பொது செய்தி

இந்தியா

கொரோனா அச்சம் - பங்குச்சந்தைகள் 12 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி

Updated : மார் 12, 2020 | Added : மார் 12, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
Sensex, Nifty, BSE, NSE, Sharemarket, Stockmarket,

மும்பை : உலகளவில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், பங்குச்சந்தைகளை நிலை குலைய செய்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுக்க பல நாடுகளில் பரவி வருகிறது. 4000 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் பலியாகினர். இதன் காரணமாக உலகளவில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் உலகளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நேற்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாகவும், ரூபாயின் மதிப்பு 82 பைசா சரிந்ததாலும், பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்வதாலும், கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் வீழ்ச்சி கண்டதாலும் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை கடந்த சில வாரங்களாகவே சந்தித்து வருகின்றன. வாரத்தின் இரண்டு நாட்கள் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்து வருகிறது.


latest tamil newsஇன்றைய (மார்ச் 12) வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1821 புள்ளிகள் சரிந்து 34,044.86ஆகவும், நிப்டி 565.70 புள்ளிகள் சரிந்து 9,892.70 ஆகவும் வர்த்தகமாகின. பகல் 02:50 மணிநிலவரப்படி சென்செக்ஸ் 3014.76 புள்ளிகள் சரிந்து 32,682.64 ஆகவும், நிப்டி 879.05 புள்ளிகள் சரிந்து 9,579.35 ஆகவும் வர்த்தகமாகின. இதனால் 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
12-மார்-202018:37:49 IST Report Abuse
Mayavan Mayavan அதிக ரிஸ்க் அதிக லாபம். பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் இதை தெரிந்து தான் செய்கிறார்கள். பங்கு சந்தையின் தற்போதய வீஷ்ச்சி முதல் தடவை அல்ல. எந்த ஒரு முதலீட்டார்களும் தங்களுடைய முதல் முதலீட்டை மிகவும் பத்திரமான பாதுகாப்பான முதலீடுகளிலேயே இன்வெஸ்ட் செய்வார்கள். உபரி சேமிப்பை மட்டுமே ரிஸ்கி முதலீடுகளில் இன்வெஸ்ட் செய்வர். பேராசை பெரு நஷ்டம். பங்குகளில் முதலீடு செய்வதை ஒரு கேம்பிளிங் போன்று செய்தால் அதற்கு உரிய பலன் இப்படித்தான் இருக்கும்.
Rate this:
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
12-மார்-202017:33:01 IST Report Abuse
Asagh busagh சர்வதேச மாற்று தேசிய பங்கு சந்தை கிட்ட தட்ட 100 வருஷமா ஏற்ற இறக்கத்துல தான் போகிட்டுருக்கு. It’s all a part of cyclical markets. ஆனா முட்டாள் தனமா மோடி தான் காரணம் அம்பானியும், ஆதானியும் தான் கோலிக்குறாங்கனு நம்ம நாட்டுல மட்டும் தான் உளறுவானுக.
Rate this:
Cancel
12-மார்-202017:06:56 IST Report Abuse
ஆப்பு பங்குச் சந்தையில் ஷார்ட் செஞ்சவன் கோடி கோடியா சம்பாரிச்சுட்டான். வாங்கிப் போட்டவய்ங்கதான் நஷ்டப் படறாங்க.
Rate this:
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
12-மார்-202018:27:56 IST Report Abuse
Ab Cdஇந்திய பொருளாதாரம் உயரும் என்று நம்பியவன் நஷ்டம் அடைந்தான் .... நாசமாய் போவும் என நம்பியவன் கோடி கோடியா சம்பாரிச்சுட்டான் என்று மக்களுக்கு புரியும்படி சொல்லுங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X