம் எப்படி கொடுத்தது; அவரை அழைத்து வாருங்கள்; அடிக்கிறேன்' என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.

நல்ல நிர்வாகத்தை கொடுக்க அரசுக்கு துாண்டுகோலாக இருப்பது தான் எதிர்க்கட்சி. ஆனால்இவர் அனைத்து அமைச்சர்களும் அதிகாரிகளும் பட்ட கஷ்டத்திற்கு கிடைத்த ஆளுமைதிறனுக்கான பாராட்டை கொச்சைப்படுத்தி பேசுகிறார். பாராட்ட மனமில்லை என்றாலும் குறை கூறாமல் இருந்தால் போதும், இவ்வாறு பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya -  ( Posted via: Dinamalar Android App )
08-மார்-202023:04:37 IST Report Abuse
Jaya இது மட்டுமா.. இத விட இன்னும் ஸ்பெஷல் ஐட்டம் லாம் இருக்கு ஆவடி மாவட்டம்அம்பத்தூர் OT மாவட்டம்அம்பத்தூர் எஸ்டேட் மாவட்டம்வாவின் மாவட்டம்லூகாஸ் மாவட்டம்கலெக்டர் நகர் மாவட்டம்அண்ணா நகர் மாவட்டம்... Etc etc
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
08-மார்-202021:31:15 IST Report Abuse
தமிழ்வேள் இங்கு மாவட்ட சீரமைப்புக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் உள்ளன ..மாவட்ட தலைநகரத்துக்கு தொடர்பின்றி எந்த அரசு சார்ந்த வேலையையும் முடிக்க இயலாது மாவட்ட தலைநகர் என்பது மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்திலிருந்து அதிகபட்சம் நூறு கிமீ அல்லது ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் மட்டுமே இருக்கவேண்டும் ..ஒரு எம்பி தொகுதிக்கு ஒருமாவட்டம் என்பது கூட நல்லதே ....மாநிலத்தின் மையத்தில் தலைநகரம் இல்லாத காரணத்தால் தான் சென்னை தாறுமாறான தேவையற்ற வீக்கம் அடைந்து இப்போது வெடிக்கும் நிலையில் உள்ளது எம்ஜிஆர் பதவிக்கு வந்ததவுடன் செயல்படுத்த எண்ணியதைப்போன்று திருச்சி தமிழக தலைநகராக ஆகி இருந்தால் இத்துணை தேவையற்ற குடியிருப்பு பகுதிகள் ஏரிகளை அழித்து உருவாக்கி இருக்காது ..தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் திருச்சி அதிகபட்சம் ஏழு மணிநேர பயண தூரம் மட்டுமே ,,, மற்றபடி மூன்று மணிநேர பயணதூரம் வரை ரயில் இணைப்பு அதிகம் சீசன் டிக்கெட் பயணிகள் மட்டுமே அதிகரித்திருப்பர் .தங்கும் விடுதிகள் பொது குளியல் கழிவறைகள் உடைமாற்றும் இடங்கள் மட்டுமே கொண்டு குறைந்த அளவு விரிவாக்கத்துடன் திருச்சி கட்டுப்படுத்தப்பட்ட்ட மக்கள் நடமாட்டதோடு சரியான தலைநகர தேர்வாக இருந்திருக்கும் ...காலையில் வந்தவன் மாலையில் ஊர் பார்த்து போய் சேர்பவனாக இருப்பான். நீண்ட பயண நேரம் தூரம் தேவையற்ற குடியிருப்புகளை இங்கு வலுக்கட்டாயமாக உருவாகியுள்ளது ......மாவட்ட பிரிவினை மிக நல்லதே
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
08-மார்-202019:56:51 IST Report Abuse
konanki அவங்கவங்களுக்கு தெரிஞ்சத செய்யறாங்க. எடப்பாடிக்கு நடவு தெரியும் செஞ்சார். தீய சகதிக்கு ...
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
08-மார்-202021:33:29 IST Report Abuse
Pannadai Pandianதீய சக்தி கட்டுமர குடும்பத்துக்கு திருட தெரியும்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X