யெஸ் வங்கியால் பலன் பெற்ற பிரியங்கா: பா.ஜ., குற்றச்சாட்டு

Updated : மார் 08, 2020 | Added : மார் 08, 2020 | கருத்துகள் (82)
Share
Advertisement
PriyankaGandhi,painting,YESBank,BJP,Congress,BharatiyaJanataParty,பாஜ,பிரியங்கா,ஓவியம்,காங்கிரஸ்,யெஸ்வங்கி

புதுடில்லி: யெஸ் வங்கியால் காங்., தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா பலன் பெற்றார் என பா.ஜ., குற்றம் சாட்டி உள்ளது. இதனை தொடர்ந்து பா.ஜ., - காங்., இடையே வார்த்தைப்போர் நடந்தது.

நிர்வாகச் சீர்கேடு, வாராக் கடன் உயர்வு போன்ற பிரச்னைகளில் சிக்கிய, யெஸ் வங்கி, 5ம் தேதி இரவு, ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனைதொடர்ந்து யெஸ் வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டுக்கு பின் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், யெஸ் வங்கி விவகாரத்தில் சோனியா குடும்பத்துக்கு பங்கு இருக்கிறது என பா.ஜ., குற்றம் சாட்டி உள்ளது. இதற்கு காங்., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


latest tamil news

'காஸ்ட்லி' ஓவியங்கள்:ராணா கபூர் வீட்டில் நடத்திய ரெய்டில், 48 விலை உயர்ந்த ஓவியங்கள் இருந்தன. இவை அனைத்தும் அரசியல் கட்சி தலைவர்களின் நட்பை பெற, அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்கப்பட்டவை என கூறப்படுகிறது. அதில் ஒன்று, எம்.எப். ஹூசைன் வரைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் ஓவியம். அதனை ராஜிவ் மகள் பிரியங்காவிடமிருந்து ரூ.2 கோடிக்கு ராணா கபூர் வாங்கியிருப்பதாக பா.ஜ., குற்றம் சாட்டி உள்ளது.


மல்லையா, நிரவ்..இதுகுறித்து பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா வெளியிட்ட டுவிட்டர் பதிவு: இந்தியாவில் நடைபெறும் நிதி மோசடி குற்றச்சாட்டு அனைத்திற்கும், நேரு குடும்பத்துடன் ஆழமான தொடர்பு இருக்கிறது. மல்லையாவுக்கு சோனியா விமான டிக்கெட்டுகளை தந்தார். அவர் வெளிநாடு தப்பி விட்டார். மன்மோகன், சிதம்பரத்துக்கும் கூட அவருடன் நட்பு இருக்கிறது. நிரவ் மோடி நகை கடையை ராகுல் துவக்கினார். அவரும் வங்கி மோசடியில் சிக்கினார். பிரியங்காவிடமிருந்து ரூ.2 கோடிக்கு ராணா கபூர் ஓவியத்தை வாங்கினார். இவ்வாறு அவர் பதிவிட்டார்.


latest tamil news

பிரதமர் தூங்கினாரா? காங்., கேள்விஇதற்கு கண்டனம் தெரிவித்து காங்., செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி வெளியிட்ட டுவிட்டர் பதிவு: கடந்த 2014 மார்ச்சில் யெஸ் வங்கி ரூ.55,633 கோடி கடன் அளித்தது. ஆனால், மோடி பிரதமரான பின் 2019, மார்ச்சில் கடன் அளவு ரூ.2.41 லட்சம் கோடியாக அதிகரித்தது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பின், அடுத்த 2 ஆண்டுகளில் வங்கி கடன் வழங்கியது 100 மடங்காக அதிகரித்துள்ளது. இதனை கவனிக்காமல் பிரதமரும், நிதிஅமைச்சரும் தூங்கினார்களா. பிரியங்கா பெற்ற பணத்துக்கு முறையாக வருமானவரி செலுத்தப்பட்டுள்ளது. பா.ஜ.,வின் குற்றச்சாட்டு ஒரு திசை திருப்பும் செயல். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanjavur kaaran - Jubail,சவுதி அரேபியா
10-மார்-202009:03:41 IST Report Abuse
Thanjavur kaaran ஆளுவது பிஜேபி அரசாங்கம். எதற்கு எடுத்தாலும் நேருவை குறை சொல்லுவது சின்னப்பிள்ளை தனம்.
Rate this:
Cancel
தா்மசிந்தனை - வாடிகன் மெயின் ரோடு மெக்கா மதீனா 786.,இந்தியா
09-மார்-202017:26:11 IST Report Abuse
தா்மசிந்தனை எஸ் பங்கின் நிதி ஆலோசகர் ப Chidambaram என்பதும் சட்ட ஆலோசகர் Nalini சிதம்பரம் என்பதும் இந்தியாவில் எத்தனை பேருக்கு தெரியும் ?
Rate this:
விமர்சகன் - kovai,இந்தியா
09-மார்-202017:50:45 IST Report Abuse
விமர்சகன்ஏற்கனவே ஸ்டெர்லைட்டுக்கு இவர் தான் டைரக்டராக இருந்தவர் சட்ட ஆலோசகராக நளினி இருந்தார் என கேள்விப்பட்டேன்...
Rate this:
Anand - chennai,இந்தியா
09-மார்-202018:09:49 IST Report Abuse
Anandகைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? வங்கி திவால் என தெரிந்த உடனே இது பசி & கோ வின் தில்லாலங்கடித்தான் என அனைவருக்கும் தெரிந்துவிட்டது........
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
09-மார்-202015:09:23 IST Report Abuse
thulakol அதனால் தான் ரொம்ப பெரிய சத்தம் போடவில்லையா காங்கிரஸ். ஊழல் பெருச்சாளி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X