அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜ்யசபா தேர்தல்: முனுசாமி, தம்பிதுரை, வாசனுக்கு வாய்ப்பு

Updated : மார் 09, 2020 | Added : மார் 09, 2020 | கருத்துகள் (63)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


தமிழகத்தில் இருந்து, ஆறு ராஜ்யசபா, எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்தல், வரும், 26ம் தேதி நடக்கிறது. சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள பலம் அடிப்படையில், அ.தி.மு.க., - தி.மு.க., சார்பில், தலா மூன்று பேரை தேர்ந்தெடுக்க முடியும்.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தனர்.



latest tamil news


இந்நிலையில், அதிமுக சார்பிலான ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. அதன்படி, அதிமுக.,வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஜி.கே.வாசன் கூறுகையில், 3 இடங்களில் கூட்டணி கட்சியான த.மா.கா.,வுக்கு ஒரு இடம் ஒதுக்கிய முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு நன்றி. தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கருத்துகளை தமிழக அரசுக்கு அளித்துள்ளோம். தமிழகம் மற்றும் மாநில அரசின் நலனுக்காக மத்திய, மாநில அரசுக்கு இடையே பாலமாக செயல்பட்டு திட்டங்கள், நிதிகள் பெறுவேன் என்றார்.


latest tamil news



தேமுதிக.,வுக்கு மறுப்பு

ராஜ்யசபா தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவந்த நாள் முதல் அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக., தங்களுக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வந்தன. கூட்டணி உடன்படிக்கையின் போதே ராஜ்யசபா வாய்ப்பு பற்றி முடிவு செய்துள்ளோம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறி வந்தார். மேலும், இது குறித்து அக்கட்சியின் எல்.கே.சுதீஷ், துணை முதல்வர் ஓபிஎஸ்.,ஐ சந்தித்தும் வலியுறுத்தினார். இந்நிலையில், தேமுதிக.,வின் கோரிக்கைகளை நிராகரித்து மற்றொரு கூட்டணி கட்சியான த.மா.கா.,வுக்கு வாய்ப்பளித்தது தேமுதிக.,வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
10-மார்-202012:09:47 IST Report Abuse
Ramshanmugam Iyappan சிறப்பான முடிவு மூவரும் தகுதியானவர்கள். வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
09-மார்-202023:15:05 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி இந்த தம்பிதுரை பாஜகவுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.மீண்டும் இவரை அனுப்புவது பாஜகவை சீண்டவே. எடப்பாடியின் போக்கு சரியில்லை . இத்தகை பாஜக கவனத்தில் கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
09-மார்-202022:01:08 IST Report Abuse
Nallavan Nallavan வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் துணிவுடன் தனித்துக் களம் காண திமுக -வுக்குத் தன்னம்பிக்கை இல்லை .... காங்கிரசின் பலம் மீதும் நம்பிக்கை இல்லை ...... ஆகவே பாமக, தேமுதிக ஆகிய காட்சிகள் கூட்டணிக்குள் வந்தால் பரவாயில்லை என்று அலைகிறது ...... இதே காரணத்தால்தான் "அதிமுக தேமுதிக-வைப் புறக்கணித்து விட்டது" என்று விஷ(ம)பிரச்சாரம் செய்து பார்க்கிறது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X