பொது செய்தி

இந்தியா

103 வயது சாதனை பெண்ணிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி

Updated : மார் 08, 2020 | Added : மார் 08, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
PM,Modi,NariShaktiPuraskar,Award,Inspire,பிரதமர்,மோடி,உரையாடல்,நாரி_சக்தி_புரஸ்கர்,விருது,பெண்கள்தினம்,சாதனைபெண்கள்,உத்வேகம்

புதுடில்லி: 'நாரி சக்தி புரஸ்கர்' விருது பெற்ற சாதனை புரிந்த பெண்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, 'மற்றவர்களுக்கு உத்வேகமாகி உள்ளீர்கள்' என பாராட்டினார். விருது பெற்ற 103 வயது சாதனை பெண், மான் கவுரிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தில் பல்வேறு துறைகளில் சாதிக்கும் பெண்களுக்கு அங்கீகரிப்பதற்காக வழங்கப்படும் தேசிய விருதான 'நாரி சக்தி புரஸ்கர்' விருது வழங்கும் விழா டில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெறும். அந்தவகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த விருது வழங்கும் விழா இன்று (மார்ச் 8) நடைபெற்றது. இதில், தடகள விளையாட்டில் 30க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற மன்கவுர், படிப்பில் அசத்திய மூதாட்டிகளான பகீரதி அம்மாள், கார்த்தியாயிணி உள்ளிட்ட 15 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.


latest tamil news
இந்த நிகழ்ச்சி முடிந்ததும், பிரதமர் மோடியுடனான உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களுக்கு மத்தியில் மோடி பேசியதாவது: நீங்கள் உங்கள் வேலையை தொடங்கியபோது, அதை ஒரு பணியாகவோ, மதிப்புமிக்க ஒன்றிற்காகவோ செய்திருக்க கூடும். அது நிச்சயமாக வெகுமதிக்காக இருந்திருக்காது. ஆனால், இன்று நீங்கள் மற்றவர்களுக்கு உத்வேகமாகி உள்ளீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தடகளத்தி்ல சாதனை புரிந்ததற்காக 'நாரி சக்தி புரஸ்கர்' விருது பெற்ற மான் கவுரிடம், பிரதமர் மோடி ஆசி பெற்றார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
09-மார்-202014:37:22 IST Report Abuse
Sandru உலக மஹா நடிகன்.
Rate this:
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
09-மார்-202014:01:54 IST Report Abuse
Kumar பல பார்த்தது தான்
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
09-மார்-202012:40:41 IST Report Abuse
Ashanmugam இந்த 103 வயதில் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் பிரதமரை வாழ்த்துவது உலகில் காண்பதறிது. மேலும் நூற்றாண்டை கடந்த மூதாட்டியாரை காணும் போது 103 வயது என்பது சொல்வது அரிது. ஏனெனில் அந்தளவிற்கு பற்களும் விழவில்லை உடல் மெலிந்தாலும் "கெத்தாக" உள்ளது குறித்து பெருமை அடைகிறேன். ஆகவே, இன்னும் உலகில் 103 வயது அடைந்த மூத்தவயது பெண்மணி இறைவன் திருவருளால் நீடூழி நீண்டகாலம் வாழ்க வாழ்க வாழியவே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X