உ.பி., அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்

Added : மார் 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பிரயாக்ராஜ் : உ.பி.,யில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட சேதங்களுக்கு, வன்முறையில் ஈடுபட்டவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என, விளம்பர பலகைகள் அமைக்கப்பட்ட மாநில அரசின் நடவடிக்கையை, உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. உ.பி.,யில், முதல்வர், ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநில தலைநகர் லக்னோவின் பல்வேறு
 உ.பி., அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்

பிரயாக்ராஜ் : உ.பி.,யில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட சேதங்களுக்கு, வன்முறையில் ஈடுபட்டவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என, விளம்பர பலகைகள் அமைக்கப்பட்ட மாநில அரசின் நடவடிக்கையை, உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

உ.பி.,யில், முதல்வர், ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநில தலைநகர் லக்னோவின் பல்வேறு இடங்களில், போலீசார் விளம்பர பலகைகள் அமைத்துள்ளனர்.அவற்றில், கடந்த டிசம்பரில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் வகையில், அவர்களின் பெயர், புகைப்படம் மற்றும் முகவரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.'பொது மற்றும் தனியார் சொத்துக்களின் சேதங்களுக்கு, அவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும்.

இல்லாவிட்டால், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விளம்பர பலகைகள் குறித்து அறிந்த அம்மாநில உயர் நீதிமன்றம், இதை தாமாக முன் வந்து வழக்காக எடுத்துக்கொண்டது.தலைமை நீதிபதி கோவிந்த் மாத்துார் மற்றும் நீதிபதி ரமேஷ் சின்ஹா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, நேற்று காலை இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, 'மாநில அரசின் இந்த நடவடிக்கை அநியாயமானது என்பதுடன், சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் மீதான முழுமையான அத்துமீறல்' என, மாநில அரசு மீது, நீதிபதிகள் குற்றஞ்சாட்டினர்.இந்த பிரச்னை குறித்து, அரசு தரப்பில் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அட்வகேட் ஜெனரல் ஆஜராக அவகாசம் அளிக்கும் படி, அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. விளம்பர பலகைகள் விவகாரத்தில், மாநில அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை, இன்று தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
09-மார்-202007:56:48 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பொதுச்சொத்துக்கு சேதமேற்படுத்துவது தனிமனித உரிமை எனக்கூறும் நீதிபதியால இத்தியாவிற்கு கேவலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X