காங்.,-ஐ சீர்குலைப்பதில் பிரதமர் பிஸி: ராகுல் விமர்சனம்

Updated : மார் 11, 2020 | Added : மார் 11, 2020 | கருத்துகள் (94)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், அதனை பொருட்படுத்தாமல் காங்கிரஸ் ஆட்சியை சீர்குலைப்பதிலே பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.



latest tamil news


மத்திய பிரதேசத்தில் காங்., முக்கிய தலைவரும், 4 முறை எம்.பி.,யாக இருந்தவருமான ஜோதிராதித்ய சிந்தியா, நேற்று (மார்ச் 10) திடீரென கட்சியில் இருந்து விலகினார். அவருடன் சேர்த்து மொத்தம் 22 எம்எல்ஏ.,க்கள் கட்சியில் இருந்து விலகி பாஜ.,வில் இணையவுள்ளனர். ம.பி.,யில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் திணறி வருகிறது. இது குறித்து காங்., முன்னாள் தலைவர் ராகுல், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:


latest tamil news


மக்கள் தேர்ந்தெடுத்த காங்கிரஸ் ஆட்சியை சீர்குலைப்பதில் நீங்கள் (பிரதமர்) பிஸியாக இருக்கும் நேரத்தில், கச்சா எண்ணெய் விலை 35 சதவீதம் சரிவடைந்துள்ளதை கவனிக்க தவறிவிட்டீர்கள். இந்த நேரத்தில் இந்திய மக்கள் பயனடையும் வகையில் பெட்ரோல் விலையை ரூ.60க்கும் கீழ் குறைத்து அறிவித்தால், மந்தமடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்த உதவும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ssh - mali,மாலத்தீவு
12-மார்-202009:23:37 IST Report Abuse
ssh காங்கிரஸ் நேரு குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அதை அழிக்க வேண்டியது மிகமிக அவசியம்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
12-மார்-202007:53:38 IST Report Abuse
ஆரூர் ரங் காங்கிரசை அழிக்கும் புண்ணியத்துக்குகே உனக்கு சுவர்க்கம் நிச்சயம் .
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
12-மார்-202007:42:49 IST Report Abuse
elakkumanan இது சதியின் உச்சம் ... கொடும் சதியின் உச்சம்..........இவர், ஒரு தற்கொலையை கொலையாக மாற்ற, ஏமாற்ற, முயற்சிக்கிறார்.....ஒரு வேளை, அவை அடக்கம் கருதி, தன்னுடைய சாதனையை பிறருக்கு விட்டுத்தருகிறாரோ என்னவோ...................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X