சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

காலம் கடந்து செயல்படுகிறது பா.ஜ.,

Added : மார் 10, 2020
Share
Advertisement
காலம் கடந்து செயல்படுகிறது பா.ஜ.,

எம்.ஹரி, திண்டிவனத்திலிருந்து எழுதுகிறார்: தேசியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின், சி.ஏ.ஏ., என்ற சுருக்க வடிவு, தி.மு.க., - பா.ஜ., என்ற சுருக்கங்கள் போல பிரபலமாகி விட்டது.
சி.ஏ.ஏ., எதிர்ப்பு கூட்டத்திற்கு வரும் சிறுமியர் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், தாங்கள் எதற்காகப் போராட்டம் நடத்துகிறோம் என்றே அறியாமல் இருக்கின்றனர். மத
குருமார்கள் சொன்னபடி செய்கின்றனர்; அவ்வளவு தான்!

பரிதாபம் என்னவெனில், சில இடங்களில், கல்லுாரி மாணவ - மாணவியரும் போராட்டத்தில் ஈடுபடுவது தான். சரி, அவர்களுக்காவது, தாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என்று
தெரிகிறதா? அதுவும் இல்லை! கல்லுாரிப் படிப்பு எதற்கு? சொல்லித் தருவதை, அப்படியே
தேர்வில் துப்பும் வகையிலான படிப்பு அல்ல இது. எல்லா பாடங்களிலும் சொல்லப்படும்
கருத்துக்களைச் சிந்தித்து, சீர்துாக்கிப் பார்த்து, எதிர்கால சம்பாத்தியத்திற்காக உதவும்
வகையில் தயார்படுத்திக் கொள்ளப் படிக்கும் படிப்பு.

அந்தப் படிப்பைப் படிக்கும் மாணவர்கள், தாம் கலந்து கொள்ளும் போராட்டங்கள் எதற்காக, தேவையா போராட்டம் என்றெல்லாம் சிந்திக்க வேண்டும் அல்லவா? அதை விடுத்து, கூட்டத்தோடு கூட்டமாய் நின்று, கோஷமிடுகின்றனர். மத்திய அரசை நடத்தும், பா.ஜ., கட்சியோ,
செவிடன் காதில் ஊதும் சங்கு போல, எதையும் கண்டுகொள்ளாமல், சி.ஏ.ஏ.,வில் என்ன உள்ளது என்பதை விளக்காமல், துாங்கி வழிகிறது. 'ஊருக்கு செல்வோம்; உண்மையை சொல்வோம்; உரக்க சொல்வோம்' என்ற, ஒரு பிரசார இயக்கத்தைத் துவக்கி உள்ளதாக, பா.ஜ., கூறுகிறது.

இந்த முனைப்பை, இரண்டு மாதம் முன்பே காட்டியிருந்தால், மக்கள் இப்படி போராட
முன்வந்திருக்க மாட்டார்கள். திரைப்படங்களில், வில்லன்களை, கதாநாயகன் அடித்து, துவைத்து கட்டி வைத்த பின், போலீஸ் அதிகாரிகள் ஓடி வருவரே... அது போல, பிரச்னை வெடித்து ஓயும் நேரத்தில், பா.ஜ., பிரச்சார களத்தில் குதித்துள்ளது. எரிச்சல் தான் வருது!'பாலாலே காலலம்பி பட்டாடை அணிவிக்கவா' முடியும்?


எஸ்.செபஸ்டின், சிவகாசியிலிருந்து எழுதுகிறார்: நிர்பயா கொலை வழக்கில், குற்றவாளிகளின் தண்டனை தேதி தள்ளிப் போகிறது. குற்றவாளிகளுக்கு மரண பயம் நீடிப்பது, மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். நாம் நம் மரணத்தை அறியாமல் இருப்பதால் தான், நிம்மதியுடன் வாழ முடிகிறது. மரண தேதி தெரிந்து விட்டால், நிம்மதி போய் விடும். எனவே, நிர்பயா குற்றவாளி
களுக்குத் துாக்குத் தண்டனை தள்ளிப் போவதும், அவர்களுக்கு சித்ரவதைப் போன்றது தான். மேலும் துாக்குத் தண்டனை கூடாதென சிலர் கூறி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, துாக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டம் என, சிலர் கூறுகின்றனர். இவர்கள், வலியை உணராத, பந்த பாசங்கள் இல்லாதவர்கள் என்று தான் கூற வேண்டும். தாய், தந்தையுடன் துாங்கும் ஐந்து வயது பெண் குழந்தையைத் துாக்கிச் சென்று, பாலியல் பலாத்
காரம் செய்து கொன்று, முட்புதரில் வீசிச் சென்றவனும்... ஏதும் அறியாத, 10 வயது சிறுமியையும், அவளது இளைய சகோதரனையும் கடத்திச் சென்று, சகோதரனின் கண் எதிரிலேயே,
அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, இருவரையும் கொன்றவர்களையும், 'பாலாலே காலலம்பி பட்டாடை உடுத்தி' வைக்கவா முடியும்?

கொடிய மிருகங்கள் கூட, தன் இனத்தின் மீது பாசத்துடன் நடந்து கொள்வதை, சமீபத்திய, 'வாட்ஸ் ஆப்' வீடியோக்கள் நமக்குக் காட்டிக் கொடுக்கின்றன. ஆனால், இந்தக் காம பிளஸ் கொலை வெறிப் பிசாசுகளை எந்த வர்க்கத்தில் சேர்ப்பது? தற்போதைய ஜெயில்கள்
அனைத்தும், சொர்க்க பூமியாக இருப்பதாகவே தோன்றுகிறது. ஆங்கிலேயர் காலத்தைப் போன்று சரியான உணவின்றி, உறக்கமின்றி, ஏன் நாம் இந்த குற்றம் புரிந்தோம் என்று மனம் வருந்தும் இடமாக இல்லாமல், அடுத்த குற்றம் புரிவதற்கு ஆலோசனை கூடமாக உள்ளது.
எனவே, கொடூர குற்றம் செய்பவர்களை, வீதியின் நடுவே தொங்கவிட்டு, கல் எறிந்துக் கொலை செய்வது தான், சரியான தண்டனையாக இருக்கும்.


பரம்பரைக்காவது புண்ணியம் கிட்டும்!


ஏ.மனோஜித், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: குடியுரிமைச் சட்டத்தின் முழு விவரம் தெரியாத மண்ணின் மைந்தர்கள், அண்ணன், தம்பி போல, பழகும் அனைத்து சமுதாய மக்களையும், பிரிவினை எனும் நெருப்பால், எரிய வைத்து, அதில் குளிர்காய நினைக்கின்றனர். இச்செயல்களால் கிடைக்கும் குறைந்தபட்ச ஓட்டுகளையும், எதிர்க்கட்சிகள் இழந்து விடுவர். 'குழம்பியக் குட்டையில் மீன் பிடிக்கலாம்' என நினைக்கும், எதிர்க்கட்சிகளுக்கு குட்டையில் இருப்பது, வெறும் மீன் அல்ல. 'விலாங்கு மீன்' எனும் அறிவுள்ள மக்கள் என்பது, ஏன் புரியவில்லை.
உலக நாடுகளின் பொருளாதாரம், சுகாதாரம், அரசியல், அன்றாட நடவடிக்கைகளை, தம் விரல் நுனியில் இருக்கும் மொபைலில் பார்த்து ஆராய்ந்து வருவோர், இளைஞர்கள், படித்தோர், பெண்கள்; அவர்கள் வாழும் நாட்டில், எதிர்க்கட்சிகளின் புளுகுணி போராட்டங்கள் எடுபடாது. இவர்கள் போராட்டத்திற்கு கூட்டம் சேர்ப்பதன் வாயிலாக, வெட்டி வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது தான், மறைமுக உண்மை!
தமிழ் சினிமாவில், 'வணக்கம்' போடும் வரை, வில்லன் ஏதாவது தீங்கு செய்து கொண்டே இருப்பார். கதாநாயகன், அதை முறியடித்து, இறுதியில் வெற்றி பெறுவார். அரை, நுாற்றாண்டாக இதையே பார்த்துப் பார்த்து சலித்துப் போன, தமிழக மக்கள், தற்போது சமூக வலைதளங்களில், தாங்களே சேனல் ஆரம்பித்து, கதை, பாடல், ஒளிபரப்பு, தாங்களும் மகிழ்ந்து, மற்றவர்களையும் ரசிக்க வைக்கின்றனர்.
மறுபக்கமோ, தமிழக அரசியல்வாதிகள், அதே பழைய மாவை, புது கிரைண்டரில் போட்டு, புளிக்க புளிக்க அரைத்து, மக்களை போரடிக்க வைக்கின்றனர். இதற்கு, தமிழக அரசியலில் கொள்ளையடித்த பணத்தில், நல்ல நாட்டு மாடுகளை, குறைந்த விலைக்கு
வாங்குங்கள். அவற்றை பராமரித்து, பால் கறந்து மக்களுக்கு விநியோகம் செய்தால்,
அரசியல்வாதிகளின் பரம்பரைக்காவது, புண்ணியம் கிடைக்கும்!Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X