பொது செய்தி

தமிழ்நாடு

'விவசாயிகளுக்கு அச்சம் வேண்டாம்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை

Added : மார் 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருவாரூர்: 'காவிரி டெல்டா பகுதியை சேர்ந்த விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. அவர்களை வேளாண் பாதுகாப்பு சட்டம் காப்பாற்றும்' என, முதல்வர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவித்த, முதல்வர் பழனிசாமிக்கு, திருவாரூரில், நேற்று இரவு, விவசாயிகளின் நன்றி பாராட்டு விழா நடந்தது.

இதில், பங்கேற்ற முதல்வர் பழனிசாமி பேசியதாவது: இன்று ஒரு எழுச்சி நாள். இதில், நான் மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயிகள் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்பது எனக்கு தெரியும். நானும் ஒரு விவசாயி தான். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து, இதற்கு, சட்ட முன்வடிவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை, உணர்வுப்பூர்வமாக கொண்டு வந்தேன். ஒரு விவசாயியாக இருந்து, இந்த சட்டம் கொண்டு வந்ததில் பெருமைப்படுகிறேன். தமிழகத்தில், 65 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி உள்ளனர். உழவுத் தொழில் கடினமானது. விவசாயிகள், வெயில் - மழை பாராமல் கஷ்ட படவேண்டும். விவசாயத்தை, கண்களை இமை காப்பது போல் பாதுகாக்க வேண்டும். இந்த ஆட்சி மூன்று மாதம்தான்; ஆறுமாதம் தான் என்றனர். தற்போது, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பரிசீலனை செய்து, நல்ல முடிவு எடுக்கப்படும். விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். விவசாயிகளுக்கு, இந்த சட்டம் துணை நிற்கும். குடிமராமத்து பணிகளை குறை சொல்கின்றனர். ஆனால், விவசாயிகள் பாராட்டுகின்றனர். இவ்வாறு, பழனிசாமி பேசினார். விழாவில், முதல்வருக்கு, 'காவிரி காப்பாளர்' என்ற பட்டம், விவசாயிகள் சார்பில் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manis - doha,கத்தார்
24-மார்-202011:47:11 IST Report Abuse
manis .. வாழ்க வளமுடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X