சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ.,யை மிரட்டிய இன்ஸ்.,: பரவும், 'வீடியோ'வால் பரபரப்பு

Updated : மார் 11, 2020 | Added : மார் 11, 2020 | கருத்துகள் (57)
Share
Advertisement
பண்ரூட்டி, போலீஸ்ஸ்டேசன், மகளிர், எஸ்ஐ, இன்ஸ்பெக்டர்

இந்த செய்தியை கேட்க

பண்ருட்டி: பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில், மனைவி கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தாதது குறித்து கேட்கச் சென்ற, எஸ்.ஐ.,யை ஒருமையில் ஏளனமாக பேசி, 'கைது செய்து உட்கார வைத்து விடுவேன்' என, பெண் இன்ஸ்பெக்டர் மிரட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


குடும்ப பிரச்னை


கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு; திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் நிலையத்தில், எஸ்.ஐ.,யாக உள்ளார். இவரது மனைவி சசிகலா.குடும்ப சொத்து பிரச்னை காரணமாக, சசிகலாவின் மாமியார், நாத்தனார் ஆகியோர், சசிகலாவை வீட்டை விட்டு வெளியேற்றினர். இது குறித்து, பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் வனஜாவிடம், நேற்று முன்தினம், சசிகலா புகார் செய்தார். புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் வனஜா, நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினார். இது குறித்து, பிரபு, இன்ஸ்பெக்டர் வனஜாவிடம் மொபைல் போனில் பேசினார்.இதையடுத்து, சசிகலாவை தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர் வனஜா, 'உன் கணவன் சப் - இன்ஸ்பெக்டர் என்றால் கொம்பா முளைத்து உள்ளது' என அசிங்கமாக திட்டி உள்ளார்.இதையறிந்த பிரபு, பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று, இன்ஸ்பெக்டர் வனஜாவிடம், 'மனைவி கொடுத்த புகாரை ஏன் விசாரிக்கவில்லை' எனக் கேட்டுள்ளார்.


latest tamil news



அடாவடி பேச்சு


'நீ என்னா பேசற, நீ யாருக்கிட்ட பேசிக்கிட்டிருக்கிற தெரியுமா' என, இன்ஸ்பெக்டர் மிரட்டிஉள்ளார்.'பெட்டிஷன் கொடுத்தா விசாரிக்கணும். இல்லைன்னா பெட்டிஷனை கொடுங்க' என பிரபு கேட்க, இன்ஸ்பெக்டர் வனஜா, 'மனுவை விசாரிக்க முடியாது. பெட்டிஷனை வாங்கிட்டு போய்யா, உன்னை கைது செய்து, உட்கார வைத்து விடுவேன்' என, பிரபுவை ஒருமையில் பேசி மிரட்டியுள்ளார்.இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
12-மார்-202020:15:52 IST Report Abuse
LAX ஹலோ மிஸ்டர் பார்தசாரதி பத்ரி, இதுக்கு பின்னாலிருக்கும் உண்மைகளை அறியாம/உணராம, 'புரட்சித்தலைவி' உருவாக்கிய திட்டத்தை குறைசொல்ல வரும் உம்மைப் போன்ற ஆட்களால்தான் இத்மாதிரி பெண் அதிகாரிகள் கோபப்படுறாங்களோ என்னவோ..? பெண் போலீஸ் துறை இருப்பதால்தான் ஒரு சிறு துரும்பு அளவுக்கான அராஜக/ரௌடியிஸ ஆண்கள் மற்றும் கொடூர குணம் கொண்ட கணவன் குடும்பத்தைச் சார்ந்த பெண்களின் அராஜகங்கள் கட்டுப்படுத்த முடிகிறது.. இல்லனா.. யே.. யப்பா..
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
12-மார்-202015:35:00 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அம்மா செய்த பெரும் தவறு பெண் போலீஸ் உருவாக்கியது. திமிர் எடுத்து திரிகிறார்கள்
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
12-மார்-202014:43:23 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இனிமேலாவது தகுதியானவர்களைப் பதவியில் அமர்த்துங்கள். தப்புச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X