'எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!'

Added : மார் 10, 2020
Advertisement
'எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!'களிர் தின கொண்டாட்டம் முடிந்த நிலையில், சித்ரா தனது வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தாள். அது தெரிந்து சென்ற மித்ரா, ''என்னக்கா... ஏன் 'டல்லா' இருக்கீங்க?'' என்றாள்.''இல்லப்பா... வெயிலில் நாலைஞ்சு இடத்துக்கு போனதில், தலைவலி அவ்ளோதான்? ஆமா... நீ காலேஜூக்கு போகலையா?''''எனக்கும் டயர்டா இருந்துச்சு. 'வெயிலில் அலையாதடி.
 'எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!'

'எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!'களிர் தின கொண்டாட்டம் முடிந்த நிலையில், சித்ரா தனது வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தாள். அது தெரிந்து சென்ற மித்ரா, ''என்னக்கா... ஏன் 'டல்லா' இருக்கீங்க?'' என்றாள்.''இல்லப்பா... வெயிலில் நாலைஞ்சு இடத்துக்கு போனதில், தலைவலி அவ்ளோதான்? ஆமா... நீ காலேஜூக்கு போகலையா?''''எனக்கும் டயர்டா இருந்துச்சு.


'வெயிலில் அலையாதடி. என் பேச்சை யார் கேக்கிறீங்க?னு அம்மா கூட திட்டினாங்க...''''கலெக்டர் பேச்சையே கேட்க மாட்டேங்கிறாங்க... இதில நீ வேற?''''என்னக்கா சொல்றீங்க?''''திருமுருகன்பூண்டி தேர்த்திருவிழாவுக்கு, விளையாட்டு, பொழுதுபோக்கு திடல் அமைக்க, டெண்டர் நடத்தினாங்க. ஆனா, கலெக்டர் ஆபீசுல முறையான அனுமதி வாங்கவே இல்லையாம்,''''ஏற்கனவே, தைப்பூச விழாவில், மலைக்கோவிலில் ராட்டினம் கழன்று விழுந்து, ஒருத்தருக்கு அடிபட்டுச்சு.
அதனால, 'பொழுதுபோக்கு திடல் அமைக்க, கலெக்டர் ஆபீசுல அனுமதி வாங்கணும்னு' ஆர்டர் போட்டிருந்தாங்க,''''ஏங்க்கா.. அந்த ஆர்டரை பூண்டி கோவில் இ.ஓ., மதிக்கலையா?''''ஆமா.. சும்மா டெண்டர் மட்டும் நடத்திட்டு, ஒதுங்கிட்டாங்க. பொழுதுபோக்கு திடல் நடத்தற நபர் போலீசுக்கு 'காணிக்கை' செலுத்திட்டு, எங்கயும் அனுமதி வாங்காமயே நடத்திட்டு இருக்றாரு. இவங்கள கலெக்டர் கூட கன்ட்ரோல் பண்ண முடியலையான்னு,' விவரம் தெரிஞ்சவங்க கேக்கிறாங்களாம்,''அப்போது சித்ராவின் அம்மா, இருவருக்கும் டீ கொடுத்தார்.
டீ பருகியபடியே மித்ரா, ''அக்கா... அதிகாரிகளே கலெக்டரை மதிக்காதப்ப, அரசியல் வாதிகள் மதிப்பாங்களா?''''என்னடி... பொடி வைச்சு பேசறே?''''அமைச்சர் பங்கேற்கும் விழாவுல, எம்.எல்.ஏ.,க்களும், கட்சிக்காரங்களும் போட்டிபோட்டு போட்டோவுக்கு 'போஸ்' கொடுக்கறாங்க. அந்த சலசலப்புல, கலெக்டரை ஓரம் கட்டிடறாங்க.
அரசு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக மேடை கால்கோள் விழாவுல கூட, அப்படித்தான், அவரை பின்னாடி தள்ளிட்டாங்க,''''மித்து, அவங்க அப்படித்தான் செய்வாங்க... அமைச்சர்தான் அதனை சரி செய்யணும்,''''அக்கா.. மகளிர் தின விழாவ கொண்டாடி அசத்திட்டாங்க்கா...''''எந்த ஆபீசிலடி?''''கலெக்டர் ஆபீசில்தான். பெண் அலுவலருக்கு கோலப்போட்டி அது..
இதுன்னு நடத்தி, 'கேக்'கும் வெட்டி, ஒரே அமர்க்களப்படுத்திட்டாங்க போங்க...''''வெரிகுட்... அப்பதான் ஒரு உற்சாகம் கிடைக்கும்'' என்ற சித்ராவின் மொபைல் போன் ஒலித்தது. 'டிஸ்பிளேயில்' 'சேவூர் பிரதர்'என ஒளிர்ந்தது. ஒரு நிமிடம் பேசி விட்டு வைத்த அவள், ''லிங்கேஸ்வரர் ஊருக்கு பக்கத்தில் உள்ள 'குழந்தையூர்' சொைஸட்டியில், உறுப்பினர்களுக்கு 'ஈவு' தொகை கொடுக்கலையாம்,''''முழுசையும் இவங்களே வெச்சுட்டாங்களா?''''இல்ல, கொஞ்சம் பேருக்கு கொடுத்திட்டு நுாற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு, கொடுக்கலையாம்.
அதையெல்லாம், கரெக்ட்டா... 'பங்கு' பிரிச்சு வெச்சுட்டாங்களாம். அதிகாரிகளையும் 'கவனிச்சுட்டு,' பெருந்தொகையை கமுக்கமாக அமுக்கிட்டாங்களாம்,''''அக்கா... இதேமாதிரி, ஆளும்கட்சி நிர்வாகி ஒருத்தர், கட்டப்பஞ்சாயத்து செஞ்சு, பல லட்சத்தை சுருட்டிட்டாராம்,''''இது எங்கடி, யாரு?''''மங்கலம் ரோட்டில், 'டேட்டா' என்ட்ரி கடை ஒருத்தரு வச்சுருக்காரு.
அங்க வேலை செய்ற ஒரு லேடிக்கும், அவருக்கும் பிரச்னையாயிடுச்சு. இதை தெரிஞ்சுகிட்ட ஆளும்கட்சி நிர்வாகி ஒருத்தர், கட்டப்பஞ்சாயத்து பண்ணியிருக்காரு,''''ஒரு கட்டத்தில, கடைக்காரர் வீட்டுக்குள்ள அத்துமீறி போய், கம்ப்யூட்டர், கார், நகைன்னு எடுத்துட்டு போயிட்டாராம். அந்த நகையை அடமானம் வச்சு, ரெண்டு லட்சம் பணத்தை அபேஸ் பண்ணிட்டாராம்,''''போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டியதுதானே...''''கே.வி.ஆர்., நகர் ஸ்டேஷனில் கொடுத்திருக்கார்.
ஆனா, அந்த ஆளுங்கட்சிக்காரருக்கு ஸ்டேஷனில் ராஜமரியாதையாம். மக்களுக்கு ஆதரவா இருக்க வேண்டிய, அதிகாரிங்க இப்படியிருந்தா எப்டிங்க்கா?''அப்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டி 'டிவி'யில் ஒளிபரப்பானது. அதை இருவரும் பார்த்து கொண்டிருந்த போது வந்த சித்ராவின் அம்மா, 'நான் மருதாசலம் வீடு வரைக்கும் போயிட்டு வந்துடறேன்,' என கூறி சென்றார்.''அக்கா... கேட்க மறந்துட்டேன். ஆர்.ஐ., மீது கார் ஏத்துன சம்பவத்துல, ரெண்டு பேரை இன்னும் புடிக்கலையாம்,''''உண்மைதான்டி மித்து. நல்லுாரில், கிராவல் மண் கடத்தல்காரங்க, ஆர்.ஐ.,மீது காரை ஏத்தி கொல்லப்போன மேட்டரில், ரெண்டு பேர் மட்டுமே அரெஸ்ட்.
மீதி ரெண்டு பேரை கண்டுக்காம இருக்காங்களாம். இந்த மேட்டரில், அக்யூஸ்ட்களுக்கு ஆதரவா, சூரியக்கட்சிக்காரங்க பஞ்சாயத்து பண்றாங்களாம்,''''வர... வர... அவங்களோட நாட்டாமை அதிகமாயிட்டே வருதுங்க்கா...!'' என்ற மித்ரா, ''ஒரு வழியா பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்த கடைகள் காலியாயிடுச்சு பார்த்தீங்களா?''''ஆமாம் மித்து. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், பார்க்கிங், கமர் ஷியல் காம்ப்ளக்ஸ்... இப்படி பல வசதிகளோட கட்டப் போறாங்க. அதுக்காக, கடைகளை காலி பண்ண வெச்சுட்டாங்க.
புதுசா கட்டடம் கட்டி முடிச்சதும், இப்ப இருக்கறவங்களுக்கே கடைகளை குடுக்கணும்னு சொல்லி, வசூல் வேட்டை பட்டைய கிளப்புதாம்,''''அதிலும், கார்ப்ரேஷன் ஆபீசர்ஸ் காட்டில் 'மழை'யாம். இத தெரிஞ்சுகிட்ட ஆளும்கட்சி பிரமுகர் போய் சத்தம் போட்டதால, அவரையும் கவனிச்சிட்டாங்களாம்,''''இடிச்சாலும், கட்டினாலும் காசு' பார்க்குறதுல, ஆபீசர்கள் பலே கில்லாடிகள்,''''கரெக்டா சொன்ன மித்து.
பல்லடம் வங்கி கொள்ளையர்கள் விஷயத்தில், சினிமாவையே மிஞ்சும் வகையில், சம்பவம் நடக்குதாம்,''''அப்படி என்ன கதை?''''மொத்தம் மூவர் சேர்ந்து, ரெண்டு நாள் கொள்ளையடிச்சதில, லாக்கரில் இருந்த நகையின் உண்மையான மதிப்பு யாருக்கும் தெரியலையாம். இப்ப சிக்கியிருக்கிற கொள்ளையன் சொல்றது வெச்சுதான், போலீஸ் சொல்றாங்க. அவனும் பல்வேறு கிளைக்கதைகளை தினமும் சொல்லிட்டு, போலீசை கொழப்புறான்,''''ஆனா, அதிலயும் பல 'தில்லாலங்கடி' நடக்குது போல.
இதுல, ஜூவல்ஸ் பறிகொடுத்தவங்கதான் பாவம். மீண்டும் கிடைச்சிடுமா? இல்லையான்னு தெரியாம கஷ்டப்படறாங்க. பேங்க் ஆபீஸர்களும் சரியான பதிலை சொல்லமாட்டேங்குறாங்களாம். பேங்க் 'லாக்கரை' நம்பி வச்சோம். அது ஒரு குற்றமா?னு பொலம்பி தள்றாங்க மித்து,'' என்ற சித்ரா, பேக்கிலிருந்து 'மாஸ்க்' எடுத்து அணிந்து கொண்டாள்.''என்னக்கா... 'கொரோனா' பயமா?'' என கிண்டல் செய்த மித்ரா, ''ஓ.கே.,ங்க்கா... நான் கெளம்பறேன்,'' என்றாள்.''இருடி... நான் டிராப் செய்யறேன்,'' என்ற சித்ரா, ஹெல்மெட் சகிதம் புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X