சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கொரோனா'வுக்கு மருந்து கண்டுபிடித்த எம்.எல்.ஏ.,

Added : மார் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'கொரோனா'வுக்கு மருந்து  கண்டுபிடித்த எம்.எல்.ஏ.,

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், சர்வதேச மகளிர் தின விழா, தனியார் திருமண மண்டபத்தில், இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. எலியும், பூனையுமாக விளங்கும், கவர்னர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் பங்கேற்றனர்.

விழாவில், காங்., - எம்.எல்.ஏ., ஜான்குமார் பேசும் போது, 'பெண்கள் நாட்டின் துாண்கள். குடும்பத்தை பெண்களே கவனித்து கொள்கின்றனர். உலகத்தையே, 'கொரோனா' வைரஸ் மிரட்டி வருகிறது. கொடுக்காப்புளி சாப்பிட்டால், கொரோனா நமக்கு வராது' என்றார்.

கூட்டத்தில் இருந்த பெண்கள், 'இந்த, எம்.எல்.ஏ., எப்போ, சித்த வைத்தியம் படித்தார் தெரியலையே; எந்த, 'லேப்'ல வச்சு பரிசோதிச்சாரு... உலக நாடுகள் எல்லாம், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க போராடும் நிலையில், இவர் அற்புதமா மருந்து சொல்லி விட்டாரே...' என, கிண்டல் அடித்தனர். அங்கிருந்த சிலரும், 'கடகட'வென சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-மார்-202004:28:38 IST Report Abuse
J.V. Iyer கொடுக்காப்புளி சாப்பிட்டால், கொரோனா நமக்கு வராது' - ஆஹா.. வந்தூட்டார்யா.. கொத்து பரோட்டா சாப்பிடாமல் இருந்தாலும் கொரோனா வராது. கொத்தவரங்காய் சாப்பிட்டாலும், சாப்பிடாமல் இருந்தாலும் கொரோனா வராது. அப்புறம் கொத்துக்கடலை.. கோவைக்காய்.. கொத்தமங்கலத்தில் உள்ளவர்களுக்கும், கோயம்புத்தூரில் உள்ளவர்களுக்கும் கொரோனா வராது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X