அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பா.ஜ., தலைவராக எல்.முருகன் நியமனம்

Updated : மார் 13, 2020 | Added : மார் 11, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
தமிழக, பா.ஜ., தலைவராக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக, தமிழக, பா.ஜ., தலைவர் பதவி காலியாக உள்ளது. அதைக் கைப்பற்ற, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், ஏ.பி.முருகானந்தம், கே.டி.ராகவன், என, 10க்கும் மேற்பட்டோர், மத்தியில், கடும் போட்டி நிலவியது. நடிகர் ரஜினி, கட்சி துவக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
BJP,LMurugan,TamilNadu,TN_BJP,பாஜ,முருகன்

தமிழக, பா.ஜ., தலைவராக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக, தமிழக, பா.ஜ., தலைவர் பதவி காலியாக உள்ளது. அதைக் கைப்பற்ற, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், ஏ.பி.முருகானந்தம், கே.டி.ராகவன், என, 10க்கும் மேற்பட்டோர், மத்தியில், கடும் போட்டி நிலவியது.

நடிகர் ரஜினி, கட்சி துவக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., விரும்புகிறது. எனவே, பிரபல தலைவர்களை தவிர்த்து, ரஜினியுடன் பேசுவதற்கு ஏற்ற வகையிலான ஒருவரை, தலைமை பொறுப்பில் ஈடுபடுத்த, ஆலோசித்தது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவராக, முருகன் என்பவர் உள்ளார்.

இவரை தலைவராக நியமிக்க, தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் ஆகியோர் பரிந்துரை செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.இவர்களின் பரிந்துரையை, தலைமை ஏற்று, நேற்று முருகன், பா.ஜ., மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


யார் இந்த எல்.முருகன்?

தமிழக, பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, எல்.முருகன், 45, தற்போது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக உள்ளார். முருகனின் சொந்த ஊர், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம். இவர், தேவேந்திர குலவேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். இவர், முதுநிலை சட்டப்படிப்பு படித்துள்ளார். மனித உரிமைகள் சட்டத்தில், பி.எச்.டி., பெற்றுள்ளார். 15 ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-மார்-202011:10:19 IST Report Abuse
Malick Raja எல்லாம் சரி .ஒட்டு யார் போடுவார்கள் என்பதுக்குத்தான் விடை இதுவரை வரவே இல்லை . ஒவ்வொரு தேர்தலின் முன்பும் ஒரே பில்ட் அப் . நாங்கள் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சியமைக்கமுடியாது இந்த டயலாக் தமிழிசை .. இப்போ இவர் அடுத்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இவரது கட்சினர் வருவார்களாம் அது எப்படி என்று சொல்லவில்லை போகட்டும் பிஜேபி தமிழகத்தில் வராமல் இருப்பதே நல்லது வந்தால் மத்தியஆட்சி மறுபடியும் கிடைக்காது
Rate this:
Cancel
முனுசாமி நாடார், வெங்கல் Master stroke by BJP. பஜக தவிர வேறு எந்த கட்சியிலும் இது சாத்தியமில்லை. முக்கியமாக திருட்டு முன்னேற்ற கழகத்துக்கு வச்சாங்க ஆப்பு.
Rate this:
M.Selvam - Chennai/India,இந்தியா
13-மார்-202014:13:55 IST Report Abuse
M.Selvamசரி சரி தனித்து நின்று நோட்டாவையும் நாம் தமிழர் கட்சி போன்றவர்களையும் விட அதிக வாக்கு வாங்கி வாகை சூட வாழ்த்துக்கள் .....
Rate this:
Cancel
13-மார்-202000:00:22 IST Report Abuse
Thirumurugan சபாஷ், சரியான தேர்வு. Well done BJP.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X