சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

டவுட் தனபாலு

Added : மார் 09, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
டவுட் தனபாலு

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: மக்கள்தொகையில் சரி பாதியாக இருந்த பெண்கள் எண்ணிக்கை, சமீப காலமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இது, கவலைக்குரிய விஷயம். அதுபோல, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. படித்த பெண்கள் கூட, கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை நிலவுகிறது.

'டவுட்' தனபாலு: பெண்களைத் தலைவராக கொண்ட அரசியல் கட்சிகளை, சூழ்ச்சிகள் செய்து அமுக்கி விடுவீர்கள். அந்த பெண்களின் பூர்வாசிரமத்தைப் பார்த்து, கிண்டல் செய்வீர்கள். படித்த பெண்கள் வேலைக்குச் செல்ல, தொழில் பயிற்சி அளிக்க மாட்டீர்கள். பிறகு எப்படி, பெண்கள் முன்னேறுவர்? எனினும், நீங்கள் கூறும் அளவில் இன்றி, இப்போது, பெண்கள் பல துறைகளில், 'டாப்'பில் இருப்பது உங்களுக்கு தெரியாமல் கண்கள் மறைக்கிறதோ என்ற, 'டவுட்'டை ஏற்படுத்துகிறது!

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்: எங்கள் கட்சியை துவக்கி, 30 ஆண்டுகள் ஆகின்றன. அரசியல் கட்சி துவக்கிய அனைவரும், அடுத்து எங்கள் ஆட்சி தான் என கூறுவது வாடிக்கையான ஒன்று தான். மற்ற கட்சிகள் ஆட்சி செய்ய, நாங்கள் கட்சி நடத்தவில்லை. பா.ம.க., ஆட்சி செய்யவே கட்சியை நடத்தி வருகிறோம்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வது சரி தான். எந்த கட்சியும், ஆட்சிக்கு வரத் தான் துடிக்கும். எத்தனையோ போராடியும், 30 ஆண்டுகள் ஆன பிறகும், உங்கள் கட்சியால், ஆட்சிக்கு வர முடியவில்லை; அதிகபட்சம், இரட்டை இலக்கங்களைக் கூட, தமிழக சட்டசபையில் உங்கள் கட்சியால் பெற முடியவில்லை. எனவே, உங்கள் கட்சி மற்றும் கூட்டணி முடிவில் மாற்றம் வராதோ என்பது தான், 'டவுட்' ஆக உள்ளது.
பத்திரிகை செய்தி: தி.மு.க., பொதுச் செயலராக இருந்த அன்பழகன், இறந்து விட்டதால், அந்தப் பதவிக்கு, அக்கட்சியில் யாரை நியமிப்பது என்பதில் விவாதம் நடந்து வருகிறது. இப்போதைய பொருளாளர் துரை முருகனுக்கு அந்த பொறுப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
'டவுட்' தனபாலு: தி.மு.க.,வில் பொதுச் செயலர் பதவி, கூட்டங்களுக்கு அழைப்பு விடுப்பது, கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்களுக்கு தண்டனை அறிவிப்பது போன்ற சில அதிகாரங்கள் தான் உண்டு. கட்சித் தலைவர் பதவி, இளைஞரணி தலைவர் பதவி தான், ஸ்ட்ராங்கானது. எனவே, பொருளாளர் பதவியில் இருக்கும் துரைமுருகன், இந்த, 'ரப்பர் ஸ்டாம்ப்' பதவியை ஏற்பாரா என்பதே மிகப் பெரிய, 'டவுட்!'

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மார்-202019:31:57 IST Report Abuse
Thangavel Vel கெரகம்... ஓசி சோறு என்ன சொல்லுது.. !!!!
Rate this:
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
10-மார்-202007:42:39 IST Report Abuse
Abdul Rahman கட்சி ஆரம்பித்து 30 ஆண்டுகளாக ஒரு எதிர் கட்சி தலைவராக கூட வர முடியாத பல்லக்கு தூக்கி ஜாதி கட்சி எப்படி உருப்படும்.
Rate this:
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
10-மார்-202007:40:52 IST Report Abuse
Abdul Rahman இட ஒதிக்கீட்டில் தகுதியற்றவர் வருவது, தேர்வு பரிட்சைகளை எதிர்ப்பது போன்றவை தகுதியற்ற வருங்கால தலைமுறைகளைத்தான் உருவாகும். தகுதி இருந்தால் நல்ல வேலை கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X