கமல்நாத் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூருக்கு ‛ஜூட்'

Updated : மார் 11, 2020 | Added : மார் 11, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
MadhyaPradesh, Congress, MLA, Jaipur, JyotiradityaScindia, Joins, KamalNath, CM, மத்தியபிரதேசம், காங்கிரஸ், எம்எல்ஏ, ஜெய்ப்பூர், ஜோதிராதித்தயா சிந்தியா, கமல்நாத், முதல்வர்

இந்த செய்தியை கேட்க

போபால்: மத்தியப் பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 92 பேரையும் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்கிறது.

ம.பி., காங்., கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா, கட்சி மீது சமீப காலமாக அதிருப்தியில் இருந்து வந்தார். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸில் இருந்து சிந்தியா விலகி, கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்த சிந்தியா , பாஜ.,வில் இணைய உள்ளார். ஜோதிராதித்யா சிந்தியாவின் 22 ஆதரவு காங்., எம்.எல்.ஏ.,க்களும் பாஜ.,விற்கு தாவ உள்ளனர். இவர்கள் அனைவரும் பெங்களூரில் தங்கியுள்ளனர். இதற்கிடையே ம.பி., அரசுக்கு ஆதரவான மீதமிருக்கும் 92 காங்., எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதற்காக ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட உள்ளனர்.


latest tamil news


கமல்நாத் அரசு தனது எம்.எல்.ஏ.க்களை மட்டுமின்றி ஆட்சிக்கு ஆதரவான சுயேட்சை எம்.எல்.ஏ.,க்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. காங்., இந்த நெருக்கடியை சந்திப்பதற்கு முன்பு அதன் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 114 ஆக இருந்தது. பாஜ,விற்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ம,பி., சட்டசபையின் மொத்த எம்.எல்ஏ.,க்களின் எண்ணிக்கை 230 (இதில் 2 தொகுதிகள் காலியாக உள்ளது). ம.பி., அரசிற்கு நான்கு சுயேச்சைகள், இரண்டு பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்கள், ஒரு சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது. இவர்களிலும் சிலர் பாஜ.,வுக்கு தாவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-மார்-202016:33:03 IST Report Abuse
skv srinivasankrishnaveni எந்தைபிராடுக்கும் முன்னாடியே தமிழ்நாடுதானோ தானைத்தலைவியோ முகவோ எல்லாருமே பிராடுகளேதான் இவர்கலைநம்பியேதான் மக்கள் இருக்காங்களா இல்லியே 89%நம்புவது ஓசி பிரியாணியும் டாஸ்மாக் நீரும் தானுங்கோ ஈவா தாலி அறுத்தால் என்ன தான் நன்னாயிருக்கணும் தன்மனைவிகள் தாலி அறுக்கப்படாது என்பதுதானே கொள்கை
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-மார்-202019:23:41 IST Report Abuse
Pasupathi Subbian இந்த ஆள் கடத்தலுக்கு அடிகோலிட்டவர் எங்கள் தானை தலைவி மறைந்த முன்னாள் முதல்வர் சேவல் சின்னத்தின் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள் என்பதை நினைக்க நினைக்க நமக்கு பெருமையாக உள்ளது.
Rate this:
Cancel
11-மார்-202017:19:09 IST Report Abuse
ஆப்பு போய் பாதுகாப்பா இருங்க. பா.ஜ காரங்க, இல்லே கொரொனா ஊடுருவும் அபாயம் உள்ளது. ஆல் தி பெஸ்ட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X