அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய ரவுண்டானா இடிந்தது; நூலிழையில் தப்பினார் அமைச்சர்

Added : மார் 08, 2020 | கருத்துகள் (71)
Share
Advertisement
மதுரை புதிய ரவுண்டானா இடிந்தது, நூலிழையில் தப்பினார் அமைச்சர், செல்லூார் ராஜூ, அதிமுக,

இந்த செய்தியை கேட்க

மதுரை: மதுரை மாநகராட்சி சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மதுரை நகர் முழுவதும் ஆங்காங்கே ரவுண்டானா கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் மதுரையின் தொன்மையையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் விதத்திலான சிலைகள் வைத்து வருகின்றனர்.

மதுரை செல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில், தமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்றான கபடி குறித்த சிலைகள் வைக்கவுள்ளனர்.


latest tamil news


மதுரை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள ரவுண்டானாவில் கபடி போட்டியை நினைவு கூறும் வகையில் கபடி வீரர்களின் கற்சிலையை அமைப்பதற்கான இடத்தை, அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்ய வந்தார். திறப்பு விழா காணாத அந்த ரவுண்டானாவில் பூசப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் திடீரென உடைந்து உள்ளே சென்றதால், தொண்டர்கள் பள்ளத்திற்குள் சிக்கினர். அதிர்ஷ்டவசமாக அமைச்சர் உயிர் தப்பினார்.

அதன் துவக்க விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இன்று (மார்ச் 8) நடந்தது. விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, அவர் நின்றிருந்த ரவுண்டானா திடீரென இடிந்தது. இதில் உடனிருந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் உள்ளே விழுந்தனர். நூலிழையில் அமைச்சர் தப்பினார். புதிதாக கட்டப்பட்ட ரவுண்டானா இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
11-மார்-202014:53:33 IST Report Abuse
S.Ganesan இவிங்க கான்ட்ராக்ட் கொடுத்தவனோட லட்சணம் தெரிந்து போயிற்றே. அவனை கூப்பிட்டு நுங்கெடுக்க வேண்டாமா ?
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
10-மார்-202009:57:12 IST Report Abuse
spr ஆனால் இந்த மாதிரி விபத்துக்களில் இவர்கள் எவரும், கொஞ்சம் கூட பாதிக்கப் படுவதில்லையே என்?அப்படி எதுவும் நடந்தால் எப்பொழுதாவது நல்ல கட்டுமானங்கள் உருவாகும்
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
10-மார்-202008:13:03 IST Report Abuse
siriyaar ஓட்டுக்கு இரண்டாயிரம் அதுபோக எல்லா நாலும் குவர்ட்டர் பிரியாணி தேர்தல் தொடங்கி முடியும் வரை, அப்புறம் எப்படி ரவுண்டானா கட்ட சிமெண்ட் வரும், எல்லாம் பிளை ஆஸ் போட்டு கட்டியிருப்பாங்க. மக்கள் ஓழக்கமில்லாத ஊருக்கு மக்களாட்சி சரிபட்டு வராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X