எதார்த்தம் புரியாத காங்கிரஸ்: சிந்தியா சாடல்

Updated : மார் 11, 2020 | Added : மார் 11, 2020 | கருத்துகள் (55)
Share
Advertisement
JyotiradityaMScindia, bjp, congress, cong, delhi, jadda, PmModi, Modi, Hmamitshah, homeministeramitshah, jbnadda, madyapradesh, MP, mafia,  சிந்தியா, ஜோதிராதித்யா, ஜோதிராதித்யாசிந்தியா, காங்கிரஸ், காங், பாஜ, பாரதியஜனதா, பிரதமர்மோடி, உள்துறைஅமைச்சர்அமித்ஷா, நட்டா,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : காங்கிரசில் இருந்து விலகிய ஜோதிராதித்யா சிந்தியா டில்லியில், நட்டா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். பின்னர் அவர், உண்மையை புரிந்து கொள்ள காங்கிரஸ் தயாராக இல்லை எனவும், இன்றைய எதார்த்தம் அக்கட்சிக்கு தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


விலகல்


காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டு வந்தவர் ம.பி.,யை சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா. அக்கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக நேற்று (மார்ச் 10) அவர் காங்கிரசில் இருந்து விலகினார்.


latest tamil news





பா.ஜ.,வில் இணைந்தார்


இந்நிலையில், ஜோதிராதித்யா சிந்தியா இன்று டில்லியில் பா.ஜ.,வில் இணைந்தார். கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தார்.


latest tamil news




குடும்பத்தில் ஐக்கியம்


நட்டா கூறுகையில், பா.ஜ., ஜனநாயக கட்சி. சிந்தியா , பா.ஜ.,வின் குடும்பத்தில் அங்கமாகியுள்ளார். கட்சியின் வளர்ச்சிக்கு அவர் உதவுவார். இவ்வாறு அவர் கூறினார்.


வாழ்க்கையை மாற்றிய நாள்


இதன் பின் சிந்தியா கூறுகையில், பா.ஜ., தலைவர் நட்டாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நன்றி. எனது வாழ்க்கையில், இரண்டு தேதிகள் மிகவும் முக்கியமானவை. அந்த தேதிகள் எனது வாழ்க்கையை மாற்றியமைத்தது. இன்றைய நாள் எனது வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. எனது தந்தை மரணமும் எனது வாழ்க்கையை மாற்றியமைத்தது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமாக இருந்தது.


அங்கீகாரம் இல்லை


கடந்த 18 ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்ய முயற்சி செய்து வருகிறேன். காங்கிரஸ் நிலையை நினைத்து கவலையாக உள்ளது. காங்கிரசால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது. பாதையை இழந்து திணறி வருகிறது. உண்மையை புரிந்து கொள்ள காங்கிரஸ் தயாராக இல்லை. எதார்த்தத்தை அக்கட்சி புரிந்து கொள்ளவில்லை.ஆரம்பிக்கப்பட்ட போது, இருந்த காங்கிரஸ் தற்போது இல்லை. புது தலைமை, எனக்கு காங்கிரசில் வாய்ப்பு வழங்கவில்லை. கட்சியில் புது கொள்கைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பது கிடையாது.


latest tamil news





மாபியாக்கள் ஆட்சி



2018 ல் ம.பி.,யில் வெற்றி பெற்ற பிறகு எனக்கு சில கொள்கைகள், கனவுகள் இருந்தது. ஆனால், அனைததும் தகர்க்கப்பட்டன. விவசாயிகளுக்கு அளித்த உறுதிமொழியை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை. இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் வேலை வழங்குவதாக காங்கிரஸ் கூறியது. தற்போது ம.பி.யில் பணியிட மாற்ற தொழில் நடந்து வருகிறது. மாபியாக்கள் மாநிலத்தை நிர்வகித்து வருகின்றனர்.


பெருமை


ஆனால், அதிர்ஷ்டவசமாக நாட்டிற்கு சேவை செய்ய பா.ஜ., வாய்ப்பு வழங்கியுள்ளது. இதற்கான வழியை பிரதமரும், உள்துறை அமைச்சரும் காட்டியுள்ளனர். பிரதமரின் கெள்கையும் அர்ப்பணிப்பும் என்னை கவர்ந்தது. அவரின் தலைமையில், இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது. அவரின் தலைமையில் பணியாற்றுவதில் பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi -  ( Posted via: Dinamalar Android App )
12-மார்-202006:25:31 IST Report Abuse
Ravi ஆமாங்க...பசிக்குமில்லா..... சங்கம் முக்கியமா... சாப்பாடு(பதவி) முக்கியமா... சாப்பாடு தான் முக்கியம்... இதுதான்.எதார்ர்ர்த்தம்..
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
12-மார்-202005:39:58 IST Report Abuse
meenakshisundaram யதார்த்தத்தை புரிந்து கொண்டால் அவிங்க 'CAA வை எதிர்ப்பாளர்களா?கனவில் வாழும் ராகுல் ,சோனியாவாள் நாட்டுக்கு உபயோகம் இல்லை .
Rate this:
Cancel
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
12-மார்-202000:09:48 IST Report Abuse
தமிழ் வேந்தன் நட்டா கூறுகையில், பா.ஜ., ஜனநாயக கட்சி. சிந்தியா , பா.ஜ.,வின் குடும்பத்தில் அங்கமாகியுள்ளார். கட்சியின் வளர்ச்சிக்கு அவர் உதவுவார். இவ்வாறு அவர் கூறினார். நாட்டின் வளற்சிக்கு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X