சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

வேலை தந்த மகராசன் நல்லாயிருக்கணும்

Added : மார் 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
வேலை தந்த மகராசன் நல்லாயிருக்கணும்

துப்புரவு தொழிலாளர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி, கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடந்தது.

அதில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பேசுகையில், 'நம் முதல்வர், இ.பி.எஸ்., எளிமையானவர். மூணு மாசத்துல போயிடுவார்; ஆறு மாசத்துல போயிடுவாருன்னு சொன்னாங்க; மூணு வருஷம் ஆட்சி செஞ்சு, அருமையான திட்டங்களை செயல்படுத்துறாரு. 11 மருத்துவக் கல்லுாரிகளை கொண்டு வந்திருக்காரு.

'துப்புரவு தொழிலாளர்களை நான் நேசிக்கக் கூடியவன். அவர்களை நேரில் பார்த்தால், சாப்பிட்டீர்களா என கேட்காமல் செல்ல மாட்டேன். கடவுளை விட சிறந்தவர்கள் துப்புரவு தொழிலாளர்கள்' என்றார்.இதைக் கேட்ட, பணி நியமன உத்தரவு பெற்ற ஒரு பெண், 'அடடே, நம்மை எந்த அளவுக்கு உயர்வா சொல்றாரு. வேலை கொடுத்த இந்த மகராசன் நல்லாயிருக்கணும்' எனச் சொல்ல, பக்கத்தில் இருந்த மற்றொரு பெண், அவரது கருத்தை ஆமோதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-மார்-202006:24:26 IST Report Abuse
D.Ambujavalli விளம்பரத்துக்காக சொல்வதெல்லாம் உண்மையாகுமா ? எத்தனை லஞ்சம் பாக்கெட்டுக்குப் போனதோ?
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
09-மார்-202004:59:05 IST Report Abuse
 nicolethomson எனக்கு தெரிந்து ஒரு கோவை பெண்ணுக்கு போஸ்ட் ஆபிசில் வேலை கொடுத்து அதையும் இப்போ தட்டி பறித்து விட்டனர் என்று புலம்பினார் பேருந்தில் பயணம் செய்த அந்த பெண்ணின் தாத்தா ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X