கலவரத்தில் ஈடுபட்ட ஒருவர் கூட தப்ப முடியாது; லோக்சபாவில் அமித் ஷா ஆவேசம்

Updated : மார் 13, 2020 | Added : மார் 12, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
AmitShah,DelhiViolence,LokSabha,அமித்ஷா,டில்லிவன்முறை,லோக்சபா,bjp,பாஜ

புதுடில்லி : ''டில்லி கலவரத்தில் ஈடுபட்ட ஒருவர் கூட தப்ப முடியாது. அவர்கள், எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், ஜாதி, மத பாகுபாடின்றி, நடவடிக்கை பாயும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, லோக்சபாவில் நேற்று தெரிவித்தார்.

டில்லி கலவரம் குறித்து, லோக்சபாவில் நேற்று விவாதிக்கப்பட்டது.அப்போது, லோக்சபாவின் காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது:'ரோம் நகரம் தீயில் எரியும் போது, நீரோ மன்னன், வயலின் இசைத்துக் கொண்டிருந்தான்' என்பதை போல, டில்லி நகரமே கலவரத்தால் எரிந்து கொண்டிருந்தபோது, பிரதமர், நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர், டிரம்புடன் ஆமதாபாதை வலம் வந்து கொண்டிருந்தார்.டில்லி போலீசார், திறமையானவர்கள் எனில், இந்த கலவரம், மூன்று நாட்களுக்கு தொடர்ந்தது ஏன் என்பதை, உள்துறை அமைச்சர், அமித் ஷா தெளிவுபடுத்த வேண்டும்.

கலவரத்தின் முடிவில், ஹிந்துக்கள் வென்றுவிட்டதாக சிலரும், முஸ்லிம்கள் வெற்றி பெற்றதாக சிலரும் கூறுகின்றனர். இறுதியில், மனித நேயம் தோற்கடிக்கப்பட்டது தான் நிஜம்.தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கலவரம் நடந்த பகுதிக்கு சென்ற பின், நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக, மத்திய அரசு அறிவித்தது.உள்துறை அமைச்சருக்கு பதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எதற்காக கலவரம் நடந்த இடத்திற்கு சென்றார்.உள்துறை அமைச்சர் மீது, பிரதமர் நம்பிக்கை இழந்துவிட்டாரா?

இந்த விவகாரத்தில், அலட்சியமாக செயல்பட்ட உள்துறை அமைச்சர், அமித் ஷா பதவி விலக வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இதையடுத்து, அமித் ஷா பதவி விலக கோரி, எதிர்க்கட்சி தலைவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதற்கு, பா.ஜ., தலைவர்கள், பதில் அளிக்கையில், டில்லி கலவரம், ஏற்கனவே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாகவும், கற்களும், 'பெட்ரோல்' குண்டுகளும், பல இடங்களில் குவிக்கப்பட்டு இருந்ததற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர். எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:டில்லி கலவரத்தை கட்டுப்படுத்த, டில்லி போலீசார் திறம்பட செயலாற்றினர்.

இதுவரை, கலவரத்தில் ஈடுபட்ட 2,647 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நாசவேலையில் ஈடுபட்ட ஒருவர் கூட தப்ப முடியாது. அவர்கள், எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஜாதி, மத பாகுபாடின்றி, கடுமையான நடவடிக்கை பாயும். என்னுடைய வேண்டுகோளை ஏற்று, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், கலவர இடத்துக்கு நேரில் சென்றார்.ஹோலி பண்டிகை நேரத்தில், மத ரீதியிலான பிரச்னைகள் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், டில்லி கலவரம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANITHAN -  ( Posted via: Dinamalar Android App )
12-மார்-202019:12:10 IST Report Abuse
MANITHAN கைது செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கு?
Rate this:
Cancel
Rahim Gani - Karaikudi,இந்தியா
12-மார்-202017:58:40 IST Report Abuse
Rahim Gani அவர்கள், எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும்//////கபில் மிஸ்ரா ,மற்றும் அனுராக் தாக்கூர் மீது மீது வழக்கு பதிய சொன்ன நீதிபதியை நள்ளிரவில் டிரான்ஸபெர் செய்தது தான் இந்த கடுமையான நடவடிக்கையா ???????
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-மார்-202017:44:04 IST Report Abuse
Ramesh R அப்ப நீயும் மாட்டிக்குவே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X