பொது செய்தி

இந்தியா

கேரளாவில் 5 பேருக்கு கொரோனா

Updated : மார் 08, 2020 | Added : மார் 08, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
corono, coronovirus, india, kerala,  italy, கொரோனா, இத்தாலி, இந்தியா, கேரளா

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபரம்: கேரளாவில், 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் உண்டான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் பரவ துவங்கியது. இந்தியாவில், முதலில் கேரளாவை சேர்ந்த மாணவி தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர், சீனாவில் படித்தவர் ஆவார். மேலும், அங்கு இருவர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் 34 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த வைரஸ் கண்டு மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு அறிவறுத்தியிருந்தது.

இந்நிலையில், கொரோனா வைரசால் கேரளாவில் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அதில், ஒரு குழந்தையும் அடக்கம்.


latest tamil news
இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறுகையில், விமான நிலையத்தில் அவர்கள் சென்று வந்த நாட்டை பற்றி கூறவில்லை. சோதனைக்கு ஒத்துழைக்கவும் இல்லை. மருத்துவமனையில் சேர மறுத்துவிட்டனர்.அவர்கள் இத்தாலி சென்று திரும்பினர். திரும்பிய உடன் உறவினர்களை சந்தித்தனர்.
அவர்களில் ஒருவர் கொரோன அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தாலி சென்று வந்த குடும்பத்தினரும் தனி வார்டில் சிகிச்சை பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Routhiram Palagu - Chennai,இந்தியா
08-மார்-202018:26:48 IST Report Abuse
Routhiram Palagu Passanger passport vachu avanga engarndhu travel panranganu kandupudika mudiyalayah? First immigration database poi yaarlam Italy iran China korea poi vandrukanganu list edunga. Apram avanga veetuku poi check pannunga please. Ipdi careless ah irndhutu avanga sollala ivnga sollalanu solradhu sariah padala.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-மார்-202016:31:08 IST Report Abuse
Endrum Indian அது இரானிலிருந்து வந்த கேரள முஸ்லிம்களால் வந்திருக்கும்
Rate this:
Cancel
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-மார்-202014:17:54 IST Report Abuse
Ramki கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பட்டும் திருந்தாத தற்குறி ஜென்மங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X