சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 10, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்: தமிழக அரசியலில், அழுக்கு நிரம்பியுள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள், 50 ஆண்டுகள் மாறி மாறி ஆண்டு, அரசியலை
பாழ்படுத்தியுள்ளன. காந்தியை நம்பி, இந்தியாவே பின்னால் வந்தது. அதுபோல, ரஜினியின் பின்னால் தமிழகம் வர வேண்டும். சமூக நலம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக மக்கள், ரஜினியுடன் கைகோர்த்து வர வேண்டும்.

'டவுட்' தனபாலு: 'ரஜினி இல்லை, அந்த கடவுளே வந்தாலும், இந்த, 'சிஸ்டத்தை' சரி செய்ய முடியாது' என, நடுநிலையாளர்கள் கூறுகின்றனரே... சரி, ரஜினி இன்னும் கட்சி துவக்குவது பற்றி உறுதியாக அறிவிக்காத நிலையில், மத அமைப்புகளின் தலைவர்கள், கட்சிகளின் மூத்த தலைவர்கள் அவரை தொடர்ந்து சந்தித்து வருகின்றனரே; அவர்கள் ரஜினியிடம் சென்று என்ன பேசுகின்றனர் என்ற, 'டவுட்' மக்களுக்கு அதிகரித்து வருகிறதே!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு: கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகளில் ஈடுபடும், பணியாளர்கள் மீது மட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இனி, சங்க நிர்வாக பொறுப்புகளில் உள்ளவர்கள், முறைகேடுகளில் ஈடுபட்டால், அவர்கள் மீதும், 'கிரிமினல்' நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டம் திருத்தப்பட்டு உள்ளது; அவர்கள், மீண்டும் கூட்டுறவு தேர்தலில் போட்டியிட முடியாது.

'டவுட்' தனபாலு: தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த கட்சியை சேர்ந்தவர்
களின் கைகள், கூட்டுறவு சங்கங்களில் ஓங்குவது வழக்கமாக உள்ளது. அதனால் தான், முறைகேடுகளும் அதிகம் நடப்பதாக, பரவலாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால் தான், இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த அமைச்சர், இப்போது, கடும் நடவடிக்கைக்கு
தயாராகி விட்டாரோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.

த.மா.கா., தலைவர் வாசன்: அ.தி.மு.க., ஆட்சிமன்றக் குழு முடிவின்படி, ராஜ்யசபா எம்.பி., யாக தேர்ந்தெடுக்க, எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. த.மா.கா., வேட்பாளராக அறிவிக்கப்ப
ட்டுள்ள நான், தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும், உறுதுணையாக செயல்டுவேன். மேலும் மக்கள் பணியாற்ற அளிக்கப்பட்டுள்ள, இந்த நல்ல வாய்ப்பை, த.மா.கா., முழுமையாக, பயன்
படுத்தும்.

'டவுட்' தனபாலு: தமிழகத்தில் காலியாக இருந்த ராஜ்யசபா எம்.பி., இடத்திற்கு, நீங்கள் தான் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் என்பது, தமிழக மக்களுக்கு, கடந்த ஒன்றிரண்டு மாதங்களாக, 'டவுட்' இல்லாமலே தெரிந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு போட்டியாக, ஒரே நாளில் ஒன்றிரண்டு அறிக்கைகளை நீங்கள் வெளியிட்ட போதே, உங்களுக்குத் தான், எம்.பி., பதவி என்பது
உறுதியாக தெரிந்தது!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
11-மார்-202017:44:46 IST Report Abuse
karutthu தா ம க தலைவர் வாசன் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக மத்திய அமைச்சரவையில் இருந்திருக்கிறார் அவரால் தமிழ் நாட்டிற்கு கிடைத்த நன்மை என்ன ? காவேரி பிரச்சனையை தீர்த்தரா ? என்ன உருப்படியாக செய்தார் ? அவரை ராஜ்ய சபா எம் பீ ஆக்கியதால் தமிழ் நாட்டிற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை .அதற்கு பதிலாக வைகை செல்வனை ராஜ்ய சபா எம் பீ ஆக்கியிருக்கலாம் .....
Rate this:
Cancel
vvkiyer - Bangalore,இந்தியா
11-மார்-202010:08:13 IST Report Abuse
vvkiyer Karnanidhi sowed the seeds for institutionalised corruption. Posting politicians as Chairman of state owned companies and Co-operative banks and Societies was started by him only to satisfy disgruntled party workers. Free bees was also started by him, which has become irreversible. Only a party with determination can undo this. Which party will bell the cat is a million dollar question.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X