சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

காங்கிரஸ் எம்பி., திருநாவுக்கரசர்: என் பேரனின் பிறந்த நாள் சம்பந்தமாகப் பேச, ரஜினியை சந்திக்க வந்தேன்; குடும்ப விஷயமாகத் தான், அவரை சந்தித்தேன்; அரசியல் குறித்து பேசவில்லை. அரசியல் குறித்து, ரஜினி யாரிடமும் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் இல்லை.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நடிகர் ரஜினிகாந்த், 'கேட்டரிங்' தொழில் செய்வது போலவும், அவரை சந்தித்து, உங்கள் பேரன் பிறந்த நாளுக்கு, சாப்பாட்டிற்கு எவ்வளவு செலவாகும் என, விசாரித்தது போலவும் அல்லவா இருக்கிறது. பனை மரத்திற்கு கீழிருந்து பால் குடித்தாலும், கள் குடித்ததாகவே செய்திகள் வரும் என்பதை நீங்கள் அறிய மாட்டீரோ என்ற, 'டவுட்' கிளம்புது!

தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாத் தலைவர் இப்ராஹிம்: முஸ்லிம்களை நேசிக்கும் ஹிந்துக்கள், வெறுக்கும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் உள்ளது. 'சாலையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்துவோரை அப்புறப்படுத்த வேண்டும்' என, கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்த முதல் நபர் நான். இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு உள்ள மத சுதந்திரம், வேறு எந்த நாட்டிலும் கிடையாது. முஸ்லிம்கள் இங்கு வாழ்வது தவம்.
'டவுட்' தனபாலு: மத்திய அரசு கொண்டு வந்துள்ள, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, முஸ்லிம்களில் ஒரு சாரார் மற்றும் கட்சி சார்புள்ளவர்கள் நடத்தி வரும் போராட்டம், நீங்கள் சொல்வதுபடி தான் உள்ளது. எனினும், அவர்களை துாண்டி விடும் அமைப்புகளின் தலைவர்கள் திருந்தாத வரை, போராட்டங்களும் தொடரும் என்பதும், அந்த போராட்டங்களால் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்பதிலும், 'டவுட்' இல்லை!

தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை: ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, இரு கைகளையும் குவித்து, வணக்கம் சொல்வதே நம் கலாசாரம். வெள்ளையர் ஆட்சிக்குப் பின் தான், கைகளை குலுக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. தற்போது உலகை அச்சுறுத்தி வரும், 'கொரோனா வைரஸ்' பயம் காரணமாக, உலக நாடுகளின் மக்களும், கை குலுக்குவதை தவிர்த்து, கைகளை குவித்து, வணக்கம் சொல்கின்றனர்.

'டவுட்' தனபாலு: வெள்ளையர் ஆட்சிக்கு பின் வந்த, சுகாதார நடவடிக்கைகளால் தான், 'பிளேக்' போன்ற கொள்ளை நோய்கள், நம் நாட்டை விட்டு ஓடின. எனினும், சுத்தமாக இருந்து கை குலுக்கினால், எந்த பாதிப்பும், யாருக்கும் ஏற்படாது என்பது, டாக்டரான உங்களுக்கு, 'டவுட்' இல்லாமல் புரிந்திருக்கும். சாதாரண மக்களுக்குத் தான் இன்னும் புரிய மாட்டேன் என்கிறது. அதற்கான விழிப்புணர்வை, கட்சிகளும் தலைவர்களும் ஏற்படுத்தாததே காரணம்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnakumar - chennai,இந்தியா
12-மார்-202009:33:58 IST Report Abuse
krishnakumar பிளேக் என்கிற கொள்ளை நோய் பரவிய பொது வெள்ளையர்கள் நிர்வாகம் சரிவர வேலை செய்யவில்லை என்பதை அப்போதைய பத்திரிகை குறிப்புகள் சொல்கின்றன.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-மார்-202006:27:55 IST Report Abuse
D.Ambujavalli அரசரா? அவர் பல ஊர் தண்ணி குடித்தவாறாயிற்றே. ரஜினி கட்சி ஆரம்பிக்கும் முன்பே இடம் பிடிக்க முயற்சிப்பார் நம்மூர் Tnpsc ப்ராடுகள் கும்பலாகப் ‘பாட்டிக்குத் திதி கொடுக்க’ ராமேஸ்வரம் போன மாதிரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X