சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பயந்துட்டே இருந்தா வேலைக்கு ஆகாதே!

Added : மார் 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பயந்துட்டே இருந்தா வேலைக்கு ஆகாதே!

மதுரை, திருமங்கலத்தில் நடந்த ஒரு விழாவில், வருவாய்த் துறை அமைச்சர், ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, 'ரஜினி, ஏமாற்றம் எனக் கூறியிருக்கிறார். தற்போது அது விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஏமாற்றம் என்ற வார்த்தையை மட்டும் வைத்து விவாதம் செய்வதால், எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை' என்றார்.

இதைக் கேட்ட தொண்டர் ஒருவர், 'அவரைப் பார்த்து, நம்ம கட்சிக்காரங்க ஏன் பா பயப்படுறாங்க... நம்ம கட்சிக்கு இருக்குற ஓட்டு, அப்படியே தான் இருக்கப் போகுது... இது குறையுமேன்னு இவங்க பயப்படுறாங்கன்னா, இவங்ககிட்டே ஏதோ கோளாறு இருக்குதுன்னு அர்த்தம்... என்னான்னு, வெளியவும் சொல்ல மாட்டேங்குறாங்க... இப்படி பயந்துட்டே இருந்தா, நாமெல்லாம் எப்படி கட்சி வேலை பார்க்குறது...' என அங்கலாய்த்தனர். அவர்கள் அருகில் நின்றிருந்த கட்சி நிர்வாகிகள், 'யோவ்... அடக்கி வாசி... மினிஸ்டர் கிளம்பினதும், உங்கள் அலப்பரையை வச்சிக்கிங்க ப்ளீஸ்...' என, நொந்து நுாடுல்ஸ் ஆகினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-மார்-202006:03:44 IST Report Abuse
D.Ambujavalli ஆகக்கூடி, தலைவர்கள் வயிற்றில் கரையும் புளி அடுத்த படிக்கும் தெரிந்துதான் இருக்கிறது ரஜினி கட்சி தொடங்கினால் துண்டு போடவும் மெல்ல மெல்லத் தயாராகிவிடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X