சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

டவுட் தனபாலு

Added : மார் 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 டவுட் தனபாலு

பா.ஜ., - எம்.பி., சுப்ரமணியசாமி: வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோற்க வேண்டும்; அதற்கான அனைத்து முயற்சி களையும் செய்வேன். அ.தி.மு.க.,வை வழி நடத்த, சசிகலாவுக்கு திறமையும், அனுபவமும் உள்ளது. அவரை மீண்டும், அ.தி.மு.க.,வில் சேர்ப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை; அதில் தானே, அவர் இருக்கிறார்.

டவுட் தனபாலு: அ.தி.மு.க., வுல தான் சசிகலா இருக்கிறார் என, அவருக்கே தெரியாத உண்மையை நீங்க தான் கண்டுபிடிச்சு சொல்லியிருக்கீங்க... சசிகலா, தண்டனை முடிஞ்சு, தானா விடுதலை ஆகிடலாம்னு அமைதியா இருக்காங்க... உங்களை மாதிரி ஆட்களின் ஏடாகூடமான கருத்துகள் தான், அவங்க விடுதலைக்கு, 'ஆப்பு'ங்கிறதுல, 'டவுட்'டே இல்லை...!

அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் கமிஷன் கடிதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, சட்டசபை, லோக்பசா தேர்தல்களில், வேட்பாளர் தேர்வின் போது, அவர்கள் மீதான குற்ற வழக்கு விபரங்களை தெரிவிக்க வேண்டும். அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தையும், குற்ற வழக்கு இல்லாத மற்றவர்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை ஆகிய விபரங்களையும், அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.

டவுட் தனபாலு: சரியா போச்சு... ஒருத்தர் மீதான குற்றங்களின் எண்ணிக்கை கூடக் கூடத்தான், அவருக்கு வேட்பாளர் ஆவதற்கான தகுதிகள் வரும்கிறது தான், பெரும்பாலான அரசியல் தலைமைகளின் எண்ணமா இருக்கு... எல்லாத்தையும் பகிரங்கமா வெளியிடுங்கன்னு இப்படி கிடுக்கிப்பிடி போட்டா, அரசியல் கட்சிகள் தவறான தகவல்களை தான் தரும்கிறதுல, 'டவுட்'டே இல்லை...!
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்: பா.ஜ., ஆட்சியில், நிதி நிறுவனங்களில் நடந்த தவறான நிர்வாகமே, யெஸ் வங்கியின் தோல்விக்கு காரணம். இது குறித்து, ரிசர்வ் வங்கி முழுமையாக விசாரித்து, இந்த தவறுக்கு யார் பொறுப்பு என்பதை கூற வேண்டும். யெஸ் வங்கியை காப்பாற்றுவதற்காக, ஸ்டேட் வங்கி, 2,450 கோடி ரூபாய் முதலீடு செய்து, 49 சதவீத பங்குகளை எடுத்துக் கொள்வது, வழக்கத்துக்கு மாறானது.

டவுட் தனபாலு: யெஸ் வங்கியின் மோசடியை யாரும் நியாயப்படுத்த முடியாது... அதுக்கு முன்னாடி, உங்க காங்கிரஸ் ஆட்சியில, பங்கு சந்தை மோசடி, வங்கி, நிதி நிறுவனங்களின் மோசடிகள் எல்லாம் நிறையவே நடந்திருக்கு... ஸ்டேட் வங்கி இப்ப செய்றதை, உங்க ஆட்சியில செய்திருந்தா, 'மக்கள் பணத்தை காப்பாற்றவே இந்த நடவடிக்கை'ன்னு பூசி மெழுகியிருப்பீங்க அப்படிங்கிறதுல, எந்த டவுட்டும் இல்லை...

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-மார்-202006:22:08 IST Report Abuse
D.Ambujavalli தேர்தல் ஆணையம் எப்போதுமே தும்பை விட்டு வாலைப்பிடிப்பது தான் வழக்கம் கட்சிகள் வேட்பாளர் விவரம் கொடுக்கும் போதே சரிபார்க்க முடியாதா? தெரிந்தும் தெரியாமல், குற்றவாளிகளைக் ‘கண்டுக்காமல்’ அனுமதித்து ஆளும் கட்சியின் கிளையாகத்தானே செயல்படுகிறது
Rate this:
Cancel
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
09-மார்-202005:32:55 IST Report Abuse
Subbanarasu Divakaran இந்த சிதம்பரம் பெருந்தகை ஏன் இப்படி உளறுகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X