'நிர்பயா' குற்றவாளிகளிடம் பேட்டி: பரிசீலிக்க திஹார் சிறைக்கு உத்தரவு

Updated : மார் 13, 2020 | Added : மார் 11, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
nirbhayacase,nirbhaya,hang,delhigangrape,நிர்பயா,டில்லி,தூக்கு

புதுடில்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகளை பேட்டி எடுப்பது குறித்து, ஊடகப் பிரிவு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு, திஹார் சிறை அதிகாரிகளிடம், டில்லி உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது.

கடந்த, 2012ம் ஆண்டு, டில்லியில், மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில், முகேஷ் குமார் சிங், 32, பவன் குப்தா, 25, வினய் சர்மா, 26, அக்ஷய் குமார் சிங், 31, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பல சட்ட சிக்கல்களால், அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றம் தாமதமான நிலையில், வரும், 20ம் தேதி, அவர்களுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

இந்நிலையில், நான்கு குற்றவாளிகளையும் பேட்டி எடுக்க அனுமதி கோரி, ஊடகப் பிரிவு, டில்லி உயர் நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: நிர்பயா வழக்கு குற்றவாளிகள், நான்கு பேரையும் பேட்டி எடுக்க அனுமதி வழங்க வேண்டும். பாலியல் குற்றங்களை செய்ய நினைத்தால், இதுதான் கதி என்று அனைவருக்கும் உணர்த்தவே, இந்த பேட்டியை எடுக்க நாங்கள் திட்டமிட்டுஉள்ளோம்.

கடந்த மாதம், 25ம் தேதி, திஹார் சிறை அதிகாரிகளிடம், இது குறித்து கோரிக்கை வைத்தோம். எனினும், 27ம் தேதி, எங்கள் விண்ணப்பத்தை அவர்கள் நிராகரித்துவிட்டனர். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த மனுவை, நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா, ஊடக பிரிவின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு, திஹார் சிறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும், இது குறித்த முடிவை, நீதிமன்றத்தில் இன்றைக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA G india - chennai,இந்தியா
12-மார்-202020:27:25 IST Report Abuse
SIVA G  india இந்த காமுகர்களிடம் பேட்டி எடுக்ககூடாது.உறுபடாத இவர்களின் தூக்குக்கு பிறகு TRPகாகவோ,ஆண்ட கட்சிகாகவோ எதையாவது செய்து புது பிரச்சனைகளை உருவாக்குவார்கள். அதற்கு முன் இவர்கள் இந்த காமுகர்களுடைய குற்ற பின்னனிகளை பற்றியும், இவர்களுக்காக மறைமுகமாக நிதி உதவி செய்தவர்களை பற்றி வெளியிடலாமே.இதே போல காமுகர்கள் உடனுக்குடன் தண்டனை பெற்ற போது, இவர்களை யாரோ காப்பாற்ற துடிப்பது ஏன் என இந்த ஊடகங்கள் ஆராய்ந்து கருத்து வெளியிடலாமே.பல நேரங்களில் பலவித சமூக குற்ற பின்னனி உள்ளவர்களின் முகத்தை காட்ட வைக்க செய்யலாமே இந்த ஊடகங்கள்.
Rate this:
Cancel
12-மார்-202018:55:21 IST Report Abuse
நக்கல் இந்திய சிறைகளில் இருக்கும் மற்ற பிக்பாக்கெட், திருடன், கொலை செய்தவன் எல்லாம் இவர்களை பார்த்து பொறாமை படும் அளவுக்கு இவர்களுக்கு மரியாதை கிடைக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது...
Rate this:
Cancel
PRAVEEN - Bangalore,இந்தியா
12-மார்-202018:32:20 IST Report Abuse
PRAVEEN இது ஊடகப் பிரிவு சுயமாக எடுத்த முடிவல்ல . இதன் பின்னணியில் யாரோ இருக்கவேண்டும் . தூக்கை தாமதப்படுத்த எடுக்கப்பட்ட திட்டமிட்ட சதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X