சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'சூசகமா சொன்னாலும் புரிய மாட்டேங்குதே!'

Added : மார் 10, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'சூசகமா சொன்னாலும் புரிய மாட்டேங்குதே!'

பா.ம.க., சார்பில் சேலம், மேட்டூர் தொகுதி தம்பி, தங்கை, மக்கள் முப்படை கூட்டம், பொட்டனேரியில் நடந்தது. இதில், பங்கேற்ற அக்கட்சி மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி
யிடம், நிருபர் ஒருவர், சட்டசபை தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அன்புமணி, 'பா.ம.க., துவங்கி, 30 ஆண்டுகள் ஆகிறது. அ.தி.மு.க., - தி.மு.க., - காங்.,
கட்சிகள் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதற்காக நாங்கள் கட்சி துவங்கவில்லை.
தமிழகத்தை ஆள வேண்டும் என்பதற்காவே, கட்சியை துவங்கியுள்ளோம்' என்றார்.

அப்போது அருகில் இருந்த தம்பிகள் படையை சேர்ந்த ஒருவர், 'அண்ணன் தான் வரும் சட்டசபை தேர்தலில், பா.ம.க., தலைமையில் சில கட்சிகளை கூட்டணி சேர்த்து போட்டியிட போறோம்னு சூசகமா சொல்றாரு. அதை புரிஞ்சுக்காம வரும் தேர்தலில், பா.ம.க., யாருடன் கூட்டணின்னு கேள்வி கேட்கிறாங்களே... அண்ணன் ஒரு தடவை சொன்னா, 100 தடவை சொன்ன மாதிரின்னு புரிஞ்சுக்க வேண்டாமா...' என நிருபர்களை கலாய்த்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh babu - chennai,இந்தியா
11-மார்-202015:00:55 IST Report Abuse
ramesh babu அவங்க கிட்ட காசு கிடைக்காது , சொன்னதையே 100 வாட்டி சொல்லுவாரு
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-மார்-202010:59:23 IST Report Abuse
Malick Rajaதான்வாழ பிறரை கெடுக்காதே என்ற கருத்தையெல்லாம் உதறிவிட்டு .. தான்வாழ பிறரைக்கெடுப்பதே மேல் என்ற பாமகவின் கோட்பாடு இனி மக்களிடம் எடுபடாது .. கிருஷ்ணகிரியில் தோல்வியை தழுவியது ஒன்று போதும், அப்பன் மகன் என இருவருக்கும் தமிழகத்தில் இடமில்லை .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X