கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விடுதலை கோரிய நளினி மனு தள்ளுபடி

Updated : மார் 11, 2020 | Added : மார் 11, 2020 | கருத்துகள் (55)
Share
Advertisement
Nalini, RajivVictim, ChennaiHighCourt, Judgement, நளினி, ராஜிவ், கொலை, குற்றவாளி, வழக்கு, சட்டவிரோதம், காவல், தீர்ப்பு, சென்னை, உயர்நீதிமன்றம்

இந்த செய்தியை கேட்க

சென்னை: சட்டவிரோத காவலில் இருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி, ராஜீவ் கொலையாளி நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழக அமைச்சரவை, கடந்த 2018ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரை மீது கவர்னர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இதுவரை தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.


latest tamil news


இந்த வழக்கில் நளினி தரப்பு மற்றும் மத்திய அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் அறிவுறுத்தி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு உத்தரவிட்டனர்.


இந்த வழக்கு மீது தமிழக அரசு வாதாடுகையில், தீர்மானத்தின் மீது கவர்னர் முடிவு எடுக்காத வரை சட்ட விரோத காவல் எனக்கூற முடியாது. கவர்னரின் அதிகாரத்தை கேள்வி எழுப்ப முடியாது. நளினி சட்ட விரோத காவலில் இல்லை என தெரிவித்தது.

மத்திய அரசும், தங்களது அனுமதியின்றி 7 பேரை விடுதலை செய்ய முடியாது எனக்கூறியிருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
12-மார்-202003:09:35 IST Report Abuse
Rajagopal இவர்களை வெளியே விட்டால், பூட்டி வைக்கப்பட்டிருக்கும் பல எலும்புக் கூடுகள் வெளியே வந்து விடும். ராஜிவ் கொலைக்கு உண்மையிலேயே காரணமானவர்கள் வெளிப்படுத்தப் படுவார்கள் என்ற பயத்தில் இவர்களை சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Annan - Madurai,இந்தியா
12-மார்-202001:54:06 IST Report Abuse
Annan கொலையாளிகளா? கொலையாளிகளோடு ஏதோ ஒரு வகையில் நட்போ தொடர்போ கொண்டவர்களா? கொலையாளிகளோடு தொடர்பில் இருந்தவர்கள் எல்லாம் கொலையாளிகளா? ராஜீவ் காந்தியை கொலை செய்ய திட்டமிட்டவர்களும் அதை செயல்படுத்தியவர்களும் உயிரோடு கிடைக்காத காரணத்தினால் கொலையாளிகளோடு சம்பந்தப்பட்டவர்கள் கொலைகாரர்களாக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சித்தரிக்கப்பட்டார்கள். இதை விசாரணை செய்த அதிகாரிகளும் பின்னாளில் ஆமோதித்தனர். 2004 ல் கருணாநிதியின் தயவில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் ஒருத்தனை பழிவாங்க ஒரு இனத்தையும் அதற்கு உறுதுணையாக இருந்த கட்டுமரம் குடும்பத்தை 2G யிலும் பழி தீர்த்துகொண்டது. இங்கு எதிராக கருத்து கூறுபவர்கள் இலங்கையின் வரலாற்றையோ தமிழர்களின் உரிமைகளையோ போராட்டக்குழுக்கள் ஏன் தோன்றின என்பது பற்றியோ இலங்கையில் இனக்கலவரம் நடந்தபோது இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி பிரச்சனையை கையாண்ட விதத்தை பற்றியோ அறியாதவர்கள். ஒரு நாட்டில் முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரம், மதம், மொழி கொண்ட இரு இனங்கள் ஒன்றாக இருந்தால் சிறுபான்மை இனம் பாதிக்கப்படலாம் என கூறி இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவின் கூற்றுக்கு இலங்கை உதாரணமாக ஆகிவிட்டது.
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
11-மார்-202022:19:02 IST Report Abuse
S.Ganesan இவர்களை இப்படி தூக்கி பிடிக்கும் அரசியல் வாதிகளுக்கும் , இவர்களுக்கும் அப்படி என்ன தொடர்பு ? இவ்வளவு தூரம் இவர்களுக்கு வக்காலத்து வாங்க என்ன காரணம் ? தமிழர்கள் என்பதையும் தாண்டி வேறு எதோ இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X